15-07-2024, 12:21 PM
அன்பு நண்பர் அசோக் அவர்களே நலமா..? உங்களின் அனைத்து கதைகளையும் ஒன்று விடாமல் படித்து விடுவது வழக்கம். இத்தோடு நான்காவது புணை பெயரில் கதை எழுதுகிறீர்கள். ஆனால் உங்களுக்கு ஒன்று கூற விரும்புகிறேன் மனது இருந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள். உங்கள் கதைகளின் எழுத்து நடை மற்றும் கதையை நகர்த்தி செல்லும் விதம் அனைத்தும் அருமை. ஆனால் நீங்கள் கதையினை ஏதோ எதிர்பார்பில் எழுதுகிறீர்களோ என்ற சந்தேகம் தான் அது. கடமையை செய் பலனை எதிர் பாராதே என்ற வாக்கியம் ஒன்று உள்ளது. அதை புரிந்து கொண்டால் நமக்கு மன தைரியம் எல்லாமே வழுவாக அமையும். இனிமேல் கதை எழுதவா வேண்டாமா என்று கருத்தொல்லாம் கேட்க வேண்டாம். உங்கள் திருப்திக்காக எழுதுங்கள் விமர்சனங்கள் நல்லதும் வரும் எதிர்மறையான கருத்துக்களும் வரும் ஏற்றுக்கொள்ளதான் வேண்டும். அதை விடுத்து கதை எழுதுவதை நிறுத்துவது என்பது நியாயம் அற்ற செயலாகிவிடும். ஆகவே நன்றாக சிந்தித்து ஒரு முடிவு எடுக்கவும் நன்றி