♥️ நினைவோ ஒரு பறவை ❤️(நிறைவுற்றது)
Episode -64

ஷன்மதி சஞ்சனாவை பார்த்து,"ராஜாவின் வாழ்வில் இருந்து உன்னை அகற்ற வேண்டும் என்று நினைச்சேனே தவிர,என்றுமே உன்னை அழிக்க நினைத்தது இல்ல சஞ்சனா..!எப்போ அவன் உனக்கு வந்த ஆபத்தை அவன் ஏற்று கொண்டு உனக்காக உயிரை விட துணிந்தானோ அந்த ஒரு நொடியே ,உங்க வாழ்வில் நான் தலையிட கூடாது என முடிவு பண்ணிட்டேன்.உங்களுக்கு தொந்தரவு தரக்கூடாது என நினைச்சு தான் நான் கல்யாணமும்  பண்ணி கொண்டேன்..ஆனால் என் மனசு முழுக்க ராஜா இருக்கும் பொழுது எப்படி இன்னொருத்தரை தொட அனுமதிக்க முடியும் சொல்லு..அதனால் என் புருஷன் கிட்ட,என்னோட காதலை சொல்லி கொஞ்ச நாளைக்கு மட்டும் என் மனசு மாறும் வரை உடலுறவை தள்ளி வைக்க சொல்லி அனுமதி கேட்டேன்..ஆனால் அவன் ஒத்துக்கல.என்னை உடலுறவுக்கு பலவந்தபடுத்தினான். நான் போராடி பாத்தேன்,என்னால் அவனை எதிர்க்க முடியல.கடைசியில் அவன் என்னை தொடும் பொழுது நான் ராஜா என்னை தொடுவதாக நினைத்து தான் கற்பனை பண்ணி கொண்டேன்.அவனுக்கு என் அழகு மேல தான் மோகம் என்பதை புரிந்து என் மனசு வலித்தது..தினம் தினம் சித்திரவதை,என்னை இழிவாக பேசினான்.வெறும் காதல் தானா..!இல்லை ரெண்டு பேரும் அதற்கு மேல் போய்ட்டீங்களா..!என்று கேட்டான்.அதுக்கு நான் அவனிடம் நான் மட்டும் ராஜாவை லவ் பண்ணேன்..அவன் என்னை லவ் பண்ணல என்று சொன்னேன்..ஆனா அவன் அதற்கு நம்பல..அது எப்படி இவ்வளவு அழகான பெண்ணே வந்து லவ் சொல்லும் பொழுது அதை அவன் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் ஒன்று அவன் முட்டாளாக இருப்பான்,இல்லை அவன் ஆண்மை அற்றவனாக இருப்பான் என்று சொல்லி ராஜாவை திட்டும் பொழுது,என்னால பொறுக்க முடியல.அவனிடம் சண்டை போட்டு இந்தியா வந்தேன்..அவன் என் வீட்டில் என்ன சொல்லி இருப்பான் என்று தெரியல..!என் பிரியமான அப்பாவின் வெறுப்பை சம்பாதிக்க நேர்ந்தது..என்னை வீட்டில் ஏற்றுக்கொள்ளவில்லை.எனக்கு தெரிந்த ப்ரெண்ட் மூலம் திருச்சி வந்தேன்.விவாகரத்து வாங்கினேன்..என்னோட கற்பனை உலகத்தில் ராஜாவோடு சேர்ந்து நிம்மதியா வாழ தொடங்கினேன்..என்று அவள் சொல்ல கண்களில் கண்ணீர் வழிந்தது..சஞ்சனா அந்த அறையை நோட்டம் விட்டாள்..அந்த சிறு அறையில் திரும்பும் பக்கம் எல்லாம் ராஜாவின் உருவமே தென்பட்டது. கடிகாரம்,கப்,போர்வை என ஒன்றை கூட ஷன்மதி விட்டு வைக்கவில்லை..எல்லாவற்றிலும் ராஜாவின் உருவத்தை ஷன்மதி பொறித்து வைத்து இருந்தாள்..

இவற்றை எல்லாம் சஞ்சனா பார்ப்பதை அறிந்த ஷன்மதி,"சஞ்சனா என்னை மன்னிச்சிடு..உன்னோடவன் நிழலை நான் வைத்து மட்டும் வாழ அனுமதி கொடு..நான் உன்னோட வாழ்வில் கண்டிப்பா நான் எப்பவுமே குறுக்கே வர மாட்டேன்.."

சஞ்சனா அவளை கட்டி கொண்டு,"இப்பவும் ராஜாவோட வாழ உனக்கு ஆசையா ஷன்மதி.."என கேட்டாள்..

ஷன்மதி கலங்கிய கண்களுடன்,"இப்போ கூட என் ராஜாவையும்,அவன் குழந்தையையும் என்கிட்ட கொடுத்துடு என்று உன்கிட்ட கத்தனும் போல இருக்கு..ஆனால் இது தப்பு என்று என் மனசு சொல்வதால் கேக்க முடியல.."

அதற்குள் சஞ்சனா மொபைல் அழைக்க,அதை எடுத்து பேசினாள்."சரி உடனே வரேன்.."என்று போனை வைத்தாள்..

"வா ஷன்மதி ஹாஸ்பிடல் போலாம்..'

"இல்ல நான் வரல சஞ்சனா.."

"நீ கண்டிப்பா வந்து தான் ஆகனும் ஷன்மதி..! உன் ராஜா நல்லா இருப்பதை நீ பார்க்க வேண்டாமா..!"என சொல்லி அவளை வலுக்கட்டாயமாக இழுத்து சென்றாள்.

உன் ராஜா என்று சஞ்சனா சொன்ன வார்த்தை ஷன்மதிக்கு உள்ளூர மகிழ்ச்சி தந்தாலும்,அவள் தன்னை மறந்து சொல்லி இருப்பாள் என்ற எண்ணம் வர,பொங்கி வந்த மகிழ்ச்சி உடனே வடிந்து போனது..

ராஜாவின் அறைக்குள் நுழைய,அவன் கண்விழித்து அமர்ந்து இருந்தான்..

ஷன்மதியை பார்த்து ராஜா அவளிடம்,"வா ஷன்மதி நீயா என்னை ஹாஸ்பிடலில் அட்மிட் பண்ணே..நான் எப்போ சென்னையில் இருந்து இங்கே வந்தேன்..நீ இங்கே எப்படி?என கேட்டான்..

ஷன்மதி,சஞ்சனா இருவரும்  ஒன்றும் புரியாமல் விழிக்க அடுத்த அதிர்ச்சி சஞ்சனாவிற்கு தாக்கியது..சஞ்சனாவை பார்த்து,"இவங்க யாரு உன்னோட ப்ரெண்ட்டா.. ஷன்மதி!"என அடுத்த தாக்குதலை தொடுத்தான்..

ஷன்மதி சஞ்சனாவை பற்றி சொல்ல வாயை திறக்க,சஞ்சனா அவள் கைபிடித்து அழுத்தினாள். "ஆமா நான் இவளோட ப்ரெண்ட் தான்..நீங்க கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க..நாங்க கொஞ்சம் டாக்டரை பார்த்திட்டு வந்து விடுகிறோம்" என    சஞ்சனா சொல்லி விட்டு ஷன்மதியை வெளியே அழைத்து சென்றாள்..

சஞ்சனா டாக்டரை சென்று பார்த்து,"டாக்டர் என்னை அவருக்கு அடையாளம் தெரியல..ஆனால் ஷன்மதியை மட்டும் அடையாளம் தெரியுது.."என்று சொல்ல

"நீங்க அவருக்கு எவ்வளவு நாளா பழக்கம்"என டாக்டர் கேட்க,

'ஒரு நாலு வருஷம் இருக்கும் டாக்டர்.."என சஞ்சனா சொன்னாள்.

"அப்போ நீங்க" என ஷன்மதியை பார்த்து கேட்டார்.

"எனக்கு எட்டு வருஷம் மேல தெரியும் டாக்டர்.."

"அப்போ ரொம்ப சிம்பிள்.அவருக்கு பின் மண்டையில் அடிபட்டதால் சமீபமா நடந்த நிகழ்வுகள் எல்லாம் மறந்து விட்டது..அது ஒன்னும் பிரச்சினை இல்ல..கொஞ்ச கொஞ்சமாக எல்லாம் ஞாபகத்திற்கு வந்து விடும்.உதாரணத்திற்கு அவர் செய்யும் வேலையில் இந்த நாலு வருஷத்தில் ஏதாவது கற்று கொண்டு இருந்தால் இப்போ அது அவருக்கு ஞாபகம் இருக்காது. ஆனா அவருக்கு அதை யாராவது ஒருவர் ஞாபகப்படுத்தினால் அந்த விசயம் மட்டும் உடனே ஞாபகத்திற்கு வந்து விடும்..அதே போல உங்க கூட அவர் பழகிய நினைவுகளை கொஞ்ச கொஞ்சமா நீங்க ஞாபகப்படுத்தினால் அவர் பழைய நினைவுக்கு கூடிய சீக்கிரமே வந்து விடுவார்..நான் scan ரிப்போர்ட் எல்லாம் பார்த்துட்டேன்.பயப்படும்படி ஒன்னுமே இல்லை.."என்று சொன்னார்.

"அது போதும் டாக்டர்..மிச்சத்தை நாங்க பார்த்துக்கிறோம்"என ஷன்மதி சொன்னாள்..

டாக்டர் அறை விட்டு வெளியே வந்த உடன் சஞ்சனா, ஷன்மதி கைப்பிடித்து,"ஷன்மதி,நான் இப்போ ராஜா கிட்ட பேசும் பொழுது நீ குறுக்கே பேச மாட்டேன் என்று சஞ்சய் மேல சத்தியம் பண்ணி சொல்லு.."

"எதுக்கு சஞ்சனா..? இப்போ சத்தியம் எல்லாம் கேட்கிற.."

"எல்லாம் காரணமாக தான்..நான் கேட்பதை உடனே செய்.."

ஷன்மதி சத்தியம் செய்ய,சஞ்சனா தீர்மான முடிவோடு ராஜா அறையை நோக்கி நடந்தாள்.

[Image: Snapinsta-app-452023555-1433620490560008...n-1080.jpg]
[+] 6 users Like Geneliarasigan's post
Like Reply


Messages In This Thread
RE: ♥️நினைவோ ஒரு பறவை❤️(தொடர்கிறது) - by Geneliarasigan - 20-07-2024, 10:30 AM



Users browsing this thread: 7 Guest(s)