22-07-2024, 07:41 AM
image posting
#கனவே_நிஜமாகு
தொடர்கதை 7
அப்பா நாங்க கல்லூரி போக வேண்டுமே
பானுமதி அப்பாவை பார்த்து கேட்டாள்
பானு நீயும் தம்பியும் ஓர் நாள் மட்டும் என்னோடு இருக்கிறிங்களா
சரிப்பா நீண்டகாலம் பிரிவு எங்களுக்கும் கல்லூரி போக மனமில்லை பா
பானு காரணமா தான் இருக்க சொல்றேன்
முதலில் மெயின் கதவை சாத்தி ஊள் தாழ் போட்டுட்டு வா
சரிப்பா பானு உடனே செய்தாள்
பானு மஞ்சுளா கூனி அறை எது
அதோ அந்த அறைதான் பா பூட்டி இருக்கே
முனியப்பன் இருவருடன் அறை வாசலில் போய் நின்றான் பூட்டின் தன்மையை ஆராய்ந்தான்
புன்னகையுடன் கதவை உதைக்க
பூட்டு உடைந்து திறந்து கொண்டது
உள்ளே சென்ற முனியப்பன் திகைத்தான்
ஆடம்பர கட்டில் விலை உயர்ந்த டெகரேசன் அறையே சொகுசு
அறையை நோட்டமிட்டான்
பானு அந்த பிரிட்ஜ் அட்டை பெட்டியை தூக்கிட்டு வாங்க
பானுவும் சுந்தரும் தொட்டு தூக்க போக அசைக்கவே முடியவில்லை
அப்பா தூக்கவே முடியல உள்ள என்ன இருக்கோ தெரியல பா
அப்போ அட்டைபெட்டியை பிரிச்சு பாருங்க
பானுமதி சிரமபட்டு ஒருவழியாக திறந்தாள்
உள்ளே பார்த்தவள் அதிர்ந்தாள்
அப்பா உள்ளே உள்ளே
என்னம்மா யாரையோ கொன்று உள்ளே வைச்சிருக்காளோ
இல்லைப்பா அட்டை பெட்டி முழுக்க ஐநூறு ரூபாய் கட்டுகள் தான் அடைச்சிருக்கு
பானு அது எனக்கு தெரியும் அதனால தான் திறக்க சொன்னேன்
அடுத்து அந்த பீரோவை திறக்கனும்
அப்பா அந்தபீரோ தாத்தா காலத்து பீரோ இதை தூக்க பத்து பேர் வேணும் சாவி இன்றி திறக்க முடியாதே
ஆனா மாற்றுசாவி என்னிடம் இருக்கே
பானுமதி வியந்தாள் எப்படிப்பா இப்படி
திருடன் மட்டுமில்ல வேற எந்த கொம்பனாலும் திறக்க முடியாதுனு தான் கூனி கிழவி வீட்டிலேயே கொள்ளையடித்து வீட்டு பீரோவிலேயே பதுக்கி இருக்கிறா
அப்படி என்னதான் பீரோவில் இருக்குப்பா
இந்த சாவி பானு நீயே திறந்து பாரு
பானுமதி திறந்தாள்
உள்ளே முதலில் கண்ணில் பட்டது வீட்டின் சொத்து மற்றும் பிரமண்ட மருத்துவமனை திருமண மண்டபம் பல பில்டிங் சொத்தின் மூல பத்திரங்கள் அடுக்கி கிடந்தன
அப்பா இதெல்லாம் நம்ம சொத்து இந்த கிழவியிடம் எப்படி
அதான்மா ஏமாந்த சோனகிரி உன் அம்மா முட்டாள் தனம்
நாளை காலை சொத்து முழுவதும் கூனி கிழவிக்கு மாற போகிறது
அப்பா அப்போ நாம் எல்லாரும்நடு தெருவா
அப்படி நடக்க விடுவேனா
அதையெல்லாம் அள்ளிடுமா
அதன் கீழே மஞ்சபை இருக்கு அதையும் எடுத்து திறந்து பார்
பானுமதி எடுத்து பைக்குள் பார்த்தாள்
விலை உயர்ந்த தங்க வைர நகைகள்
கிட்டதட்ட பத்து கிலோ இருக்கும்
பானுமதி க்கு கூனி கிழவியின் ஏமாற்று தந்திரம் புரிந்தது போனது மருத்துவமனை திருமண மண்டபம் மற்றும் பில்டிங் வருமானத்தை எல்லாம் தன் கணக்கில் போட்டு
பெரும் நஷ்டம் அடைந்ததாக அம்மாவை நம்ப வைத்ததை பானுமதி யால் ஜீரணிக்க முடியவில்லை
அப்பாவை பரிதாபமாக பார்த்தாள்
பானு அதையும் சொத்து பாத்திரங்களையும் அள்ளிக்கோ
அதோ ரகசிய அறையில் இருப்பதையும் பார்
ரகசிய அறையை திறந்தாள்
உள்ளே ஏடிஎம் கார்டு இருந்தது
அப்பா ஏடிஎம் கார்டு
அதையும் எடுத்துக்கம்மா
எல்லாத்தையும் எடுத்துட்டு வா நான் அட்டை பெட்டியை தூக்கிட்டு வருகிறேன்
முனியப்பன் அட்டை பெட்டியை தூக்கிகொண்டு பழங்கால வீடான பூஜையறையை நோக்கி நடந்தான்
பானுமதி யும் சுந்தரும் கூடவே சென்றார்கள்
பூஜையறை பிரமண்ட அறையாக இருந்தது
தினசரி ரதிமீனா பூஜை செய்ய தவறுவதில்லை என்பதை காட்டின
முனியப்பன் கருப்பசாமி பிரதிஷ்டை செய்த சிலை அருகே சென்றான்
சிலையை தொட்டு வணங்கி வலபுறம் திருப்ப சிலைக்கு கீழே சிறிய சுரங்கவாசல்
பானுமதி பார்த்து வாயை பிளந்தாள்
பானு என்னம்மா பார்க்கிறே
முதலில் அந்த மஞ்சபையை உள்ளே போடு
அதோடு அட்டை பெட்டில இருக்கும் பணத்தை எல்லாமே எடுத்து உள்ளே போடுங்க
பானுமதி யும் சுந்தரும் அள்ளி அள்ளி போட்டனர் ஒரு வழியாக
அப்பா இந்த சொத்து பாத்திரங்களை உள்ளே மறைத்திடலாமே
மறைக்கலாம் மா இப்போ இல்லை சிறிது நேரம் கழித்து மா
பானுமதி இப்போ உன் அறைக்கு
போகனும்
வாப்பா போகலாம் பானு அதற்கு முன்
சுந்தர் தம்பி இரண்டு லட்சத்துக்கான முத்திரைத்தாள் வாங்கிவர முடியுமா
முடியும்பா அரைமணி நேரத்தில்
உடனே வாங்கிட்டு வாப்பா பணம் இருக்கா
அக்காகிட்ட இருக்கே
தம்பி இந்தா கார்டு இதுல வாங்கி வா
சரிக்கா விரைந்தான்
பானுமதி
உன்னிடம் ஸ்வைப் மிஷின் இருக்கா அம்மா அறைல இருக்கு பாஸ்வேர்ட் தெரியும்பா அதையும் எடுத்துட்டு வாம்மா
உடனே எடுத்து வந்தாள்
பானு இந்த ஏடிஎம் கார்டை சொருகு
அப்பா கார்டு பாஸ்வேர்ட் தெரியாதே
நான் சொல்றேன் அப்பா சொல்ல போட்டாள் திறந்து கொண்டது
பானு பேலன்ஸ் எவ்வளவுனு பாரு
தட்டி பார்த்தாள்
பானுமதி கண்கள் திகைப்பு க்கு சென்றன கிட்டதட்ட பதினாலாயிரம் கோடி பேலன்ஸ் நம்ப முடியவில்லை
அப்பா எப்படி இதெல்லாம் ஏடிஎம் கார்டில் சாத்தியமில்லையே பா
பானு சாதாரண கார்டில் சாத்தியமில்லை ஆனா பெரும் தொழிலதிபர்களுக்கு பிரத்யோகமாக பிளாக் கார்டு இருக்கும் இது போன்ற கார்டு சென்னையில் இருப்பது பேரிடம் தான் இருக்கும் மா
இப்போ என்ன செய்ய ப்பா
பானு ரதிமீனா டிரஸ் அக்கவுண்டில் மொத்த பணத்தையும் டிரன்பார் பன்னிடு
உடனே ஸ்வைப் மிஷின் மூலம் எளிதில் மாற்றி விட்டாள்
அப்பா அடுத்து
சொல்றேன்
சொத்து பத்திரம் அனைத்தும் கலர் ஜெராக்ஸ் எடுத்துவிட்டு மூல பத்திரத்தை மறைத்துவிடு
அதோ தனியா ஓர் பத்திரம் அந்த கூனி 150 கோடிக்கு வாங்கிய பிஸ்டிங் பத்திரம் அதையும் காப்பி எடுத்து மறைத்துவிடு
கடைசியா முத்திரைத்தாள்களில் எழுதியுள்ளது தான் சொத்து முழுவதும் இழக்க போகும் பத்திரம் முட்டாள் தனமா ரதி கையெழுத்து போட்டுவிட்டாள்
அதை கிழித்து எரித்துவிடு மா
அடுத்து தம்பி வாங்கிவரும் முத்திரைத்தாளில் அந்த கூனி வாங்கிய பில்டிங்கை ரதிக்கு விற்பது போல எழுதிவிடு
கலர் ஜெராக்ஸ் மற்றும் கார்டு எழுதிய பத்திரம் அனைத்தும் பழையபடி கூனி அறையிலேயே வைத்து ஒன்றும் நடக்காதது போல இருந்துடுவோம்
நாளை அவ ஆட்டம் குளோஸ் மா
அப்படியே செய்வோம் அப்பா
தொடரும்