26-07-2024, 06:13 AM
#கனவே_நிஜமாகு
தொடர்கதை 12
ஒருவழியாக மஞ்சுளா உறவுகூட்டம் ஓடிவிட
ரதிமீனா பெருமூச்சு விட்டாள்
ஒழிந்தது சனியன்
ஒழியலை ரதிமீனா கொஞ்சம் தாமதித்தாலும் சொத்து பத்திரம் தப்பிடுச்சி னாலும் மறுபடியும் உன் கணக்கில் இருந்து எளிதில் மாற்றிவிடுவா
எப்படி மாமா
இதெல்லாம் உன்னோட முட்டாள் தனம் பணபரிமாற்றத்தை மற்றவரிடம் கொடுத்ததாலே
இப்போ என்ன மாமா செய்யனும்
தலையை பீய்ச்சிக்கலாம் போல இருக்கு
தலைய பீய்ச்சிக்க வேண்டாம்
திருப்பதி போனா தலைமுடியை பீய்ச்சி போட்டு பட்டை நாமமும் போடுவாங்க
உதை வேணுமா மாமா
அதெல்லாம் வேண்டாம்
உடனே மருத்துவமனை போயாகனும்
இரு மாமா சேலை மாத்திட்டு வருகிறேன்
காதலிக்க நேரமில்லை கிளம்பு
என்னாது காதலிக்க நேரமில்லை ஆ
ஆங் காத்திருக்க நேரமில்லை
கையை பிடித்து காரை நோக்கி விரைந்தான்
அப்பா பானுமதி யும் கூப்பிட்டாள்
நீயும் வா பானு
பானுமதி காரை ஸ்டார்ட் செய்தாள்
மருத்துவமனை நோக்கி சீற விட்டாள்
பத்தே நிமிடத்தில் மருத்துவமனையை அடைந்தது
மூவரும் இறங்கி மருத்துவமனைக்குள் நுழைய
செக்யூரிட்டி இருவர் உள்ளே விடாமல் தடுக்க
ரதிமீனா கோபத்தின் உச்சிக்கே போனாள்
ஏய் யாரை பார்த்து உள்ளே விட தடுக்கிறாய்
யாரா இருந்தா எனக்கென்ன. மஞ்சுளா மேடம் மருத்துவமனையை வாங்கிட்டதா சொல்லி
உங்களை விடகூடாது உத்தரவு போட்டிருக்கிறார்
அப்பா இந்த கூனி இங்கேயா வதுட்டா
முனியப்பன் ஆமோதித்தான்
செக்யூரிட்டி எவளும் மருத்துவமனையை வாங்கலை என்னோடது தான் வழியை விடு
முடியாது செக்யூரிட்டி சொல்லி வாயை மூடவில்லை
திடும் என கன்னத்தில் இறங்கியது முனியப்பன் கரம்
எதிர்பாராத தாக்குதலால் பயந்து போனான்
என்னை அடிச்சே இல்ல போலீசை கூப்பிடறேன்
டேய் தேவையில்லை உன் போன்ற திருட்டு நாய்களை சிறையில் தள்ள போலீசே வந்திட்டு இருக்கு
நகருடா நாயே
தள்ளிவிட்டு உள்ளே நுழைந்தார்கள்
மருத்துவமனை பணம் செலுத்தும் கவுண்டரில்
மஞ்சுளா இருக்க கம்யூட்டர் ஆபரேட்டர் பெண் டிரஸ்ட் பணத்தை மாற்ற முயற்சி செய்து கொண்டிருந்தாள்
முடியவில்லை பழைய பாஸ்வேர்ட் மாற்றபட்டுள்ளதால்
முழித்தாள்
பணம் செலுத்தும் கேபின் வாசலில் கைதட்டல் கேட்டது
வாசலில் ரதிமீனா பானுமதி இன்னொருவர் கண்டு திகைத்தாள்
முனியப்பனை மருத்துவமனையில் எதிர் பார்க்காத மஞ்சுளா பயத்தால் முனியப்பனை வாசலில் தள்ளிவிட்டு தலைதெறிக்க மருத்துவமனையை விட்டே ஓடி போனாள்
ஆபரேட்டர் பெண் மஞ்சுளா பயந்து ஓடுவதை கண்டு வந்திருக்கும் நபர் போலீஸ் என நினைத்து பயந்தாள்
மஞ்சுளா வாசலை தாண்டி பயந்து ஓடுவதை கண்ட செக்யூரிட்டிகளும் வந்திருப்பது போலீஸ் தான் என அவர்களும் நழுவி ஓடி விட்டன
மாட்டிக் கொண்டது பணபறிமாற்ற ஆபரேட்டர் பெண் தான் பயத்தில் நடுங்கினாள்
பெண்ணின் முகபயத்தை கண்டு முனியப்பனுக்கு புரிந்து போனது
ஏய் ஒழுங்கா டிரஸ் பணம் பதினாலாயிர ம் கோடியை டிரஸ்ல தந்துவிடு
இல்லை உன் குடும்பம் முழுக்க சிறையில் போக நேரிடும்
ஐயோ அவ்வளவு பணத்தை நான் எடுக்கல
அப்போ அது எங்கே போச்சு
சார் மஞ்சுளா மேடம் தான் இங்குவரும் பணத்தை அவரோட கணக்கில் போட சொன்னார் அதற்காக இன்றுவரை இரண்டு கோடி தனியா தந்திருக்கார்
பார்ரா ஏதோ வறுமைல வாடுவதாக நாடகமாடி வேலைக்கு வந்து எனக்கே துரோகமா
ரதிமீனா மஞ்சுளா எங்கும் தப்ப முடியாது இந்தநேரம் வாசலில் போலீஸ் பிடியில் சிக்கி இருப்பா
இவளையும் பிடித்து தந்திடுவோம்
சார் சார் அப்படி செய்யாதிங்க அவங்க மிரட்டலுக்கு பயந்து தான் செய்தேன்
அவங்க தந்த ரெண்டு கோடி என் அக்கவுண்ட்ல இருக்கு இப்பவே டிரஸ்ட் கணக்கில் மாற்றிடறேன்
எப்படி மாற்றுவே
இருப்பது அந்த திருடி ஸ்கேனர் தானே
சார் மேடம் நெம்பர் சொல்ல சொல்லுங்க மாற்றிடறேன்
பானுமதி சொன்னாள்
சில நொடிகளில் மாறிவிட்டது
அப்பா இவளை போலீஸ் ல ஒப்படையுங்க
வேண்டாம் தப்பி போகட்டும்
நம்பிக்கை துரோகத்துக்கு சரியான தண்டனை தானாக கிடைத்துவிடும் நீ போகலாம் நிரந்தரமாக வேலையை விட்டே
தொடரும்