15-07-2024, 03:36 PM
(This post was last modified: 15-07-2024, 03:44 PM by அருண் அசோக். Edited 1 time in total. Edited 1 time in total.)
(15-07-2024, 12:21 PM)Mohaansguna Wrote: அன்பு நண்பர் அசோக் அவர்களே நலமா..? உங்களின் அனைத்து கதைகளையும் ஒன்று விடாமல் படித்து விடுவது வழக்கம். இத்தோடு நான்காவது புணை பெயரில் கதை எழுதுகிறீர்கள். ஆனால் உங்களுக்கு ஒன்று கூற விரும்புகிறேன் மனது இருந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள். உங்கள் கதைகளின் எழுத்து நடை மற்றும் கதையை நகர்த்தி செல்லும் விதம் அனைத்தும் அருமை. ஆனால் நீங்கள் கதையினை ஏதோ எதிர்பார்பில் எழுதுகிறீர்களோ என்ற சந்தேகம் தான் அது. கடமையை செய் பலனை எதிர் பாராதே என்ற வாக்கியம் ஒன்று உள்ளது. அதை புரிந்து கொண்டால் நமக்கு மன தைரியம் எல்லாமே வழுவாக அமையும். இனிமேல் கதை எழுதவா வேண்டாமா என்று கருத்தொல்லாம் கேட்க வேண்டாம். உங்கள் திருப்திக்காக எழுதுங்கள் விமர்சனங்கள் நல்லதும் வரும் எதிர்மறையான கருத்துக்களும் வரும் ஏற்றுக்கொள்ளதான் வேண்டும். அதை விடுத்து கதை எழுதுவதை நிறுத்துவது என்பது நியாயம் அற்ற செயலாகிவிடும். ஆகவே நன்றாக சிந்தித்து ஒரு முடிவு எடுக்கவும் நன்றி
வணக்கம்..
முதலில் சில clarifications..
எனக்கு நான்கு புனை பெயரா..? நான் இதுவரை அசோக்.. அருண் இந்த இரண்டு பெயரில் தான் கதை எழுதுகிறேன்.
இரண்டாவது.. எனக்கு எந்த வித எதிர்பார்ப்பும் இல்லை.
வாசகர்களுடன் ஒரு ஆரோக்கியமான chat இருந்தால்.. அதில் நிறை குறை தெரிந்து கொண்டு.. வாசகர்கள் mindset புரிந்து கொண்டு.. நான் எழுதுவதை இன்னும் மேம்படுத்தலாமே என்ற ஆவல் தான். வேறொன்றும் இல்லை.
இதையே ஒருவர் என்னை இம்சை.. இனி இந்த தளத்தில் கதை எழுத வேண்டாம் ப்ளீஸ்.. என்றெல்லாம் இழிவாக அசிங்கப் படுத்தும் போது அதுவும் public ஆக..
நான் ஒன்றும் இவர்களுக்காகவோ இல்லை இவர்களை நம்பியோ எழுத வில்லை. என் திருப்திக்காக எழுதிக் கொண்டிருக்கிறேன்.
இப்போது என் மனதில் தோன்றுவதெல்லாம் இங்கே எழுதாவிட்டால் என்ன போச்சு.! அதான்.
ஒரு கதை எழுதுவது என்றால்.. சும்மாவா..? அதை வடிவமைத்து, மறுபடியும் மறுபடியும் திருத்தி, மனதில் தோன்றிய கருவை develop செய்து சுவாரசியமாக கொடுக்க வேண்டும். எத்தனை பாடு.
சிம்பிளாக இம்சை என்றால்.. என்னால் Digest பண்ண முடியவில்லை. என்னுடைய படைப்புகள் எனக்கு மிக முக்கியம். காக்கைக்கு தன் குஞ்சு.. போல..
தயவுசெய்து என்னை மன்னிக்கவும்..
கடைசியாக.. 25 பேர் சேர்ந்து வேணும் னு சொல்ல வில்லை என்றால் நீ எழுத மாட்டியா? எனும்போது
அதே மாதிரி 25 பேர் சேர்ந்து என்னை எழுத சொன்னால் ..?
நான் எடுத்த முடிவை மாற்ற விருப்பமில்லை. மன்னிக்கவும்.
போய் பிள்ளை குட்டிகளை படிக்க வைக்கிற வேலையை பார்த்தால் போதும்.. என்றே தோன்றுகிறது..
அசோக்.