22-07-2024, 07:37 AM
#கனவே_நிஜமாகு
தொடர்கதை 6
முனியப்பன் வீட்டின் அமைப்பை பார்த்தான் பிரமித்தான்
வீடா இது கல்யாண மண்டபமா
ரதிமீனா மாமாவின் திகைப்பு கண்டு சிரித்தாள்
மாமா திகைப்பா இருக்கா
அதெல்லாம் இல்ல
எங்க வீட்டு அரண்மனை யில் இதைவிட பெரிது தான் இப்போ எப்படி இருக்கோ
முனியா அது பூட்டியே கிடக்கு வீடும் நிலமும் என் கட்டுபாட்டில் தான் இருக்கு
முனியப்பன் பலமாக சிரித்தான்
ஏன்பா சிரிக்கிற
அத்தை சிரிக்காம இப்போ முறைத்துட்டு போனாளே கூனி இவளோட கட்டுபாட்டில் அல்லவா எல்லாமே இருக்கு
உண்மைதான் பா எப்படி இவர்களை விரட்டுவதுனு தான் தெரியலபா
அத்தை நான் வந்தாச்சி இல்ல
நாளை காலையில இவர்களை ஓட வைக்கிறேன்
சொன்னவன்
ஹாலில் மாட்டியிருக்கும் குடும்ப போட்டோவை பார்த்தான்
அத்தை திருமண போட்டோவில்
தன்னோட தாயும் தந்தையும் தாத்தாவும்
அத்தை அந்த தாத்தா
நம்ம. தாத்தா தான்பா
அப்போ நீ காணம போனதில் இருந்து தாத்தாவும் காணவில்லை பா இப்போ உயிரோடு இருக்காரா இல்லையானு தெரியலைப்பா
அத்தை தாத்தா உயிரோடு தான் இருக்கார்
முனியா என்ன சொல்றே என் அப்பா உயிரோடு இருக்காரா
எங்கே பார்த்தே
அத்தை தாத்தா நல்ல படியா தான் இருக்கார்
தாத்தா இங்கே நிலைமை சரியான உடன் வந்துடுவார்
ரதிமீனா இதையெல்லாம் கவனித்து
வியந்தால்
தேனீர் கடையில் திண்டாடிய இவரை ஏன் என்னோடு சேர விதி வைத்ததோ பிரிந்த உறவுகள் ஒன்றாக வைக்கவா
எங்க குற்றலீஸ்வரனுக்கே வெளிச்சம்
திகைத்து போய் நிற்கும் ரதிமீனா வை பார்த்து
மீனா நம்ம பசங்க எங்கே
நம்ம பசங்க ரதிமீனா வுக்கு மேலும் திகைப்பு என்னோட கதி தெரிந்தும்
தன்னோட பிள்ளைகளாக நொடியில் ஏற்ற மாமாவின் மனம்
தன்னோட அத்தைமகள் என தெரிந்து பயமோ கூச்சமோ இல்லாமல் தன்னோட மனைவியாக கிண்டல் பன்னும் குணம் ரதிமீனா மகிழ்ச்சி யின் உச்சிக்கே சென்றுவிட்டாள்
என்ன மீனா நம்ம பசங்க எங்கே
இதோ மாமா கூப்பிடறேன்
ஏய் பானுமதி சுந்தரேசா அப்பா வந்திருக்கார் வாங்க
அம்மா அப்பா வந்திருக்கார் என்று கூப்பிட
அவரவர் அறையில் படிப்பில் மூழ்கியவர்கள்
அப்பா என்றவுடன்
துள்ளி குதித்து மூச்சிறைக்க ஓடி வந்தார்கள் இருவரும்
அம்மா அப்பா எங்க பானுமதி கேட்டாள்
அப்பாவை பார்த்தாள் சந்தேகமா இருக்க
சுந்தரேசன் தான்
அக்கா அங்கே பாருங்க
கைகாட்டிய திசையில் பாட்டி கல்யாண போட்டோவில் அப்பா
எப்படி அப்போ அம்மாவே பிறக்கலியே
என்னம்மா பானுமதி போட்டோவில் அப்பா இருக்கார்னு பார்க்கறியா
ஆமா பாட்டி
போட்டோவில் இருப்பது உன் அப்பாவோட அப்பா என்னோட அண்ணன் தான்
அப்படியா அப்பா பானுமதி யும் சுந்தரேசனும் ஓடி வந்து அப்பாவை கட்டிபிடித்து அழுதார்கள்
செல்லங்களா அழவேண்டாம் விதி சதி செய்தது அதே விதி இங்கே வரவழைத்துவிட்டது
எதற்காக வும் கலங்ககூடாது சரியா
சரிப்பா
வாப்பா உக்காருப்பா நின்னுட்டு இருக்கிங்க பா
சோபாவில் அமர்ந்தார்
மகளும் மகனும் கூடவே அப்பாவோடு ஒட்டிக்கொண்டு அமர்ந்தார்கள்
பானுமதி அம்மாவை பார்த்தாள்
என்னம்மா இப்பவும் அப்பாவை பிடிக்கலையா
ரதிமீனா திருதிருவென விழித்தாள்
பானுமதி தான் அம்மாவின் கையை பிடித்து இழுத்து அப்பா அருகிலேயே அமர வைத்தாள்
ரதிமீனா கூச்சத்தில் நெளிந்தாள்
என்னம்மா இப்படி
பானும்மா அதொன்னும் இல்ல அப்போ காதலித்து கைவிட்டா இல்ல இப்போ கைபிடிக்க நடுங்குறா போல
ரதிமீனா தன்னை மறந்து சிரித்துவிட்டாள்
கூடவே பானுமதி சுந்தரேசனுடன்
அத்தையும்
சிரிப்பலையோடு
வீடே கலகலப்பு க்கு மாறியது
தொடரும்