Adultery விதியின் வழி
Part 21

 
அன்று இரவு கதிர் அப்பா ரூம்ல படுத்தான்.  நடுநடுவே அவருக்கு கொஞ்சம் ஹெல்ப் செய்தான்.  மறுநாள் காலை அவரை கைத்தாங்களா புடித்து பாத்ரூம் கூட்டி சென்றான்.  கொஞ்சம் கஷ்டமாக தான் இருந்தது.  கொஞ்சம் வேகமாக ப்ரேக்ஃபாஸ்ட், லஞ்ச் செய்து முடித்தான்.  மணி 8:30 ஆனதும் கீர்த்தியை தனியாக விட்டு செல்ல கதிர் யோசித்தான்.  கீர்த்தி "நான் பாத்துக்குறேன்.  அது தான் குக் பண்ணிட்டியே"
 
"இல்லைப்பா.. பகல் நேரத்துல ஏதாவது ஹெல்ப் வேணும்னா"
 
"நான் பாத்துக்குறேன்.  walker இருக்கு.  பழகிப்பேன்.  நீ போயிட்டு வா"
 
கதிர் பாதி மனசோடு வேலைக்கு போனான்.
 
கதிர் ஹோட்டலுக்குள் நுழையும் போது உமா வேலையில் இருந்தாள்.  அவனை பார்த்தும் கொஞ்சம் பழைய விஷயங்கள் ஞாபகம் வர, அவனிடம் பேசுவதை தவிர்த்து விட்டு வேலையில் மும்முரமாக இருந்தாள்.  கதிர் அவ்வப்போது உமா வந்து பேசுவாள் என்று எதிர்பார்த்தான்.  ஆனால் அவளோ தவிர்த்து வந்தாள்.  மதியம் வரை நேரம் ஓடியது.  ஒரு சமயத்தில் உமா மனசில் "பாவம் ஒரு கர்டசிகாக கீர்த்தி எப்படி இருக்கார் ன்னு கேக்க தோணுச்சு".  கொஞ்சம் யோசித்து கொண்டே இருந்தாள்.  அப்போது கதிர் அவள் அருகே வர
 
உமா "கதிர்.. என்ன அப்பாக்கு எப்படி இருக்கு"
 
"இப்போவாவது கேக்கணும்னு தோணுச்சே" என்று ஒரு சோர்வுடன் நகர்ந்தான்.
 
"கதிர் அது வந்து அன்னைக்கு நாம பேசினதுல இருந்து எனக்கு என்னவோ நாம பிரிஞ்சிடுறது தான் நல்லதுன்னு தோணுது."
 
"ஹ்ம்ம்.. அது.. தெரியலை.." என்று வார்த்தை வராமல் முழுங்கினான்.
 
"சரி.. உங்க அப்பா வீட்ல தனியா விட்டுட்டு எப்படி வந்தே"
 
"அது தான் கொஞ்சம் படபடப்பா இருக்கு.  அவர் பாத்துக்குறேன்னு சொன்னார்.  சாப்பாடு ரெடி பண்ணிட்டு வந்துட்டேன்.  இன்னைக்கு இங்கே வேலை நெறய இருக்கு"
 
"நம்ம மேனஜர் கிட்ட கேட்டு ஒரு வாரம் லீவு எடுத்துட்டு போயி அப்பாவை பாரு"
 
"ஆமா அவர் கிட்ட பேசணும்"
 
அப்போ மேனேஜர் அங்கே வந்தார்.  "கதிர் நாளைல இருந்து 2 வாரத்துக்கு ஒரு கார்ப்பரேட் கம்பெனி நம்ம ஹோட்டல்ல ட்ரைனிங் நடத்துறாங்க.  அவுங்களுக்கு உன்னை தான் இன்ச்சார்ஜ் போட்டு இருக்கேன்.  இது நல்ல சான்ஸ்.  அவுங்க தங்குறதுல இருந்து கிளம்புற வரைக்கும் நீ தான் பாத்துக்கணும்.  அந்த கம்பெனி CEO கூட ஒரு சில நாள் வருவார்.  இது உனக்கு ஒரு நல்ல அனுபவமா இருக்கும்"
 
கதிர் அவன் கேக்க வந்த லீவு பத்தி என்ன சொல்ல என்று உமாவை பார்த்தன்.  உமாவுக்கு என்ன சொல்ல என்று புரியாமல் விழித்தாள்.
 
மேனேஜர் "என்ன கதிர் இவ்வளவு பெரிய விஷயத்தை சொல்லுறேன்.. ஆர் யு ஓகே"
 
உமா "சார் கதிரோட அப்பாவுக்கு ரெண்டு நாளைக்கு முன்னாடி ஆக்சிடென்ட் ஆகி தலைல கால்ல அடிபட்டு இருக்கார்.  இன்னைக்கு கூட அப்பாவை தனியா விட்டுட்டு வந்ததை நினைச்சு தான் கதிர் இப்படி இருக்கான்"
 
மேனேஜர் "ஓ சாரி கதிர். எனக்கு இது தெரியாம அந்த இன்னொரு அஸ்சிஸ்டன்டுக்கு லீவு கொடுத்துட்டேன்.  anyway நீ போயி உங்க அப்பாவை பாத்துக்கோ.  நான் எப்படி பாத்துக்குறதுன்னு ஏதாவது ஐடியா யோசிக்கிறேன்" சொல்லிவிட்டு அவர் முகத்தில் ஒரு வித குழப்பத்துடன் நகர்ந்தார்.
 
அவர் சென்றதும் உமா கதிரை பார்த்து "நம்ம மேனேஜர் எவ்வளவு நல்லவர் ல.  நமக்கு ட்ரைனிங். இப்போ உன்னோட கஷ்டம் எல்லாம் புரிஞ்சுக்குறார்.  சரி அவர் தான் சொல்லிட்டாரே.. நீ கிளம்பு.  நான் பாத்துக்குறேன்"
 
கதிர் கிளம்பி வீடு செல்லும் போது மதியம் 3 மணி தாண்டி இருந்தது.  அவன் வீட்டுக்குள் வந்ததும் கீர்த்தி படுத்தவாறே "என்னடா.. சீக்கிரம் வந்துட்டே"
 
"இல்லைப்பா மனசு சரி இல்லை. அது தான்"
 
"நல்ல வேலை.. வந்துட்டே.. மதியம் எப்படியோ எழுந்து சாப்பிட்டுட்டேன்.  ஆனா இப்போ எந்திரிச்சி பாத்ரூம் போக தான் பயமா இருந்தது.  வழுக்கிடுமோன்னு.  போயிட்டு வந்துடுறேன்"
 
அவர் எழும்ப முயற்சிக்க கொஞ்சம் கஷ்டப்பட்டார்.  கதிர் அவரை கைத்தாங்கலாக புடித்து தூங்கிவிட்டான்.  வால்கெர் வைத்து மெல்ல நடந்து பாத்ரூம் சென்று வந்தார்.  வரும் போதும் கதிர் கொஞ்சம் உதவி செய்தான்.  அங்கேயே அவருக்கு கொஞ்சம் டவல் பாத் மட்டும் எடுக்க ஹெல்ப் பண்ணினான்.  அவருக்கும் கொஞ்சம் ஃபிரெஷ் ஃபீல் வந்தது.  கதிர் கிச்சனில் இருந்த பாத்திரங்களை கழுவிவிட்டு ஸ்டவ்வில் பாலை காயவைக்கும் போது வீட்டு மணி அடித்தது.  கதவை திறந்தான்.  உமா, நந்தினி இருவரும் நின்று கொண்டு  இருந்தனர். கையில் கொஞ்சம் பழங்கள் வாங்கி கொண்டு வந்திருந்தனர்.
 
"உள்ளே வாங்க"
 
கீர்த்தியும் வாள்கெர் வைத்து நடந்து ஹால் வந்து இருந்தார் "வாங்க உமா.. வா நந்தினி"
 
அவர்களுக்குள் பேச ஒரு வித நெருடல் இருந்தது.  கதிர் "உமா, நந்தினி எனக்கும் அப்பாக்கும் டீ போட்டுட்டு இருந்தேன்.  உங்களுக்கு டீ லைட் ஆ இல்லை ஸ்ட்ராங்கா"
 
உமா "இருக்கட்டும் கதிர் வேலைல இருந்து நேர இங்கே வந்துட்டேன்.  வீட்ல போயி குடிச்சுக்குறோம்"
 
கதிர் "ஐயோ உமா.. எங்களுக்கு போட போறேன்.  உங்களுக்கும் கொஞ்சம் போட போறேன். எனக்கு என்ன கஷ்டம் என்று கிட்சன் சென்றான்."
 
உமா, கீர்த்தி, நந்தினி என்ன பேச என்று தெரியாமல் ஒரு மாதிரி பார்த்து கொண்டு இருக்க
 
உமா "சார்.. இப்போ எப்படி வலி இருக்கா"
 
"தலைல வலி இல்லை.  ஆனா கால் முட்டி தான் ரொம்ப வலிக்குது."
 
"கால் மூட்டில என்ன பண்ணி இருக்காங்க"
 
"உங்களுக்கு தெரியாதா.  கால் முட்டி ல fracture அதனாலே, மெட்டல் பிளேட் வச்சு இருக்காங்க.  அது செட் ஆக 2 வாரம் ஆகும்.  பிசியோதெரபி எடுக்க ஆரம்பிக்கணும்"
 
"ஓ இவ்வளவு பண்ணி இருக்காங்களா"
 
"ஹ்ம்ம்.. அது கொஞ்சம் நடக்கும் போது உள்ளே ஏதோ ஒரு பீல், பயம் இருக்கும்"
 
"மதியம் எப்படி மேனேஜ் பண்ணீங்க"
 
"அது அப்போ நடந்து ஹால் வந்துட்டேன்.  சாப்பிட்ட பிறகு பாத்திரம் எல்லாம் எடுத்து கிச்சேன்ல போட தான் ரொம்ப கஷ்டப்பட்டேன்.  அதுக்கு அப்புறம் பாத்ரூம் போகவும் ரொம்ப பயந்தேன்"
 
அதுக்கு மேலே என்ன பேச ன்னு தெரியாம உமா விழித்தாள்.  நந்தினி ஏதாவது பேசினா உமா தப்பா நினைப்பாளோ என்று அமைதியா இருந்தாள்.
 
கீர்த்தி நந்தினி முகத்தை பார்க்க, நந்தினி வேறு பக்கம் திரும்புவதை உமா கவனித்தாள்.  இப்படி ஒரு சூழ்நிலை யாருக்கும் வரக்கூடாது.
 
கீர்த்தி நந்தினி பார்த்து "நந்து.. சாரி.. நந்தினி.. காலேஜ் ல பாடம் எப்படி போகுது.  என்னோட லீவு பத்தி பிரின்சிபால் கிட்ட சொல்லி இருந்தேன்."
 
"அல்டெர்னட் ப்ரொபசர் இன்னைக்கு வந்தார்.  நீங்க நடத்துன பாடத்தை எல்லாம் ஒரு தடவை ரிவைஸ் பண்ணினார்.  இன்னும் கொஞ்சம் மட்டும் நடத்தணும்னு சொன்னார்.  செமஸ்டர் எக்ஸாம் இன்னும் ஒரு மாசத்துல வர்றது பத்தி நோட்டீஸ் வந்தது."
 
"ஓ அப்படியா.. இன்னும் ஒரு சாப்டர் முடிக்கல.  நான் ப்ரொபசர் கிட்ட பேசுறேன்"
 
அப்போ கதிர் டீ எடுத்து கொண்டு வந்து டேபிளில் வைக்க எல்லோரும் எடுத்து கொண்டனர்.  உமா கதிரிடம் "கதிர் நீ போன அப்புறம் மேனேஜர்க்கு அவரோட பாஸ் செம்ம டோஸ் விட்டாரு போல.  அந்த கார்பொரேட் ட்ரைனிங் ரொம்ப இம்போர்ட்டண்ட் போல"
 
கீர்த்தி "என்ன விஷயம் உமா.. என்ன ஆச்சு"
 
"அது வந்து கதிர் உங்க விஷயமா மேனேஜர் கிட்ட சொல்லி லீவு வாங்கிட்டு வந்துட்டான்.  ஆனா நெக்ஸ்ட் 2 வாரம் எங்க ஹோட்டல்ல ஒரு கார்பொரேட் கம்பெனி ட்ரைனிங் க்காக புக் பண்ணி இருக்காங்க.  மேனேஜர் கதிரை ஃபுல் பாத்துக்க சொன்னார்.  ஆனா இப்போ உங்க நிலமைல அவனால பாத்துக்க முடியாதுன்னு மேனேஜர் லீவு கொடுத்துட்டார்.  ஆனா பாவம் இப்போ அவர் அங்கே மாட்டிகிட்டு முழிக்கிறார்"
 
கீர்த்தி தன்னாலே தான் இப்படி ஆனது என்று மனம் நொந்து என்ன சொல்ல என்று முழித்தார்.
 
கதிர் "அப்பா கவலைப்படாதீங்க.  அவர் பாத்துப்பார்"
 
கீர்த்தி "உன்னோட career என்னாலே ஸ்பாயில் ஆயிடுச்சுல்லே"
 
கதிர் "ஐயோ அப்பா.  நீங்க ரெஸ்ட் எடுங்க.  இன்னும் 2 வாரத்துல எல்லாம் சரி ஆகிடும்"
 
கீர்த்தி "ஆனா இந்த மாதிரி opportunity இனிமே எப்போ வருமோ"
 
உமா "ஐயோ சார்.  விதி நமக்கு என்ன எழுதி வச்சு இருக்கோ, அது தான் நடக்கும்.  நீங்க கவலைப்படுறதால எதுவும் மாறிட போறது இல்லை.  கண்டிப்பா கதிருக்கு இதைவிட நல்ல opportunity அமையும்.  உங்கள விட கதிரை நான் ரொம்ப நம்புறேன்"
 
கீர்த்தி உமாவின் பேச்சை கேட்டு அவள் கதிர் மேல் வைத்து இருந்த நம்பிக்கை வார்த்தையில் ஒரு வித உணர்ச்சி இருப்பதை உணர்ந்தார்.
 
நந்தினி வெகு நேரம் பேசாமல் இருந்துவிட்டு "ஏன் ம்மா நான் வேணும்னா..." கொஞ்சம் முழுங்கி "கீர்த்து..சே.. கீர்த்தி சார்.. நான் வேணும்னா லீவு போட்டு பாத்துக்கட்டுமா"
 
உமா உடனே லேசான புன்முறுவலுடன் "ஏன் டி உனக்கு சமைக்கவே தெரியாது, என்னைக்காவது நீ சாப்பிட்ட பாத்திரத்தை நீ கழுவி இருப்பியா.. இதுல பெரிய மனுஷியாட்டம் அவரை எப்படி பாத்துப்பே"
 
நந்தினி "போங்கம்மா.. நான் போறேன்" என்று சிணுங்கி கொண்டு எழுந்து புறப்பட தயாரானாள்.
 
உமா "ஏய் இருடி..உண்மைய தானே சொன்னேன்.  நாளைக்கு கீர்த்தி சாருக்கு இது தெரிஞ்சு கஷ்டப்படக்கூடாதுல்ல" எதுக்கு அப்படி பேசினோம் என்று தெரியாமல் வாய் உளறியதை நினைத்து ஒரு வினாடி அப்படியே இருந்தாள்.
 
அப்போது உமாவுக்கு அவர் மேனேஜர் கால் வந்தது.  உமா போனை எடுத்து கொண்டு கொஞ்சம் தள்ளி நின்று அட்டென்ட் செய்தாள்.
 
"ஹலோ சார் இந்த நேரத்துல கால் பண்ணி இருக்கீங்க.  ஏதாவது அவசரமா"
 
"ஆமா உமா.  நான் கொஞ்சம் மத்தவங்கள வச்சு மேனேஜ் பண்ணிடலாம்னு நினைச்சேன்.  ஆனா முடியாது போல.  அது தான் இப்போ கதிர் வீட்ல அவுங்க அப்பா நிலைமை எப்படி இருக்கு"
 
"கதிர் வீட்டுக்கு தான் சார் வந்து இருக்கேன்.  ரொம்ப சீரியஸ் இல்லை.  ஆனா அப்பாவால நடக்க முடியல.  ஒரு ஆள் சப்போர்ட் எப்படியும் ஒரு 2 வாரம் தேவைப்படும்னு நினைக்குறேன்"
 
"ஓ.. சரி சரி.. ஏதாவது நர்ஸ் ஏற்பாடு பண்ணினா கதிர் அப்பாவுக்கு உபயோகமா இருக்குமா"
 
"இப்போ அது பத்தி தான் பேசிட்டு இருந்தோம்"
 
கதிர் அங்கே வர உமா கதிரிடம் போன் கொடுத்தாள்.
 
"சார்"
 
"கதிர் சாரி இந்த நிலமைல உங்கள டிஸ்டர்ப் பண்ண.  எனக்கு வேற வழி தெரியல.  உங்க சப்போர்ட் கொஞ்சம் சீக்கிரமா தேவைப்படுது.  அப்பாவுக்கு ஏதாவது நர்ஸ் ஏற்பாடு பண்ணா உங்களால ஆபீஸ் வர முடியுமா"
 
"ஹ்ம்ம்.. எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க சார்.  நான் கொஞ்சம் யோசிச்சிட்டு சொல்லுறேன்"
 
"ஓகே கதிர்.. என்ன தப்பா எடுத்துக்காதீங்க.  மேலிடத்துல இருந்து பிரஷர்"
 
"சரி சார்." சொல்லிவிட்டு போன் வைத்தான்.
 
அவன் வருவதற்குள் கீர்த்தியை உமாவும், நந்தினியும் கைத்தாங்கலாக புடித்து கொண்டு உள்ளே கூட்டி சென்று கொண்டு இருந்தனர்.  அவர்கள் அவரை படுக்க வைத்து விட்டு வெளியே வந்ததும் கதிர் "உமா உனக்கு தெரிஞ்சு நர்ஸ் யாராவது இருக்காங்களா"
 
"தெரியலையே கதிர்"
 
கதிர் கொஞ்சம் நேரம் அப்படியே யோசிச்சிட்டு "உமா.. கேக்ககூடாது தான்.  இருந்தாலும் மனசு கேக்கல.. உங்களால ஒரு வாரம் பாத்துக்க முடியுமா"
 
அவன் அப்படி கேட்டதும் உமாவுக்கு கீர்த்தி பேசிய வார்த்தைகள் எல்லாம் கண்முன்னே வந்து போனது.  ஒரு சில வினாடி அப்படியே உறைந்து இருந்தாள்.  மேனேஜர் சொன்ன வார்த்தைகள்.  அவள் மனதில் ஒரு வித போராட்டம்.  கீர்த்தியை தன்னோட பொண்ணோட லவர் னு நினைக்கவா, இல்லை தன்னோட காதலனோட அப்பாவா.  அதுவும் அவரை பார்த்துக்கணும்னா அடிக்கடி பேச வேண்டி இருக்கும்.  அதுல இருக்குற சங்கோஜம்..மனசுக்குள் ஆயிரம் ஆயிரம் கேள்வி ஒரே நேரத்தில் ஓடியது.
 
"சாரி உமா.. உன்னோட மனசுல என்ன ஓடுதுன்னு புரியுது.  கேக்கணும்னு தோணுச்சு"
 
"கதிர் என்னால எப்படி பாத்துக்க முடியும்.  அதுவும் அவரை தனியா கவனிச்சுக்கணும்னா நமக்குள்ளே என்ன உறவுன்னு யோசிக்க தோணும்.  எல்லாமே ஒரு மாயை மாதிரி இருக்கு.  விதி ஏன் இப்படி விளையாடுது"
 
"இட்ஸ் ஓகே உமா.. நான் மேனேஜர் கிட்ட சொல்லிக்கிறேன்"
 
நந்தினி அப்போது வந்து "என்ன கதிர் அம்மா சோகமா ஆகிட்டாங்க"
 
கதிர் "ஒன்னும் இல்லை.. எங்க ஹோட்டல் மேனேஜர் கால் பண்ணாரு.  அவர் கேட்டதை பண்ண முடியல.  சரி நீங்க ரெண்டு பேரும் இன்னைக்கு டின்னர் இங்கேயே சாப்பிடுங்களேன்"
 
உமா "அதெல்லாம் வேணாம். ஏற்கனவே நீ நெறய வேலை பாத்துட்டு இருக்கே"
 
நந்தினி மனதில் முன்னே வீட்ல சேர்ந்து டின்னர் சாப்பிட்டு முடிச்சதும் தான் கீர்த்தியுடன் நடந்த முத்த அனுபவம் அவள் மனதில் வந்தது.  ஆனா இப்போ இப்படி நிலமைல இருப்பது ஒரு வித வெறுப்பை தந்தது.
 
கதிர் "ஐயோ உமா.. நான் விருந்துக்கு கூப்பிடல.. நீங்களும் கூட இருந்து ஹெல்ப் பண்ணா டின்னர் சீக்கிரமா முடிச்சிடுவேன்"
 
நந்தினி "ஓ சார் க்கு எங்களை வேலை வாங்குற ஐடியா போல"
 
உமா "ஏய் சும்மா இருடி"
 
அவர்கள் பேச்சில் ஒரு வித இறுக்கம் குறைந்து கொஞ்சம் மற்ற விஷயங்கள் பேச ஆரம்பித்தனர்.  உமாவும், நந்தினியும் நைட் டின்னர் ஜாயின் பண்ண ஒத்துக்கிட்ட மூவரும் சேர்ந்து வேகா வேகமாக சமைத்து முடித்தனர்.  நடுநடுவே நந்தினி காலேஜ் விஷயம் பத்தி, வேறு சில விஷயங்கள் பேசினார்.  ஆனால் அவர்களுக்குள் இருந்த காதல், பழைய நினைவுகளை பத்தி மட்டும் பேசுவதை தவிர்த்தனர்.
 
சமைத்து முடித்த பிறகு, கீர்த்திக்கு கொஞ்சம் உதவி செய்தனர்.  அவரையும் புடித்து கொண்டு வந்து சேர்ந்து டின்னர் சாப்பிட்டனர்.  கலகலப்பாக சிரித்து பேசினார்.  கிண்டல் கேலி பேச்சு எல்லாம் சேர்ந்து இருந்தது இப்போது.
 
எல்லாம் முடித்து விட்டு கிளம்பும் போது உமா கதிரிடம் "கதிர் மேனேஜர் போன் பண்ணி நாளை மறுநாளில் இருந்து ஆபீஸ் க்கு வர்றேன்னு சொல்லிடு"
 
"ஏய் விளையாடுறியா.. அப்பா தனியா விட்டுட்டு போக முடியாது"
 
"நான் சொல்ல வந்ததை முழுசா கேளு.. நான் உங்க அப்பாவை ஒரு வாரம் பகல் நேரத்துல பாத்துக்குறேன்.  எனக்கு என்னவோ உன்னையும், உங்க அப்பாவையும் தனியா விட்டுட்டு போக மனசே வரலை"
 
அவள் சொல்லி முடித்ததும் கதிர் அவளை பார்த்து உடனே கட்டி புடித்தான்.  நந்தினி அவர்கள் கட்டி புடித்து இருப்பதை பார்த்து வெக்கத்தில் அந்த பக்கம் திரும்பினாள்.
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
விதியின் வழி - by Aisshu - 14-08-2023, 04:01 PM
RE: விதியின் வழி - by Bigil - 08-09-2023, 08:38 PM
RE: விதியின் வழி - by M boy - 12-09-2023, 01:34 PM
RE: விதியின் வழி - by M boy - 17-09-2023, 04:43 AM
RE: விதியின் வழி - by M boy - 08-10-2023, 11:37 PM
RE: விதியின் வழி - by M boy - 29-12-2023, 04:33 PM
RE: விதியின் வழி - by Bigil - 02-01-2024, 08:04 PM
RE: விதியின் வழி - by M boy - 25-06-2024, 08:23 AM
RE: விதியின் வழி - by Aisshu - 17-07-2024, 08:49 PM
RE: விதியின் வழி - by M boy - 17-07-2024, 11:19 PM



Users browsing this thread: 20 Guest(s)