25-07-2024, 10:32 PM
(This post was last modified: 25-07-2024, 10:33 PM by krishkj. Edited 1 time in total. Edited 1 time in total.)
#கனவே_நிஜமாகு
தொடர்கதை 11
திகைத்து போன மஞ்சுளாவை பார்த்து
பானுமதி கைகொட்டி சிரித்தாள்
ஏன்மா இவ்வளவு கோடிகளை எப்படி அம்மாவை ஏமாற்றி அள்ள முடிந்தது
அதுவும் போதாதென்று இருக்கும் மிச்ச சொத்துக்கள் அனைத்தையும் ஏமாற்றி ஏப்பம் விட பார்த்தாயே
ஆனா எப்படி ஏமாந்தே பார்த்தியா
என்னையே ஏமாத்த முடிந்ததா
பின்னே எங்க வீட்டுல திருடியதை எங்க வீட்டு லாக்கர் ல வைச்சே பாரு அங்கே தான் ஏமாந்தது போனே
புரியலையே எப்படி ஏமாற முடியும்
பானுமதி கலகலவென சிரித்தாள்
அந்த லாக்கர் எங்க பரம்பரை சொத்தை பாதுகாக்கும் லாக்கர் எந்த திருடன் கையிலும் தராது
இதை அறியாத முட்டாள் நீ
லாக்கர் சாவி என்னிடம் இருக்க எப்படி திறக்க முடியும்
உன்கிட்ட இருப்பது பாட்டி வைத்திருந்த சாவி
இன்னொரு சாவி யார்கிட்ட இருந்தது தெரியுமா
யார்கிட்ட வீட்டில் யாரிடமும் இல்லையே
என் தாத்தாகிட்ட இருந்தது தான்
உன் தாத்தா உயிரோடு இருக்காரா
குற்றாலம் மலைல தள்ளிவிட்டும் எப்படி
என்னாது தாத்தாவை கொல்லுமளவு துணிந்துவிட்டீர்களா
அப்போ இருக்கட்டும்
அதே மலையில் உங்களை விரைவில் தள்ளுகிறோம் பார்
ஏய் வாயாடி சும்மா அளக்காதே சின்ன பொண்ணு உன்னால என் கூலிப்படை யை தாங்க முடியாது
போச்சுடி புறம்போக்கு கூலிப்படை க்கு கொட்டி கொடுக்க மூன்றாயிரம் போதுமா
அது எனக்கு தெரியும்
எப்படி பிரிட்ஜ் அட்டை பெட்டிலயா இல்லை மஞ்சப்பைல உள்ள தங்கத்தாலயா
இதெல்லாம் உனக்கு எப்படி
அதெல்லாம் எல்லாத்தையும் அள்ளியாச்சு
வங்கில போய் கொட்டியாச்சு
போதுமா
மஞ்சுளா அதிர்ந்தாள்
இதெல்லாம் திருடு இல்லையா
ஆமா என் வீட்டுலயே திருடி மறைச்சிட்டு எங்களுக்கு சொந்தத்தை நாங்க ஏன் திருடனும்
பாட்டி இவளை முதலில் கொன்னு போடுங்க வசந்தி ஆவேசமானாள்
ஏய் சோம்பேறி பொண்ணே தினசரி போதை சாக்லெட் தின்ன இரண்டு லட்சம் செலவழித்தே இப்போ அதே சாக்லெட் கிடைக்காம பைத்தியமா தான் நீ சுத்தப்போறே
இப்போ எங்கள என்ன பன்ன போறே
போலீசை அழைக்க போறேன்
ரதிமீனா தான் முன்வந்தாள்
அப்போ கூப்பிடு ஏரியா இன்பெக்டரே என்னோட கையில் தான்
முனியப்பன் வேடிக்கை பார்த்தது போதும் என எழுந்தான்
கூனியம்மா ஏரியா இன்பெக்டர் உன் கையில் என்றால்
ஐகோர்ட் தலைமை நீதிபதி என் கையில்
இதுல யாருக்கு அதிகாரம் தெரியுமா
கைபேசி எடுத்து தன்னோட தோழரான தலைமை நீதிபதி யுடன் நெருக்கமாக இருக்கும் படத்தை காட்டினான்
மஞ்சுளா வெலவெலத்து போனாள் பிரமனந்தம் பாலகிருஷ்ணன் மகனை சாதாரண மாக நினைத்ததே தவறென உணர்ந்தாள்
முனியப்பன் கர்ஜீத்தான் ஒழுங்கா கழுத்தில் கையில் இருக்கும் அனைத்தையும் இங்கே வையுங்கள் இல்லை பக்கத்தில் தடிமனான இரும்பு பைப்பை காட்டினான்
எல்லோருமே தயங்க
அடுத்த நொடி மஞ்சுளா மகனை கண்மூடித்தனமா க இரும்பு பைப்பால் தாக்க அலறல் சத்ததில் அனைவரும் கையில் காதில் கழுத்தில் இருக்கும் அனைத்தையும் தந்து விட்டார்கள்
அடுத்து பத்துநிமிடம் தான் நேரம் அதற்குள் வீட்டுவாசல் கேட்டுக்கு வெளியே இருக்கனும் இல்லை காலமெல்லாம் நடக்க இயலாமல் இரண்டு கால்நரம்பை டாக்டர் ரதிமீனா துண்டிக்க வேண்டிவரும்
விட்டால் போதுமென வாசலை நோக்கி ஓட்டம் பிடித்தன மஞ்சுளா உறவுக் கூட்டம்
தொடரும்