26-07-2024, 03:26 PM
#கனவே_நிஜமாகு
தொடர்கதை 15
ரதிமீனா மாமனை காதலுடன் பார்க்க
தம்பி சிவனேசா
யாரை அழைக்கறிங்க அக்கா
உன்னை தானே உன் பேரே சிவனேசன் அப்பா குற்றாலீஸ்வரர் பக்தர் என்பதால் சிவனேசன் னுதானே பேரை வைத்தார்
ஆமா அக்கா மறந்தே போனேன்
இடையில் வந்த வாழ்வால்
தம்பி காணமல் போன அன்று என்ன நடந்தது
சொல்றேன் அக்கா
நானும் அப்பா அம்மாவுடன் குற்றாலம் சென்று காரில் திரும்பும் வழியில் லாரியை ஏத்திட்டார் நான் மட்டும் தூக்கி வீசபட்டேன்
அப்பா அம்மா காரிலேயே செத்துட்டாங்க
ஆமாம் தம்பி சோகமான ஆக்சிடென்ட் எந்த பாவியோ இப்படி செய்துட்டானே ஆளே தெரியல
அக்கா அந்த ஆள் யார்னும் தெரியும் அதுவும் திட்டமிட்டு குடும்பம் மொத்ததையும் அழிக்க ஆசைபட்டாங்க
யாருப்பா அது
வேற யாரு
எங்க வீட்டில வேலை செய்த மஞ்சுளா வும் அவரோட புருசனும் தான் அக்கா
இதென்ன ப்பா திட்டமிட்ட கொலையா
ஆமாம் அக்கா
நான்மட்டும் உயிரோட தப்பியதை மஞ்சுளா புருசன் பார்த்துட்டான்
என்னையும் துரத்திட்டு ஓடிவர அந்தவழியாக வந்த பஸ் பின்பக்க ஏணியில் தொத்திக்கிட்டு பஸ்மேலே ஏறிட்டேன்
அப்போ பஸ் எந்த ஊரை அடைந்தது பா
பாபநாசம் ஊர்ல இறங்கியது அக்கா
அங்கேயும் தேடி வந்துட்டான் மஞ்சுளா புருசன்
அப்புறம் என்ன நடந்தது பா
பாபநாசம் காட்டை நோக்கி ஓடினேன் விடாமல் துரத்திட்டு தான் வந்தான்
ஆனா காட்டிலேயே செத்து போயிட்டான்
எப்படிப்பா எப்படி காட்டு மிருகம் ஏதாச்சும் தாக்கியதா
அதெல்லாம் இல்லைக்கா
அவன் என்னை துரத்துவது தெரியாம காட்டில் வேட்டையாட ஏதோ விலங்கை துரத்தி ஓடுவதாக நினைத்து வனதுறை அதிகாரி துப்பாக்கி யால் சுட்டதால் சாய்ஞ்சிட்டான்
அப்போ பிறகு ஊருக்கே திரும்பி இருக்கலாமே
அக்கா ஊரே மறந்துவிட்டது அப்போது இருந்த பயத்தால்
வனத்துறை அதிகாரி செத்தவனை பார்க்க தொலைவே சிறுவன் பயத்தால் நடுங்குவதை பார்த்து ஆறுதல் படுத்தி தன்னோடு அழைத்து போனார் அப்பா அம்மா இறந்து போனதால் அங்கேயே தங்கிட்டேன் அவரு வைத்த பெயர் தான் முனியப்பன் இப்போ என் பெயர் உங்களால் நினைவுக்கு வந்துவிட்டது அக்கா
சிவனேசன் சொல்லி முடித்தான்
சிவனேசா இவ்வளவு நடந்து இருக்கா என்னமா நடித்து ரதிமீனா அம்மாவை ஏமாற்றி கூடவே வந்து ஒட்டிக்கொண்டாள் இப்ப அவ எங்கே
அம்மா அவ இன்று காலை தான் மாமாவுக்கு பயந்து ஓடிவிட்டாள் ரதிமீனா நடந்த அத்தனையும் சொல்லி முடித்தாள்
படுபாவி இவ்வளவு தந்திரக்காரியா
கடவுள் சும்மா விடமாட்டார்
அக்கா கடவுளுக்கே தலைய பிச்சிக்கிற வேலை இருக்கு
அப்பா அம்மாவை கொன்ற இவளோட ஒட்டுமொத்த குடும்பமே சென்னை பிளட்பாரத்தில் பிச்சை எடுத்து வாழும் காலம் தொடுவானம் தூரமில்லை
அக்கா டாக்டர்கள் மீட்டிங் இருக்கு போகலாமா
வா போகலாம் தம்பி
மீட்டிங் ஹால்
மருத்துவமனை டாக்டர் நர்ஸ் முக்கிய பணியாளர்கள் அமர்ந்திருக்க
மேடையில் ரதிமீனா பானுமதி சிவனேசன் அமர்ந்திருக்க
கலையரசி தான் அறிமுகம் செய்ய
ஒலிவாங்கி முன் நின்றாள்
டாக்டர் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் வணக்கம்
இன்றுவரை
மருத்துவமனையை தன் கட்டுபாட்டில் வைத்திருந்த மஞ்சுளா மற்றும் காசாளர் சில பணியாளர்கள் செக்யூரிட்டிகள் மருத்துவமனை டிரஸ்டில் இருந்து நிரந்தர மாக நீக்கபடுகிறார்கள் காரணம் மருத்துவமனை வங்கிகணக்கில் தில்லுமுல்லு செய்து பணத்தை கையாடல் செய்த குற்றத்துக்கா
ஆகவே மேற்படி நபர்களுடன் மருத்துவமனை பணியாளர்கள் எவ்வித தொடர்பும் கொள்ள வேண்டாம்
கூட்டத்தில் இருந்த பலர் ஆதரவாக கைதட்டினார்கள்
அம்மா எப்பவோ நீக்கி இருக்க வேண்டும் அந்த மஞ்சுளா நோயாளி களிடமும் பணியாளர்களிடமும் கருணையே இன்றி நடந்து கொண்டுள்ளார்
உண்மை தான் சுரேஷ் டாக்டர் இந்த நிலை மாற போகிறது
இந்த பிரமண்ட மருத்துவமனை மற்றும் டிரான்ஸ்போர்ட் அடுக்குமாடி குடியிருப்புகள் திருமண மண்டபங்கள் அனைத்துக்கும் சிஏஓ
இந்த சிவனேசன் தம்பி தான்
இவர் வேறு யாருமல்ல
ரதிமீனா தாய்மாமா மகன் பானுமதி சுரேந்தருக்கு அப்பா
ரதிமீனா வின் கணவர்
கூட்டத்தில் வியப்பு ரதிமீனா கணவரை முதன்முறையாக பார்த்து வியந்தார்கள் இவ்வளவு சொத்துக்கு சொந்தகாரர் சாதாரண மனிதராக எளிமையான ஆடையில் இருப்பதை கண்டே வியப்பு
பணியாளர்கள் அனைவரின் கவனத்திற்கு
சிவனேசன் தம்பி உங்களுடன் உரையாற்றுகிறார் வாடா தம்பி
நன்றி அக்கா
பணியாளர்கள் அனைவருக்கும் நெஞ்சினிக்கும் வணக்கங்கள்
மஞ்சுளா என்பவரால் கடந்த கசப்பான சம்பவங்கள் மறந்துவிட்டு
புதியன செய்வோம்
மருத்துவ பணி மக்கள் உயிரை காக்கும்பணி இதில் கருணை குணமே முக்கியம் ஏழை பணக்காரன் பகுபாடு பார்க்க வேண்டாம் முடியாத ஏழைகளுக்கு அரசு காப்பீடு மூலம் இலவசமாகவே பாருங்கள்
மற்றபடி பணியாளர்கள் அவசிய தேவைக்கு வெளியே கடன் பெற வேண்டாம் ரதிமீனா டிரஸ்டில் என்ன தேவைக்கு வேண்டிய அளவு வட்டியில்லா கடனாகவும் பெறலாம்
கீழ்நிலை பணியாளர்களுக்கு தாங்களின் குழந்தைகள் மேல் படிப்பு படிக்கும்வரை ரதிமீனா டிரஸ்ட் அனைத்து பண உதவியும் செய்யும்
மேலும் பல சலுகைகள் சம்பளம் உயர்வு போன்றவை பானுமதி மருத்துவமனை வரவு செலவை ஆய்வு செய்து அறிக்கை தந்தபிறகு முடிவெடுக்கிறோம்
சந்தோசம் தானே
கூட்டத்தில் பலமான கைதட்டல்
பணியாளர்கள் அனைவருக்கும் வேண்டுகோள்
தற்போது ஒரு மணி உணவு நேரம்
அனைவருக்கும் உணவு வரவழைக்கபட்டுள்ளது
உணவு அறையில் தாங்களுக்கு பிடித்ததை சாப்பிடுங்க
சந்தோசமாக
சிவனேசன் பேச்சை முடித்தான்
தொடரும்