22-07-2024, 07:44 AM
(This post was last modified: 22-07-2024, 07:49 AM by krishkj. Edited 1 time in total. Edited 1 time in total.)
#கனவே_நிஜமாகு
தொடர்கதை 8
மாலைப்பொழுது ரதிமீனா வீட்டுக்கு வர
முனியப்பன் மாமாவும் பானுமதி சுந்தரும் வீட்டில் அரட்டையடித்து இருப்பதை பார்த்தாள்
இங்கே என்ன நடக்குது
அதுவா மீனா சூதுபகடை தூது நாடகம் தெருகூத்து நடக்குது
கிண்டலா மாமா
ஆமாம்ல ஆமா ஏன் சீக்கரம் வந்துட்டே
அபரேஷன் முடிந்தது மாமா
அதுசரி வழக்கமா 9 க்கு தான் வருவே பானுமதி சொன்னா இப்போ
அதுவந்து
அம்மா அப்பா நினைப்பா
ஏய் குறும்பு சும்மா இருடி
அதானே பார்த்தேன்
அத்தமக ரத்தினமே
அடுக்குமல்லி பூச்சாரமே
ஓணான்மூக்கு மாமனுக்கு
ஓடிவந்த சித்திரமே
அப்பா தூள்பா
வீடே கலகலப்பாக மாறியது
நான் வீட்டுக்கு ஓடிவந்ததே வேறு
எங்க டிரஸ்ட் கணக்கில் பதினாலாயிரம் கோடி எப்படி வந்ததுனு தான்
பானுமதி யும் முனியப்பனும் நமுட்டு சிரிப்பை உதிர்த்தார்கள்
அம்மா சொல்றேன்
பானுமதி நடந்த அனைத்தையும் சொல்லி முடித்தாள்
ரதிமீனா வியப்பின் உச்சிக்கே சென்றாள்
நம்பிக்கை துரோகி எவ்வளவு ஏமாத்தி இருக்கா
மாமா அவ கண்டு பிடித்தா ஆபத்தாச்சே
மீனா சொல்வதை கேள்
அந்த கூனி தந்திரகாரி என்றாலும் படிபறிவு இல்லாதவள்
நம்மோட மொத்த சொத்தும் அவ பேருக்கு பத்திரம் எழுதி வைத்து உன்னை மிரட்டி கையெழுத்து வாங்க நாளை காலை வருவா பத்திர பதிவு அதிகாரியுடன்
இதை எப்படி தடுப்பது மாமா
அம்மா அதெல்லாம் தடுக்க வேண்டாம் பத்திர பதிவு அதிகாரி சொல்லுமிடத்தில் கையெழுத்து போட்டுடு
உனக்கென்ன கிறுக்கு பிடிச்சிடுச்சா
இல்லைமா நம்ம சொத்தை அபகரிக்கும் பத்திரம் கிழிச்சு சாம்பலாக்கியாச்சு
பிறகு எப்படி பத்திர பதிவு
அம்மா அந்த ஏமாத்துகாரி கிட்ட இருக்கும் அனைத்தையும் நமக்கே திருப்பியாச்சு ஒன்றை தவீர
என்னாது அது
உன் உழைப்பு பணத்தில் 150 கோடிக்கு வாங்கிய அடுக்குமாடி பில்டிங் தான் அவ பேர்ல இருக்கு அதை நமக்கே திருப்பிடதான் நாளை பத்திர பதிவு
அவ என்ன எளிதில் ஏமாந்துடுவாளா
இங்கே தான்மா அப்பாவின் தந்திர புத்தி
அவ வேறு வக்கிலை பார்த்து சொத்து பத்திரத்தை எழுதி வைத்திருக்கா
அந்த பத்திரத்தை பதிவு செய்ய லஞ்சம் கொடுத்து அதிகாரிகளை வீட்டுக்கே வரவழைப்பா
பதிவு அதிகாரிகள் முட்டாளா
அவர்களை முட்டாளாக்குவது என் பொறுப்பு ரதிமீனா
இப்போ எல்லோருமே சாப்பிட்டு தூங்குங்க
சாப்பிட்டு எனக்கும் வேலை இருக்கு
அதென்ன வேலைப்பா
அதெல்லாம் உனக்கு எதற்கு மா போய் தூங்கு
பானுமதி சுந்தர் நகர்ந்து போனார்கள்
தொடரும்...