25-07-2024, 10:29 PM
#கனவே_நிஜமாகு
தொடர்கதை 10
பத்திரபதிவு அதிகாரி முடிக்க
மஞ்சுளா வை பார்த்தார்
பார்வையை புரிந்து
கைபேசி வாயிலாக இரண்டு கோடி டிரஸ்பர் பன்ன தட்ட
பேலன்ஸ் இல்லை பதில் வந்தது
மஞ்சுளா திகைத்தாள்
தவறாக இருக்குமோ
மறுபடியும் பேலன்ஸ் செக் செய்தாள் தாங்களின் அக்கவுண்ட் பேலன்ஸ்
3000 ரூபாய் உள்ளதா க காட்டின
ஒன்றும் புரியாமல் திகைத்தாள்
வங்கி அதிகாரியை தொடர்பு கொண்டாள்
என் கணக்கில் இருந்த பணமெல்லாம் எங்கே யார் எடுத்தது
மன்னிக்கவும் மேடம் உங்க பணம் எங்கும் போகவில்லை எந்த ரதிமீனா டிரஸ்ல இருந்து உங்க கணக்கில் போட்டீர்களோ அதே கணக்கில் சேர்துவிட்டீர்கள்
நானா அப்படி செய்யலியே
மன்னிக்கவும் வங்கி அதிகாரிகளோ பணியாளர்களோ தன்னிச்சை யாக மாற்ற முடியாது
உங்க பிளாக் கார்டு மூலமே மாற்றியுள்ளீர்கள்
அவ்வளவுதான்
என் கணக்கில் திரும்ப மாற்ற முடியாதா
முடியாது மேடம் ரதிமீனா டிரஸ்ல முறையீடுங்கள்
கைபேசி யை வைத்து விட்டார்
திகைப்புடன் ரதிமீனா வை பார்த்தாள்
ரதிமீனா நமுட்டு சிரிப்பை உதிர்த்தாள்
பத்திரபதிவு அதிகாரி சார் பதிவேற்றம் செய்துவிட்ட பத்திரத்தை அனைவருக்கும் அறிய படித்து காட்டுங்க
சொல்றேன்மா
பெருங்குடி யில் மஞ்சுளா வாக நான்வாங்கிய 150 கோடி மதிப்புள்ள அடுக்குமாடி கட்டிடத்தை ரதிமீனா பேருக்கே எழுதி தருகிறேன் சம்பந்தப்பட்ட கட்டிடம் வாங்க பணம் ரதிமீனா டிரஸ்ல இருந்து எடுத்ததால் மனபூர்வமாக ரதிமீனாவுக்கே முழு சம்மதத்துடன் எழுதி தரும் அசல் பத்திரம் அடுக்குமாடி உரிமை பாத்தியதை எல்லாமே ரதிமீனாவையே சேரும்
படித்து முடித்தார்
மஞ்சுளா மேலும் அதிர்ந்தாள்
என்ன சார் விளையாடறிங்களா
இவளோட சொத்தை என் பேருல மாற்ற தானே பதிவு பன்ன சொன்னேன்
அதுசரி நீங்க எழுதி வைத்த பத்திரமே நீங்க ரதிமீனா வுக்கு மாற்றும் பத்திரம் தான்
பானுமதி கையை தட்டினாள்
மஞ்சுளா வை சிரிப்போடு பார்த்தாள்
தொடரும்