26-07-2024, 03:23 PM
#கனவே_நிஜமாகு
தொடர்கதை 14
ரதிமீனா மாமனின் மடியில் சாய்ந்து கொண்டு காதலாய் மாமாவை பார்த்தாள்
என்ன மீனா எப்படி என்மேல் காதல்
முதலில் ஏதோ சும்மா கணவராக நடிக்க தான் உங்களை முதலில் அழைத்தேன்
பிறகு
நீங்க தாய்மாமா மகன் என அம்மா சொன்னபோது தான் கண்டதும் காதல் கொண்டேன்
கண்டதும் காதலா
அத்தைமக. ரத்தினமே
அழைக்குதடி கண்ணிரண்டும்
உங்களுக்கு தான் பாட தெரியுமா
எனக்கும் கவிதை பாட தெரியும் ல
எங்கே பாடு நானும் ஆடறேன்
மன்றம் வந்த தென்றலிலே
மாமன் முகம் கண்டிடவே
சந்தன மேனி யொன்று
சாய்க்குமடா உன் மனசை
மந்திரக் கண் இரண்டும்
மயங்கிட மாயம் செய்ய
சந்திர தேவி என்னில்
சரசங்கள் பயில வாவா
இந்திர லோகம் சென்று
இனித்திடும் காதல் கொண்டு
தந்திரக் காமம் தனை
தள்ளியே போவோம் வாவா
என்னிலே தோன்றும் மோகம்
ஏங்கிடும் தேகம் தொட்டு
மாமனில் வந்த தென்றல்,
மூட்டுதே அனலை என்னுள்!
தந்தன பாடும் நெஞ்சம்
தசையிடை ராகம் மீட்ட
நிலாநிகர் அழகாம் என்பால்
நீந்தியே களிக்க வாவா
பந்தினை ஒத்த என்னை
பக்கெனப் பிடித்த உன்பால்
மந்தியின் சேட்டை போலே,
மாதுளை இதழ்கள் தீண்டும்
முந்திரிப் பழங்கள் கன்னம்
முன்பனி முத்தம் அள்ள
சந்தமாய் கட்டில் கீதம்
சிந்து ராகமே பாடும்
கொடியிடை அழகாம் என்மேல்
கொஞ்சிடும் அத்தான் உன்னால் ,
சந்தன மேனி உன்னை
. சாய்த்திடும் தேன்நிலவு கூட்டில்
சபாஷ் மீனா
தன்னை மறந்து மாமனுடன் முத்தமிட்டு சரசமாடி பாடிய ரதிமீனா திடுகிட்டாள்
அறை வாசலில்
முதுபெரும் டாக்டர் ரும் மூளை அறுவை சிக்கிச்சை நிபுணருமான
டாக்டர் கலையரசி முறைப்போடு நின்று கொண்டிருந்தாள்
என்ன மீனா இதென்ன கோலம் வெளியே நரேஷ் உன்னை பற்றி தப்பாக சொல்லி யாரோ ஒருத்தரோடு கூத்தடிப்பதாக அவதூறு பரப்புகிறான்
நான் தான் அவனிடம்
ரதிமீனா அப்படிப்பட்டவ கிடையாது எச்சரிக்கை விட்டேன் மீறி மறுபடி பேசினால் வேலையை விட்டு தூக்க வேண்டிவரும் என எச்சரிக்கை விட்டுள்ளேன்
ஆனா இங்குவந்து பார்த்தா
அவன் சொன்னது மாதிரி இருக்கே
அம்மா அப்படி இல்லை தப்பா ஏதும் இல்லை மா
ரதிமீனா படபடத்தாள்
இதையெல்லாம் முனியப்பன் கண்டு
மீனா என்ன இது நீ என் மனைவி இதுல பயப்பட என்ன இருக்கு
கலையரசி கேட்டாள்
தம்பி ரதிமீனா உன் மனைவியா
இவ்வளவு காலம் தெரியாதே நானும் ரதிமீனா அம்மாவின் பள்ளிகால தோழி தான் ஊரும் தென்காசி புளியறை தான்
அக்கா அது வேறுகதை நானும் புளியறை தான்
அப்போ அந்த ஊர்ல யாரோட மகன்
பிரமனந்தம் பாலகிருஷ்ணன் மகன் அக்கா நான்
என்னாது பாலகிருஷ்ணன் மகனா அப்போ ரதிமீனா அம்மாவின் அண்ணா மகன் தானே
ஆமா அக்கா
அடதம்பி அப்போ சின்னவனான நீ எங்கே போனாய் நானும் இவளோட அம்மாவும் உன்னை தேடி அலைந்து தோத்துவிட்டோம்
ஆமா இவளை எப்படி தெரியும்
அதை அப்புறமா சொல்றேன் அக்கா
நிஜமாகவே ரதிமீனா என்மனைவி தான் தப்பொன்றும் இல்லைகா
அட போடா எவனோ மானங்கெட்ட வன் உளறிட்டு போறான்
பாலகிருஷ்ணன் ஐயா லேசுபட்டவர் இல்லை
சொல்ல போனா ரதிமீனாவின் அம்மா தன்னுடன் படித்த சாதாரண ஏழை குடும்பத்தை சேர்ந்தவனை காதலித்து அண்ணனுக்கு பயந்து ஓடி
போனாள்
ஆனா பாலகிருஷ்ணன் தன்னோட உயிர் தங்கையின் அறியாமை கண்டு தேடி பிடித்து வீட்டுக்கே வரவழைத்து முறைப்படி திருமணம் செய்ய வைத்து சொத்தில் பாதியை தங்கைக்கும் தந்து இப்பவும் இருக்கும் பழைய கால பிரமண்ட பங்களாவும் கட்டி தந்து குடி வைத்தவர் பாலகிருஷ்ணன் ஐயா தான்
எனக்கு இன்னொரு உதவியும் செய்திருக்கிறார்
என்ன உதவிக்கா
ரதிமீனா அம்மாவின் தோழியான என் கல்யாண செலவை கூட என் அப்பாவால் செய்ய இயலாத நிலையை கண்டு முழுசெலவையும் ஏற்று கல்யாண சீரும் தந்து வாழ வைத்தவர் தான் பாலகிருஷ்ணன் ஐயா
சொல்லி முடித்தாள்
முனியப்பனுக்கே திகைப்பு ரதிமீனா வுக்கும் தான்
அக்கா எல்லாம் நல்லதுக்கே
ஏய் ரதிமீனா நகர்ந்து நில்லு
ஏன் மாமா
அக்கா பார்க்குதில்ல
பார்த்தா என்ன
பாலகிருஷ்ணன் ஐயா நேரில் இருப்பது போல பார்க்கிறேன் சொல்ல போனா உன்னோட அம்மாவும் ரதிமீனா சாயல்தான்
முனியப்பன் ரதிமீனா முகத்தில் சந்தோசம்
இருவரும் பார்த்து கொண்டனர்
காதல் ஒரு கவிதை போலும்
தொடரும்