♥️ நினைவோ ஒரு பறவை ❤️(நிறைவுற்றது)
Episode - 63

புது பணிபுரியும் இடம்,புது  ஆட்கள் எல்லாமே ராஜாவுக்கு சவாலாக இருந்தது..எப்பவுமே புது இடம் பழகும் வரை கஷ்டமாக தான் இருக்கும் என்பதை ராஜா நன்கு அறிவான்..முன்பு அவன் பார்த்த வேலையில் sales dept மட்டுமே கவனித்தால் போதுமானதாக இருந்தது..ஆனால் இப்போ பிராஞ்ச் மேனேஜர் ஆக புரோமோட் ஆனதால் மற்ற டிபார்ட்மெண்ட் வேலைகளையும் அவனே கவனிக்க வேண்டியதாகி விட்டது..உண்மையில் இந்த பிராஞ்ச் மேனேஜர் போஸ்ட் திருச்சியை பூர்வீகமாக கொண்டு இருந்த தாமோதரன் என்கிற தாமுவுக்கு கிடைக்க வேண்டியது.அவன் ராஜாவை காட்டிலும் சீனியர்,மேலும் டெக்னிகல் டிபார்ட்மெண்ட்டில் இருந்து வந்ததால் அவனுக்கு தான் இந்த புரொமோஷன் கிடைக்கும் என மிகவும் நம்பி இருந்தான்.ஆனால் கடைசி நேரத்தில் திறமையின் அடிப்படையில் ராஜாவை செலக்ட் செய்து விட்டார்கள்.திருச்சி லே அவுட் தனக்கு மட்டுமே நன்றாக தெரியும்,தன்னை மீறி ராஜாவால் இங்கு ஒரு மயிரும் புடுங்க முடியாது என அவன் நினைத்த வேளையில் வந்த ரெண்டே நாளில் திருச்சி லே அவுட் முழுக்க ராஜா தெரிந்து கொண்டு விட்டான்.அதற்கேற்ப ராஜா திட்டமிட்டு வேலை செய்ய தாமுவின் கனவுகள் தவிடுபொடியாகி விட்டன..அதனால் அவன் மனதில் கெட்ட எண்ணங்கள் உருவாயின..

வழக்கம் போல ராஜா வேலை முடித்து விட்டு போகும் பொழுது,தாமு மற்றும் அவன் நண்பர்கள் முகமூடி அணிந்து காரில் பின் தொடர்ந்தனர்.சஞ்சனாவுடன் கொஞ்சி குலாவி போனில் பேசி கொண்டே சென்றதால் அவர்கள் பின் தொடர்வதை ராஜா கவனிக்கவில்லை.
ராஜா போனை கட் செய்யவும் ஒரு ஆள்அரவமற்ற சாலையில் பின் தொடர்ந்து வந்த கார் ராஜாவின் பைக் மீது மோதியது..ராஜா நிலைதடுமாறி விழ,காரில் இருந்து இறங்கிய தாமு மற்றும் அவன் நண்பர்கள் ராஜாவை உருட்டு கட்டையால் சரமாரியாக தாக்கினர்..ராஜா மயக்கம் ஆனவுடன்,தாமு உடனே,"போதும் நிப்பாட்டுங்கடா..அப்புறம் செத்து கித்து தொலைக்க போறான்..இந்த அடிக்கே அவன் ஊரை விட்டு ஓடி விடுவான்.."என்று சொல்லி விட்டு அவர்கள் கலைந்து சென்றனர்.

தன் கிளினிக் வேலை முடிந்து  அந்த வழியே ஸ்கூட்டியில் வந்த ஒரு அழகிய நங்கை,யாரோ அடிப்பட்டு கிடப்பதை பார்த்து வண்டியை நிறுத்தி அருகே சென்றாள்..அவன் முகத்தை பார்த்த உடன் ,ராஜா காரில் அடிப்பட்டு கிடந்த பழைய நினைவுகள் உடனடியாக வந்தன.கண்களில் நீர் பெருக ராஜா....ராஜா என பதறினாள்..

அருகில் உள்ள மருத்துவமனைக்கு உடனே கூட்டி சென்றாள்.டாக்டர் உடனே அவனுக்கு முதலுதவி செய்து விட்டு,"பயப்படுவதற்கு ஒன்னும் இல்லை..கொஞ்சம் நேரத்தில் கண் விழித்து விடுவார்"என சொல்லி விட்டு சென்றார்..

அவளின் கையில் ராஜாவின் ஃபோன் இருந்தது.கைபேசியில் ராஜாவின் கைரேகையை வைத்து ஒத்தி எடுக்க டிஸ்ப்ளே ஓபன் ஆகியது..அதில் கடைசியாக பேசிய  சஞ்சனா நம்பர் தெளிவாக தெரிந்தது.."பேசலாமா..வேண்டாமா.."என அவள் மனதில் பெரும் போராட்டமே நிகழ்ந்து கொண்டு இருந்தது..ஆனால் உடனே ராஜாவின் மொபைல் ஒலிக்க தொடங்க அவள் போராட்டம் முடிவுக்கு வந்தது..அழைத்தது சஞ்சனா தான்.

ஃபோன் அழைப்பை எடுத்தாலும் பேச அவள் நா எழவில்லை.."ஹலோ ராஜா...ராஜா என சஞ்சனா திரும்ப திரும்ப கூப்பிட,சில நொடி மௌனத்திற்கு பின் ஷன்மதி "ஹலோ"என்றாள்.

குரலை உடனே அடையாளம் கண்டு கொண்ட சஞ்சனா,"ஷன்மதி நீயா"என கேட்க,

ஷன்மதியும்,"நான் ஷன்மதி தான் சஞ்சனா..ராஜாவிற்கு இங்கே கொஞ்சம் அடிபட்டு இருக்கு..அவன்  மயக்கமா இருக்கான்.கொஞ்சம் நீ உடனே புறப்பட்டு திருச்சி வரமுடியுமா.."என கேட்டாள்..

"என்ன ஆச்சு ராஜாவுக்கு"சஞ்சனா பதறி கேட்க, ஷன்மதி சுருக்கமாக சொல்லி முடித்தாள்..

"பயப்பட ஒன்னும் இல்லை சஞ்சனா..ஆனா நீ இப்போ ராஜா கூட இருப்பது நல்லது.நீ மட்டும் வந்தா போதும்..வீட்டில் வேற யாருக்கும் சொல்லி வீணா அவர்களுக்கு கஷ்டம் கொடுக்க வேணாம்.."..என்று ஷன்மதி சொல்ல,சஞ்சனா உடனே திருச்சி கிளம்பி விட்டாள்.

வீட்டில் ராஜாவின் அம்மாவிடம் சாராவை மட்டும் பார்த்து கொள்ள சொல்லிவிட்டு,கைக்குழந்தையான சஞ்சயை மட்டும் தூக்கி கொண்டு சிலமணி நேரங்களில் காரை எடுத்து கொண்டு திருச்சி ஓடிவந்தாள்.

ஷன்மதி சொன்ன ஹாஸ்பிடல் உள்ளே சஞ்சனா நுழைவதை பார்த்த ஷன்மதி உடனே அங்கிருந்து கிளம்பி விட்டாள்.அதுவரை அக்கறையோடு ராஜாவை பார்த்து கொண்டு இருந்த ஷன்மதி,சஞ்சனா முகத்தை எதிர்கொள்ள திராணி இல்லாமல் உடனே வீட்டுக்கு சென்று விட்டாள்..

ராஜா அட்மிட் ஆகி இருந்த அறைக்குள் சஞ்சனா நுழைய,"டாக்டர் என்ன ஆச்சு இவருக்கு.."என பதறி கேட்க,

"ஒன்னும் இல்லம்மா..இவரை யாரோ நாலு பேர் சேர்ந்து அடிச்சி இருக்காங்க.. வலி அதிகமாக இருக்கும் என்பதால் ஸ்லீபிங் இன்ஜெக்சன் கொடுத்து இருக்கோம்..இன்னும் கொஞ்ச நேரத்தில் கண் விழித்து விடுவார்..பயப்பட ஒன்னும் இல்ல.."

சஞ்சனா சுற்றும் முற்றும் பாத்து விட்டு "டாக்டர்..!இவரை அட்மிட் பண்ண ஷன்மதி எங்கே.."

டாக்டரும்"அந்த பொண்ணு தான் நைட் எல்லாம் கண் முழிச்சு கூடவே இருந்து இவரை பார்த்து கொண்டது..இங்கே எங்கேயாவது தான் இருக்கும்..தேடி பாருங்க.."

சஞ்சனா ஷன்மதியை தேடி பார்க்க அவள் கிடைக்கவில்லை..அங்கு விசாரித்ததில் ஒரு வழியாக அங்கு இருக்கும் வார்டு பாய் மூலம் அவள் இருக்கும் இடம் தெரிந்தது..

ராஜா கண் விழிப்பதற்குள், ஷன்மதியை சென்று பார்த்து விட்டு வந்து விடலாம் என்று கிளம்பினாள்.

ஷன்மதி தங்கி இருந்த வீடு வசதியாக வீடாக இருக்கும் என சஞ்சனா நினைத்தாள்..ஆனால் அது ஒரு மிக மிக எளிய ஒரே அறை கொண்ட வீடாக இருக்குமென சஞ்சனா கனவிலும் நினைக்கவில்லை..அறைக்கதவு திறந்து உள்ளே நுழைய, ஷன்மதியின் அறைக்குள் ராஜா போஸ்டர் பெரிதாக ஒட்டபட்டு இருப்பதை பார்க்க நேர்ந்தது..

சஞ்சனாவின் வரவை ஷன்மதி சற்றும் எதிர்பார்க்கவில்லை.அவள் முகத்தில் அதிர்ச்சி அப்பட்டமாக தெரிந்தது.

"சஞ்சனா...நீ எப்படி இங்கே ..!"அவள் அதிர்ச்சியோடு கேட்க..

"நான் இங்கே வந்தது ஒருபுறம் இருக்கட்டும் ஷன்மதி..என்ன இது..!ஏன் உனக்கு இந்த நிலைமை..?கல்யாணம் ஆகி வெளிநாட்டில் போய் நீ சந்தோசமாக இருப்பாய் என்று நாங்கள் நினைத்தோமே..!இங்கே ஏன் புறாக்கூண்டு போன்ற அறையில் வந்து கஷ்டப்படுறே..!"

ஷன்மதி அதற்கு பதில் சொல்லாமல்,சஞ்சனா கையில் இருந்த குழந்தையை ஆசையுடன் வாங்கி கொண்டு,"அப்படியே ராஜாவை உரிச்சு வைச்சு இருக்கான்..ஆமா உன்னோட முதல் குழந்தை யார் ஜாடை சஞ்சனா..!"என அவள் கேட்க..

"ஷன்மதி பிளீஸ் பேச்சை மாற்றாதே..!உன் கல்யாணத்திற்கு கூட நாங்க வந்தோமே..!நீ இந்த நிலைமையில் இருப்பதை பார்த்தால் கண்டிப்பா ராஜா உடைஞ்சு போயிடுவான்..என்ன தான் ஆச்சு உனக்கு..!தயவு செய்து சொல்லு ஷன்மதி.."

ஷன்மதி நடந்ததை சொல்ல அதை கேட்டு சஞ்சனா மனம் சுக்குநூறாக உடைந்து போனது..

[Image: IMG-20240719-WA0012.jpg]

[Image: IMG-20240719-WA0013.jpg]
[+] 5 users Like Geneliarasigan's post
Like Reply


Messages In This Thread
RE: ♥️நினைவோ ஒரு பறவை❤️(தொடர்கிறது) - by Geneliarasigan - 19-07-2024, 09:56 PM



Users browsing this thread: 29 Guest(s)