20-07-2024, 03:10 AM
25
இருவரின் உடலிலும் Bio Luminescence பிரகாசமாக ஒளிர்ந்ததை பார்த்த ராஜனும் ராணியும் பயந்து போனார்கள்.
என்ன செய்வது என்று இருவருக்கும் தெரியவில்லை. MedBots பரபரவென்று வந்து முதலுதவி செய்தன. 10 நிமிடங்களுக்குபின் இருவருக்கும் மயக்கம் தெளிந்தது.
“யுவி கண்ணா.. எழுந்துட்டியா.. என்னடா ஆச்சு உனக்கு? ரூபா குட்டி.. Are you ok now? உங்க ரெண்டு பேரு மேலயும் எப்படி லைட் எரியுது? உங்களுக்கு வலிக்கலியா?”
படபடவென்று சம்யுக்தா பொரிந்தாள்.
யுவிதான் முதலில் பேச தொடங்கினான்.
“அம்மா... அப்பா... மொதல்ல டென்ஷன் ஆகாதீங்க. We are alright.”
“என்னடா சொல்றே? இப்பவே நாம கீழே போகலாம். நாம ஒரு நல்ல Specialist டாக்டர பாக்கலாம் வா…”, ராணி பதட்டமானாள்.
பிறகு, ராஜனை பார்த்து, “ அப்பா!... நின்னுக்கிட்டே இருக்காதீங்க. போங்க. போயி ஊருக்கு போற வேலையை பாருங்க.” என்று முடுக்கினாள்.
அப்போது ரூபா, “ Stop it ராணி. நாம இப்போ உடனே நம்ம பழைய கொட்டாரத்துக்கு போகணும். அப்பா, உடனே அதுக்கு ஏற்பாடு செய்யுங்க.”
என்று அதிகாரத்துடன் சொன்னாள்.
ராஜனுக்கும் ராணிக்கும் சப்த நாடியும் ஒடுங்கிவிட்டது. அந்த குரலை பலவருடங்களுக்கு முன்னால் இருவரும் கேட்டிருக்கிறார்கள். ராணிக்கு அவளுடைய உண்மையான பெயர் ரூபாவுக்கு எப்படி தெரிந்தது? பழைய கொட்டாரத்தைப் பற்றி இவர்களுக்கு எப்படி தெரிந்தது? இருவரும் ஏன் இப்படி மாறிவிட்டார்கள்? என்ற பல கேள்விகள் எழுந்தன.
“எங்களுக்கு எல்லாம் தெரியும்மா? இந்த Bio Luminescence-க்கான காரணமும் தெரியும். இதெல்லாம் உங்களுக்கு விவரமா சொல்லலும்னா நாம எல்லாரும் சீக்கிரமா ஊருக்கு போகணும். அங்கே உங்களுக்கே புரியும்.”, யுவி ஒரு தீர்க்கதரிசி போல பேசினான்.
***
வானத்தில் இருந்து கீழே செல்ல பரபரவென்று ஏற்பாடுகள் நடந்தது.
ரதியை பார்த்து, “இவளை என்ன செய்ய?” என்று ராணி கேட்டாள்.
ரதிக்கு வயிற்றில் பீதி பிறந்தது.
“இவதான் நம்ம சந்ததி பத்தி documentary செய்யப்போறா. இவளையும் கூட்டிட்டு போவோம்.”, என்று ரூபா ஆணையிட்டு சொன்னாள்.
யுவராஜனும் அதை ஆமோதித்தான்.
***
ரதியின் முகத்தில் இருந்த பீதியையும் குழப்பத்தையும் பார்த்த யுவி, அவளின் அருகே வந்து, “ பயப்படாதே. உன்னோட உயிருக்கு ஒரு ஆபத்தும் இருக்காது. That is our promise. கொஞ்ச நாள் வெளியூர் போயிட்டு வர்றேன்னு உங்க அப்பாவுக்கு தகவல் சொல்லிடு.”
ரதிக்கு வேறு வழி இருப்பதாகத் தெரியவில்லை.
***