20-07-2024, 03:13 AM
26
Quote:கொட்டாரம் என்பது சேர சாம்ராஜ்ய காலத்துக்கு முன்னரே தோன்றிய கட்டிட கலை முறை. தேவ பூஜை செய்யும் மனிதர்கள், சில அதிசய அறிவைப் பெற்று இந்த கட்டிடகலையை நிர்மானித்தார்கள் என்று நம்பப்படுகிறது.
பிரபல கேரள ஸமஸ்தானத்துக்கும், இந்த கதையில் வரும் இவர்களுக்கும் ஒரு தொடர்பும் இல்லை. சௌந்தர ராஜ வர்மாவின் மூதாதையர்கள் வரலாற்றில் மறைக்கப்பட்ட ராஜ வம்சம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
கொட்டாரத்தை பற்றி மேலும் அறிய இந்த வீடியோவைப் பாருங்கள்.
கொட்டாரம்
அந்த கொட்டாரத்தின் கதவுகள் பல வருடங்களுக்கு பிறகு திறக்கப்பட்டது.
மரத்தால் ஆன பல கதவுகள் பராமரிப்பு இல்லாமல் கிடந்தது. உள்ளே நுழைபவர்களின் நாசியை, காற்றில் கலந்திருந்தமக்கிய மணம் தொட்டது. சுவாசித்து தும்மினார்கள். தூசு தும்மல் என்று எல்லோரும் கஷ்டப்பட்டார்கள்.
மார்தாண்ட வர்மாவின் மறைவுக்கு பிறகு அந்த மாளிகை கொட்டாரம் சிதிலமடைந்து காணப்பட்டது. அவரின் மருமகளும் வேறு இடத்துக்கு மாற்றலாகிப் போயிருந்தார்கள்.
அவசரமாக குடும்பத்தார் அனைவரையும் அழைத்து வரப்பட்டார்கள்.
ஏன் எதற்கு என்று கேள்வி கேட்டவர்களுக்கு ராணியோ, ராஜனோ பதில் சொல்லவில்லை. எல்லோருக்கும் கொட்டாரத்துக்கு வரும் ஆணை மட்டும் பிறப்பிக்கப்பட்டது. Technology வளர்ந்த நூற்றாண்டாக இருந்தாலும் ராஜாவின் ஆணையை மறுக்கும் தைரியம் யாருக்கும் இருக்கவில்லை.
***
“டேய் தம்பி. என்னடா ஆச்சு. எங்கள எல்லாரயும் எதுக்கு இங்க வர வெச்சிருக்கே?”, ஜானகிதான் தைரியமாக ஆரம்பித்தாள்.
“எங்களுக்கே இன்னும் முழுசா தெரியலக்கா. கொஞ்சம் பொறு. யுவியும் ரூபாவும் சொல்லுவாங்க.”, ராஜன் ஜானுவுக்கு பதில் சொன்னார்.
***
பல வருடங்களுக்கு முன்னால் நடந்த அதே பூஜையை ஏற்பாடு செய்யச் சொன்னான் யுவி. ரூபா வந்ததில் இருந்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
ரதி, நடக்கும் எல்லாவற்றையும் தன்னுடைய சிறிய Drone காமிராக்கள் மூலமாக பதிய வைத்துக்கொண்டிருந்தாள்.
அதே பழைய நம்பூதிரியும் அவரின் சிஷ்யையும் கொட்டாரத்தில் பூஜை ஏற்பாடுகளை ஆரம்பித்தனர். இப்போது யுவி, அவருக்கு என்ன நிவர்த்தி பூஜை செய்யவேண்டும் என்று பழைய நம்பூதிரி பட்டயத்தில் எழுதி கொடுத்ததை டிஜிட்டல் திரையில் காண்பித்து, அதே போல செய்ய சொன்னான்.
நாம்பூதிரிக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. ஒரு வாலிபப் பையன் இப்படி ஒரு செயலை செய்யச் சொன்னது அவருக்கு இன்னும் திகைப்பாக இருந்தது. ஏற்கனவே இவன் பாட்டன் இப்படி செய்யச் சொன்னதை இவனும் செய்ய சொல்கிறானே, எப்படி என்று ஒரு கணம் திடுக்குற்றார்.
இருந்தாலும் ராஜனின் ஆணையை எப்படி மீறுவது என்று நினைத்து கொண்டே பூஜையை ஆரம்பித்தார்.
இந்த பூஜையில் குடும்பத்தார் அனைவரும் அந்த யந்திர சக்கரத்தை சுற்றி உக்கார்ந்து இருந்தார்கள்.
ஜானகி, சுஜா, அவள் மகன் இந்திரஜித், சுஜாவின் கணவன் வேணு, தேவி, அவள் மகள் ஸ்வரூபி மற்றும் ராஜன், ராணி, அனைவரும் சுற்றி உக்காரவைக்கப்பட்டார்கள். ரதி ஒரு ஓரத்தில் இருந்தாள். உடல் நிலை சரியில்லாத காரணத்தால் மார்த்தாண்ட வர்மா வரவில்லை. அவரின் மருமகள் சுப்ரியா சர்மா, அவளுடைய மகளுக்கு திருமணமானபின் அவளுடனேயே தங்கிவிட்டாள்.
அந்த யந்த்ரா சக்கரத்தின் நடுவே யுவராஜனும் ரூபாவும் உக்கார்ந்திருந்தார்கள்.
ஒரு மணி நேர பூஜைக்கு பிறகு யுவியின் உடலும், ரூபாவின் உடலும் fluorescent நிறங்களில் ஒளிர ஆரம்பித்தது.
எல்லோரும் பயப்பட ஆரம்பித்தார்கள், நம்பூதிரி உள்பட.
“നമ്പൂതിരി! നിർത്തൂ!. നിങ്ങളുടെ ജോലി കഴിഞ്ഞു. നിങ്ങൾക്ക് ഇപ്പോൾ പോകാം. ( நம்பூதிரி! நிறுத்து!. உங்கள் வேலை முடிந்தது. நீங்கள் இப்போது புறப்படலாம். )”, ரூபாவின் கணீரென்ற குரல் அந்த அறையை அசைத்தது.
ஒரு வித பீதியுடனேயே நம்பூதிரியும் அவரது சிஷ்யையும் அந்த இடத்தை விட்டு அகன்றார்கள்.
***
நம்பூதிரி சென்றபின், அந்த அறைக்கு ஓரத்தில் இருந்த மண் சட்டியை யுவி எடுத்து கீழே கொட்டினான்.
அப்போது அந்த சட்டியில் இருந்த மண் ஒரு உருவமாக உருமாறத் தொடங்கியது.
பெரியவர்கள் எல்லோரும் பயப்பட ஆரம்பிக்க, அதிசயமாக அங்கே வாலிப வயதில் இருந்தவர்கள் முகத்தில் சந்தோஷம் பொங்க அந்த உருவத்தை பார்த்தார்கள்.
அந்த உயிரினத்தின் உடல் பளபளப்பான வெள்ளியை போன்ற உலோக, பளபளப்பான பொருளால் ஆனது. அதன் உடற்பரப்பு சிக்கலான வடிவங்கள் மற்றும் முகடுகளுடன் இருந்தது. தலை முதல் கால்வரை மின்சார சுற்றமைப்பு (Circuitry) போல எங்கும் சுற்றிக்கொண்டு இருந்தது.
ஓசோன் வாயு வாசம் அந்த அறையை சூள்ந்தது. அந்த உயிரினத்திடம் இருந்து கம்ப்யூட்டர் ப்ராசஸிங் சத்தம் ஒரு ஹம்மிங்க் போல வந்தது.
ராஜனுக்கும் ராணிக்கும், அந்த முக அமைப்பு மட்டும் எங்கோ பார்த்த மாதிரியே தோன்றியது. தேவிக்கு கூட.
அந்த முகம் வேறு யாருடையதுமில்லை - நாம் முன்பே சந்தித்தவர்தான் - ரெங்கம்மா.
“என் செல்வங்களே... எப்படி இருக்கீங்க?”, அசரீரி போல ரெங்கம்மாவின் குரல் ஒலித்தது.
***