22-07-2024, 07:34 AM
#கனவே_நிஜமாகு
தொடர்கதை 5
தன்னை மறந்து உள்ளுக்குள் பாடிய ரதிமீனாவை தன்னோட தாய் பத்மாவதி அழைக்க சுய நினைவுக்கு வந்தாள்
ரதி யாரும்மா இவர் இவர் தான் குழந்தைகளுக்கு அப்பாவா
ஆமாம்மா
தம்பி ஏப்படிப்பா இப்படி பெண்ணை கற்பமாக்கி கழட்டி விடுவதா
அம்மா அவர்மேல தப்பில்லை கல்யாணம் பன்னிக்க காலமெல்லாம் காத்திருந்தார் முட்டாள் நான் தான்மா பிடிக்கல னு பிரிஞ்சிட்டேன்
எது எப்படியோ வளர்ந்த பிள்ளைகளுக்கு அப்பா கிடைச்சாச்சு
மஞ்சுளா தான்
ஆமா ரோடுல போறவனை கூட்டியாந்தா நம்பிடுவதா
மஞ்சுளா இனி பொறுமையா இரு இல்லைனா
இல்லைனா மிரட்டு றியா
அதெல்லாம் அவன் செயல்
அவனா நானானு பார்த்திடுவோம்
ஏய் வாங்கிய அடியும் போதலையா
அடி வாங்கினேன் தான் நாளை காலையில தெரியும் சேதி
முனியப்பன் பலமாக சிரித்தான்
நாளை ஒரு பூ மலரும்
புன்னகையுடன் பதிலளித்தான்
மஞ்சுளா முறைத்துவிட்டு கோபத்துடன் வெளியே சென்றுவிட்டாள்
பத்மாவதி
முனியப்பனை ஏற இறங்க பார்த்தாள்
திகைத்து போனாள்
அச்சு அசல் தன்னோட சொந்த அண்ணா போல இருந்தான்
தன்னோட அண்ணா அண்ணி இறந்தே 46 வருடம் ஆகிறது அப்போ சிறுவனாக இருந்த பையனா இவன்
தம்பி எந்த ஊரு பா நீ
கல்லிடைக் குறிச்சி ங்கமா
தென்காசி புளியறையில் வாழ்ந்த அண்ணா எப்படி கல்லிடை குறிச்சியில்
புரியாமல் விழித்தாள்
தம்பி சொந்த ஊரே கல்லிடை குறிச்சி யா
இல்லைங்க
தென்காசி அருகே புளியறை தாங்க
பத்மாவதி முகத்தில் சந்தோசம் தாங்கவில்லை
அங்கே பிரமனந்தம் பாலகிருஷ்ணன் தெரியுமா
என் சிறுவயதில் என்னை அனாதையா விட்டு போன அப்பாவை தானே கேட்கிறிங்க
அனாதை யாக
பத்மாவதி நெஞ்சம் கனத்தது
தன்னோட அண்ணா அண்ணியும் விபத்தில் மண்டுபோக
தந்தி சேதி தாமதமாக வந்து பதறியடித்து சென்னையில் இருந்து ஓடி வந்தும் எல்லாமே முடிந்து போயிருந்தது
அண்ணா அண்ணி சாம்பலை தான் காண முடிந்தது
அண்ணா பெற்ற ஒரே பையனையும் காணவில்லை கோடிகணக்கில் சொத்துக்கள் அனாதை யாக கிடக்க ஒரே உறவான பத்மாவதிக்கே சொத்துக்கள் ஊரார்களால் எழுதி வைக்கபட்டும்
ஓயாமல் செலவு செய்து தேடியும் கிடைக்காத அண்ணா மகன் கண் முன்னே
பத்மாவதி ஆனந்த கண்ணீருடன்
முனியப்பனை ஆராதழுவி இரண்டு கன்னத்தில் முத்தமிட்டாள்
இதையெல்லாம் கண்ட ரதிமீனா திகைத்தாள்
அம்மா இவரை தெரியுமா
தெரியுமாவா
நாம இப்போ கோடிஸ்வர குடும்பமா இருக்க
என் அண்ணா சொத்துக்கள் அவர் சேர்த்த பணம் நகைகள் தான்
காரணமே மீனா
அம்மா உங்க அண்ணா சொத்துக்கும் இவருக்கு ம் என்ன சம்மந்தம்
சம்மந்தமா என் அண்ணா மகனே இந்த முனியப்பன் தான்
அம்மா தாய்மாமா மகனா இவர்
ஆமாம்மா கொட்டி கிடக்கும் சொத்துக்கும் இவன் தான் வாரிசு
ரதிமீனா நம்ப முடியாமல் பார்த்தாள்
முனியப்பனுக்கும் திகைப்பு
அத்தையை சிறுவயதில் அறிந்தவன் அதன் பின் மறந்தே போனான்
எதிரே தன்னோட அத்தையும் அத்தை மக ரதிமீனா வையும் கண்டு மகிழ்ச்சி அடைந்தான்
இதையெல்லாம் மறைந்திருந்து கேட்ட மஞ்சுளா வுக்கு நடுங்கியது
இனியும் தாமதித்தால் அனைத்தையும் இழப்போம் என தெரிந்தவள் அவசரமாக வீட்டை விட்டு வெளியேறினாள்
மஞ்சுளா அவசரமாக போவதை ஓரகண்ணால் பார்த்தான்
அவசர குடுக்கை நாளை தெரியும் சேதி
உள்ளூக்குள் சிரித்து கொண்டான்
ஏன் மாமா சிரிக்கிறிங்க
ஓ அதுவா உன் மூஞ்சில வெண்ணெய் வழியுது அதான்
போங்க மாமா வந்ததுமே கிண்டலா
பத்மாவதியும் தன்னை மறந்து சிரித்து விட்டாள் அண்ணாவை போலவே குறும்புகாரன் போல
தொடரும்