♥️ நினைவோ ஒரு பறவை ❤️(நிறைவுற்றது)
(19-07-2024, 12:54 PM)snegithan Wrote: Episode - 62

குறிப்பு :
     Part -2 Stories பெரும்பாலும் வெற்றி பெற்றது இல்லை.சந்திரமுகி 2, சாமி 2, இந்தியன் 2,பொன்னியின் செல்வன் 2, VIP 2,சண்டக்கோழி 2 போன்ற படங்கள் உதார்ணம்..
இருந்தாலும் சஞ்சனாவின் காதலை இன்னும் ஒருமுறை உயர்த்தி சொல்ல என் மனம் ஆசைப்பட்டது..அதனால் இந்த கதையை தொடர்கிறேன்.


"ஹனி...எல்லாம் ரெடியா..?ராஜா சஞ்சனாவிடம் கேட்டான்..

"டேய் நீ போய் தான் ஆகணுமாடா.."சஞ்சனா அலுத்து கொண்டே கேட்டாள்.

"ஏய் செல்லக்குட்டி..நான் முதலிலேயே உன்கிட்ட இந்த டிரான்ஸ்ஃபர் வித் புரொமோஷன் ஆஃபர் வேண்டாம் என்று சொன்னேன்.நீதான் கேக்கல..இப்போ வந்து அடம் பிடிச்சா எப்படி செல்லம்.."ராஜா கேட்க,

சஞ்சனா அவன் முகம் பார்த்து"டேய் எனக்கு அப்ப எதுவும் தோணலடா..நீ அடுத்த லெவல் போறத நினைச்சு சந்தோசமா இருந்துச்சு.ஆனா இப்ப பிரியும் போது தான் கஷ்டமா இருக்கு..நான் வேணா உன் கூட புறப்பட்டு வந்துடட்டுமா.."

ராஜா அவள் கன்னத்தை கிள்ளி,"அப்போ நம்மள நம்பி இங்கே 30 பேரு வேலை செய்யும் கம்பனி யார் பாத்துக்குவாங்க சொல்லு கண்மணி..கொஞ்சம் பொறுத்துக்க செல்லம்.. இப்போ நான் வேலை செய்யும் கம்பனி புதுசா தொடங்கி இருக்கும் கிளையை எப்படியாவது மூணு மாசத்துல கொஞ்சம் டெவலப் பண்ணிட்டு இங்கே டிரான்ஸ்ஃபர் வாங்கி ஒடி வந்துடறேன்..போதுமா"என அவன் கெஞ்சலாக கேட்டான்.

"டேய் இருந்தாலும்..."சஞ்சனா ராகம் இழுக்க,

"அடியே பொண்டாட்டி..நான் என்ன கடல் கடந்து வெளிநாடா போக போறேன்..இங்க இருக்கும் திருச்சிக்கு தானே..வெறும் 330 kms..வாரம் ஒருமுறை இங்கே என் கண்மணியை பார்க்க ஓடோடி வரப்போறேன்.அப்புறம் என்ன பிரச்சினை..சொல்லு.."

"டேய் உன்னை பிரிந்து சாரா எப்படி இருப்பா..சொல்லு.."

" நான் போவதால் சாராவுக்கு மட்டும் தான் கஷ்டமா..!இல்லை அவ அம்மாவுக்குமா "என ராஜா சொல்லி சிரித்தான்..

சஞ்சனா அவன் சட்டை பட்டனில் விரல் நுழைத்து,"சாராவுக்கு தான் கஷ்டம்..ஆனா அவ அம்மாவுக்கு கொஞ்சம் கூடுதல் வருத்தம்.."என அவள் சொல்ல,ராஜா சஞ்சனாவை கட்டி அணைத்தான்..

"எனக்கு மட்டும் கஷ்டமா இல்லையா செல்லம்,இந்த நிலவு முகத்தில் தினமும் விழிக்கும் நான் ,இப்போ அந்த பிரிவை நினைத்து என் மனம் மட்டும் வாடாதா..!ஒவ்வொரு வாரமும் வார இறுதி நாளுக்காக காத்து இருப்பேன் கண்மணி,இந்த பொன் நிலவு முகத்தை காண.மற்றபடி வீடியோ காலில் பேசிக்கலாம்."என அவள் நெற்றியில் காதலுடன் முத்தம் வைக்க,கீழே கார் ஹாரன் சத்தம் கேட்டது..

ராஜா கீழே எட்டி பார்த்து"கேப் வந்து விட்டது செல்லம்,நான் கிளம்பறேன்.."என கிளம்பினான்..

சஞ்சனா கெஞ்சுதலாக"டேய் நானும் பஸ் ஸ்டாண்டு வரை உன் கூட வரட்டுமா.."

"வேற வினையே வேணாம் கண்மணி..அப்புறம் உன் அழுகிற முகத்தை பார்த்து விட்டு என்னால் ஊருக்கே போக முடியாது..இங்க பாரு கண்ணை மூடி கண்ணை திறப்பதற்குள் இந்த மூணு மாசம் ஓடிடும்..எப்படியாவது vp காலில் விழுந்தாவது நான் மீண்டும் சென்னைக்கு மாற்றலாகி வந்து விடுகிறேன்..அப்படியும் அவர் மாற்றல் கொடுக்கவில்லை என்றால் நான் வேலை resign பண்ணி விடுகிறேன் போதுமா..இப்போ கொஞ்சம் சிரிச்சு வழியனுப்பு என் கண்ணே..!"

சஞ்சனா கொஞ்சம் செல்ல கோபத்துடன் முறுக்கி கொண்டு நிற்க,ராஜா அவளிடம்"உனக்காவது துணைக்கு அம்மா,சாரா,சஞ்சய் எல்லோரும் இருக்காங்க..ஆனா எனக்கு அங்கே யாரும் இல்லை தானே..!என ராஜா முகத்தை பரிதாபமாக வைத்து கொண்டு,"இப்போ கொஞ்சம் சிரிம்மா..என் செல்லம் "என ராஜா காதில் விரலை வைத்து தோப்புக்கரணம் போட்டு கெஞ்ச சஞ்சனா சிரித்தாள்..

அதை பார்த்து ராஜா நிம்மதி அடைந்தான்.."சரி போய்ட்டு வா..வாராவாரம் கண்டிப்பா இங்கே வந்துவிடனும்.."

"உத்தரவு ராஜகுமாரி.."என ராஜா சொல்லி விட்டு திருச்சி கிளம்பினான்..

[Image: 1500x900-857339-malvika-sharma-1.jpg]

yourock clps Heart கதை திரும்ப தொடங்கிய காரணம் எதோ  Sleepy சந்தேகமா இருக்கு ஆனா திரும்ப feel good story படிக்க விருப்பம் சோ ரொம்ப happy to see for restarted part-2
Konjam parts padikama vera iruken padichutu comments poduren dude

Keep rocking
[+] 1 user Likes krishkj's post
Like Reply


Messages In This Thread
RE: ♥️நினைவோ ஒரு பறவை❤️(தொடர்கிறது) - by krishkj - 19-07-2024, 09:41 PM



Users browsing this thread: 12 Guest(s)