19-07-2024, 10:37 AM
#கனவே_நிஜமாகு
தொடர்1
அதிகாலை 5 மணி
சென்னை தேனம்பேட்டை சிக்னலில் இறங்கிய முனியப்பனுக்கு திகைப்பு கிராமத்தில் வாழ்ந்து பழக்கபட்டவனுக்கு சென்னை புதிது அதுவும் விரக்தியால் தென்காசி யில் இருந்து சென்னை வந்தவன்
எங்கே செல்வது யாரிடம் வேலை கேட்பது புரியாமல்
பாண்டி பஜார் சாலையில் மனம் போன போக்கில் நடந்தான்
நினைத்து பார்க்கிறான்
கிராமத்தில் மனைவியின் அலட்சியம் பிள்ளைகளின் அடாவடி தனம் கடன்காரர்களின் ஏச்சுகள்
வெறுப்பா க இருந்தது முனியப்பனுக்கு
கால் போன. போக்கில் நடந்தவன் பனகல் பூங்கா வில் தேனீர் கடையில் தேனீர் குடித்துவிட்டு காசு தர நினைத்த போது தான் கவனித்தான்
பணம் வைத்திருக்கும் பை பேருந்தில் தவற விட்டதை
செய்வதறியாது திகைத்தான்
தேனீர் கடைகாரனும் கவனித்தார்
என்ன காசில்லையா
ஆமா தம்பி பணத்தை பேருந்தில் தவற. விட்டுட்டேன் பா
போதும் கட்டுகதை யோவ் காலங்காத்தால முதல் போண்டியே ஓசி டீ யா
தம்பி அப்படி இல்ல
தம்பியாம் தும்பியாம் முதல்ல பிச்சை எடுத்தாவது பணத்தை கொடு இல்லை
கடைகாரன் கத்த ஆரம்பித்து விட்டான் கூட்டமும் கூடியது எவனும் பத்து ரூபாய் கூட கொடுத்து உதவ வில்லை
முனியப்பன் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தான்
அதே பூங்கா வில் வாக்கிங் வந்த நடுதர வயதான பெண் முனியப்பன் பூங்காவில் வந்து அமர்ந்தது முதல் தேனீர் கடையில் காசில்லாமல் திகைத்து போனதுவரை கவனித்து கொண்டுதான் இருந்தாள்
கோபத்தோடு எழுந்தாள்
தேனீர் கடையை நோக்கி
ஏன்டா தம்பி கேவலம் பத்து ரூபாய் க்கு மனிதநேயம் கூட இல்லாமல் நடந்து கொள்வதா
சரி பத்து ரூபாய் க்கு ஓசில. டீ குடித்தார்னு குதிக்கிறே
ஆனா இந்த இடம் என்னோட பட்டா நிலம் இதுல ஓசில கடைபோட்ட உன்னை என்ன சொல்ல
மேடம் மன்னித்து விடுங்க
ஆமா தப்பை செய்வான் சாவகாசமா மன்னிப்பு கேட்பாங்க இதானா மனித. புத்தி அடச்சே
பர்சில் இருந்து பத்து ரூபாயை வீசி எறிந்தாள்
தேனீர் கடைகாரன் வெலவெலத்து போனான்
இனி இங்கே கடை போட முடியாதே தன்னோட தவறுகளால்
பெண்மணி முனியப்பனை பார்த்தாள் பார்வையிலே யே தன்னுடன் வர அழைத்தாள்
முனியப்பன் பெண்மணி பின்னாலேயே செல்கிறான்
பெண்மணி தன்னோட கார் அருகே வந்தவள்
முனியப்பனை ஏற.இறங்க பார்த்தாள்
சார் நீங்க யாரு எந்த ஊருன்னு எல்லாமே கேக்க மாட்டேன்
நன்றிங்க நீங்க இல்லைனா கூனிகுறுகி போயிருப்பேன்
உங்களுக்கு நன்றிகடன் பட்டிருக்கேன்
நன்றி கடனா அப்போ அந்த நன்றிகடனை இன்றே அடைச்சிடுங்க
எப்படிங்க அடைப்பது பணம் இல்லையே
பணமா அதெல்லாம் குப்பை மனதால் அடையுங்க
புரியலயே மா
பெண்மணி சர்வ சாதாரண மாக. சொன்னாள்
என்னை கல்யாணம் பன்னிட்டா
கடன் தீரும்
முனியப்பன் திகைத்தான் கிராமத்து வாசியான என்னை அழகு மிக்க பணக்கார பெண் கல்யாணம் பன்ன கேட்பதா
திரு திருருவென விழித்தாள்
பெண்மணி முகத்தில் மர்ம புன்னகை
தொடரும்