26-07-2024, 03:22 PM
#கனவே_நிஜமாகு
தொடர்கதை 13
பானுமதி
அப்பா இவளை விட்டாலும் பரவயில்லை அந்த கூனியை
விடவே கூடாது அப்பா
அவ கிடக்கிறா என் கையிலிருந்து தப்பியவ இன்னோருவர் கையில் வசமாக சிக்க போகிறாள்
அவ கிடக்கட்டும்
சரிப்பா
மருத்துவமனை நம்ம கட்டுபாட்டில் வைக்கனுமே
செய்யலாம் ரதிமீனா
பில் மற்றும் பணம் செலுத்தும் கவுண்டரில் நம்பிக்கையான இருவரை வைக்கனும்
அதுவரை பானுமதி யே பார்க்கட்டும்
பானுமதி சனி ஞாயிறு கல்லூரி லீவு அதனால புதிதாக ஆள் நியமிக்கும் வரை நீயே பாரு பணம் பறிமாற்றத்தோடு
மருத்துவமனை வரவு செலவுகள் மருந்து கம்பெனி க்கு தரவேண்டிய கணக்குகளையும் பணியாளர்கள் சம்பளம் போன்றவை ஆய்வு செய் மா
சரிப்பா
ரதிமீனா டாக்டர்கள் மீட்டிங் ஏற்பாடு பன்ன இயலுமா
மாமா டாக்டர்கள் செக்கப் டிரிப் முடிய 12 மணி க்கு முடியும்
12 லிருந்து ஒரு மணிக்குள் வைக்கலாமா
ஓகோ அப்படியே
இப்போ பொழுது போகனுமே
பொழுது போக்கவா மருத்துவமனை நானும் டாக்டராச்சே நோயாளி களை பார்க்க வேணாமா
பாருடா செல்லம்
பாருடாவா வாடா மச்சான்
எங்கே
என்னோட ரூம்க்கு தான்
அப்பசரி போலாமா கண்ணடிக்க
ஆசைய பாரு முறைத்தாள் ரதிமீனா
மாமா இது தான் என்னோட அறை
வாங்க
உள்ளே சென்ற முனியப்பன் பிரமித்தான் நவீன மருத்துவ கருவிகளுடன் அகன்ற எல்சிடி மானிடர் சொகுசு இருக்கை யப்பா பொண்டாட்டிக்கு வந்த சொகுசு பாரு வாய்விட்டு சொல்லிவிட
ரதிமீனா சிரித்தாள்
நீங்க உக்காரு ங்க இதோ வர்றேன் எங்கே போற பாத்ரூம் தான் நானும் வரட்டுமா மூஞ்ச பாரு சிரித்து கொண்டே பிரத்யேக பாத்ரூம் நோக்கி சென்றாள்
முனியப்பன் சேரில் சாய்ந்து அமர்ந்தான்
அறை கதவை திறந்து கொண்டு ஒருவர் உள்ளே நுழைய
முனியப்பன் பார்த்தான்
யார் நீங்க அறைகதவில் அனுமதி பெறாமல் உள்ளே நுழைகிறீர்கள்
கேள்வி கேட்டவரை பார்த்தான்
ரதிமீனா சீட்டில் யார் புதுசாக தன்னோட சீட்டில் அமர ரதிமீனா யாரையும் அனுமதிக்க மாட்டாளே அதுவும் தன்னோட பிரத்யேக அறைக்குள்
ஏய் நான் கேக்க வேண்டிய கேள்வி
என்னவள் அறைக்குள் உனக்கு என்ன வேலை
உன்னவளா ரதிமீனா உனக்கு என்ன வேணும்
அதெல்லாம் எதற்கு ரதிமீனா வுக்கு அடுத்தபடியாக நான் டாக்டர்
நீ யாரு
என்னாடா இது வம்பா போச்சு என்னோட பொண்டாட்டியை தன்னோட பொண்டாட்டினு சொல்றானே
தம்பி பொய் சொல்லாதே ரதிமீனா என்னோட மனைவி அவ தான் இங்கே உக்கார வைத்திருக்கா
யோவ் கிறுக்கு நீயென்ன கீழ்பாக்கம் தப்பிவந்த கேசா பேரழகி ரதிமீனா வுக்கு புருசனா டேய் முதலில் எழுந்திருடா
முடியாது முதலில் அறையை விட்டு வெளியேறு
எனக்கே உத்தரவு போடறியா
ஏய் கத்திக் கொண்டு தாக்கவர
நிறுத்துங்கள் ரதிமீனா பாத்ரூம் விட்டு வெளியே வந்து கத்தினாள்
மேடம் இந் த கிறுக்கன் தெரியாம உள்ளே வந்துட்டான் போல இருங்க நானே இழுத்து போய் வெளியே விடறேன்
போதும் நிறுத்து நானென்ன உன் பொண்டாட்டியா டாக்டர் நரேஷ்
நான் அப்படி சொல்லலையே
அப்போ எனக்கு காதுகேக்காதா
மேடம் யாரோ ரூம்ல அதுவும் கிராமத்தான் அதான் இழுத்தான்
என்னவளே என்னவளே முனியப்பன் பாட
ரதிமீனா முனியப்பன் தலையில் ஓங்கி குட்டினாள்
கிண்டலா மாமா உன்னவளை வேறொருத்தன் என்னவள் னு சொல்ல கோபமே வரலையா ஓங்கி அறைய வேண்டியது தானே
வேண்டாம் ரதிமீனா நீ தானே பேரழகி அதான் கண்டவன் எல்லாம் முன்னால மேடம் பின்னால என்னவள்னு உளறிட்டு போவான் எனக்கென்ன என்னவளை தொட்டால் தான் மின்னல் வேக அடி மலரும்
நரேஷ் டாக்டர் என்னோட மனைவி சொக்க தங்கம் என்னை தவீர யாரையும் மனசால நினைக்க மாட்டா என்னோட சொந்த அத்தைமக சரியா
இது மருத்துவமனை உயிர்காக்கும் பணி இது போன்ற வேண்டாத பிரச்சனை பன்ன வேண்டாம் டாக்டர் தான் என்றாலும் அறையில் அனுமதி பெற்றே வருக அரட்டையடித்தல் போன்ற செயல்களுக்கு அல்ல நீங்க போகலாம்
ரதிமீனா மாமா பேச்சால் உச்சி குளிர்ந்தாள்
நரேஷ் டாக்டர் வெளியேற
ரதிமீனா மாமா மடியில் உரிமையுடன் அமர்ந்தாள்
தொடரும்