22-07-2024, 07:28 AM
#கனவே__நிஜமாகு
தொடர் 3
முனியப்பன் ரதிமீனா சொன்னதை கேட்டு புன்னகைத்தான்
முனியப்பன் சென்னை வர காரணமே ரதிமீனாவுடன் வாழ்வதற்கு தான் இது ரதிமீனாவுக்கும் தெரியாது
இதற்கு முன் முனியப்பன்
கல்யாணம் ஆகி மனைவியோடு வாழ்ந்தாலும் தாம்பத்யம் விட்டு பல வருடங்கள் ஆகிறது
கனவில் வரும் பெணணுடன் தான் காலமெல்லாம் வாழ்ந்திருக்கிறான்
இப்படி வாழ்ந்தவனை தான்
பொதிகைமலை சித்தர் சந்தித்தார்
தம்பி கனவே நிஜமானால்
என்ன சொல்றிங்க சாமி கனவு எப்படி நிஜமாகும்
உறுதியான கனவுகள் நிஜமாகும்
நான் கனவுக்குள் வாழ்வது இவருக்கு
சித்தர் இடைபுகுந்தார்
எப்படி தெரியும்னு தானே
மனதை படம்பிடித்த.சித்தரை வியப்போடு பார்த்தான்
அடுத்து சித்தர் நீட்டிய போட்டோவை கண்டு
தன்னையே நம்பமுடியாமல் பார்த்தான்
கனவில் வரும் தன்னுடன் வாழும் மனைவி போட்டோவில்
சாமி இவ. எங்கே இருக்கா
பார்றா பறக்கிற. தம்பி பொறுமை
நான் சொல்றதை கவனமாக கேள் முனியப்பன் காதில் அனைத்தையும் சொன்னார் சகலமும் புரிந்து போனது பாவம் அந்த. பெண் தன்னோட கனவு காதலிக்காக எதையும் செய்ய துணிந்துவிட்டான்
இதையும் சித்தர் கவனித்தார்
தம்பி துணிந்தா மட்டும் போதாது
அங்கே நிறைய. பிரச்சினைகளை சந்திக்க வேண்டிவரும் அதனால
சொல்லுங்க சாமி
இந்த இந்த மூலிகை மருந்து இதை குடி இதனால நீ யாரை லேசாக. அடித்தாலே அரண்டு போவான்
அதோடு மறைந்திருக்கும் எதுவும் உன் கண்ணுக்கு தெரியும்
இனறிரவே சென்னை கிளம்பு நான் சொல்லும் இடத்தில இறங்கு மற்றவை தானாக நடக்கும்
சரிங்க சாமி ஊரில் குடும்பம்
உன் பேச்சை கேட்டா வாழ்கிறது அது தானகவே வாழும்
இந்த. பெண்ணை காலமெல்லாம் பிரியவே கூடாது இருவரும் இன்னும் நாற்பது வருடமாக வாழ்வீர்கள் மரணமும் இருவருக்கும் ஒரே நேரத்தில் இருவரும் இணைந்தே தான்
சரிங்க சாமி இந்த பெண்ணை உங்களுக்கு
எப்படி தெரியும்னு கேக்கறே அதானே
ஆமா சாமி
இந்த. பெண் என்னோட பேத்தி என் மகளோட ஒரே பெண்
இவளுக்கு உதவ போகலாம் தான் விதிபடி நடக்க வேண்டும் என்பதால் உன்னை தேர்ந்தெடுத்தேன்
என்னங்க என்ன யோசனை
சுயநினைவுக்கு வந்தான்
முனியப்பன் நெடுநேரம் யோசனையில் இருந்ததால்
ரதிமீனா தான் அழைத்தாள்
உங்களை கல்யாணம் செய்து உங்களை கைவிடாமல் காலமெல்லாம் வாழவும் குழந்தைகளுக்கு உணமையான அப்பாவாக வாழ சம்மதமே
ரதிமீனா மகிழ்ந்தாள்
பிரச்னை தீந்த சந்தோசத்தில்
தொடரும்