15-07-2024, 07:45 AM
கேரளா விமானம் நிலையம் விட்டு வெளியே வந்தவுடன்,
அங்கு வந்த பின் அர்ஜுனும் அனுஷ்காவும் கிருஷ் செய்த சிந்தனைமிக்க ஏற்பாடுகளால் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். அவர்களை விமான நிலையத்தில் ஆடம்பரமான காரில் ஏற்றிச் செல்ல ஒரு நபர் பூங்குத்துடன் வரவேற்றார். பின் அர்ஜுன் அனுஷ்கா இருவரும் அந்த காரில் ஏறி பயணம் மேற்கொள்ள அப்போது போகும் சாலையில் ஓரங்கள் ஒரு பழங்காடு மலைகள் சுற்றி இருக்க அந்த இரவுக் காட்சியைக் கண்டு வியந்தனர். மற்றும் சாலையோரம் திராட்சை செடிகள், மா ,பலா என இன்னும் பல பழ மரங்கள் வரிசையாக இருந்தது, அவர்கள் வழியில் ஏராளமான சிறிய அழகான வீடுகளை கடந்து சென்றனர். அவர்கள் இறுதியாக தங்கள் தங்க போகும் வீடு இலக்கை அடையும் வரை நிலவு ஒளியில் பல இயற்கை அழகை ரசித்தார்கள்.
அனுஷ்கா இதனை காலை பொழுது அப்போ கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்றாள்…
அவர்கள் தங்களுடைய பங்களாவை நெருங்கியதும், அது ஒரு வனதின் மற்றும் மலைகள் இருக்கும் ஒரு பகுதியில் கம்பீரமாக நிற்க மற்றும் அவ்வீடு சுற்றி அழகாக விளக்குகளால் மற்றும் அவர்கள் பெயர் பலகை வீடு முன்பு அழகாக ஒளி முலம் அலங்கரிக்கப்பட்டிருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டார்கள், இருவரும் கார் விட்டு இறங்கிய பின் டிரைவர் அவசர தேவைகள் மற்றும் பிற நோக்கங்களுக்காக ஓட்டுநர் தனது தொடர்பு எண்ணை அவர்களிடம் கொடுத்தார், பின்னர் அவர்களை தனியே இருக்க அவர் தன் ஃபக்(bike )எடுத்து கொண்டு அவர்கள் இடையே விடை பெற்று சென்று விட்டார்.
பின் அர்ஜுன் உடமை உடன் செல்ல அனு பின் சென்றான் அனு அவர் கொடுத்த வீடு சாவி முலம் வீட்டை திறந்தாள்
பங்களாவின் உள்ளே, டைனிங் டேபிளில் ஒரு திரை போன்ற ஒன்றில் அச்சிடப்பட்ட கடிதத்தைக் கண்டார்கள். அந்த கடித குறிப்பில், “ஃபிரிட்ஜில் உணவுகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளன, எனவே சமைக்க தேவையில்லை. சாப்பிடுவதற்கு முன் சூடுபடுத்தினால் போதும்.” ஆர்வத்துடன், அவர்கள் சமையலறை நுழைவாயிலுக்கு அருகில் உள்ள இரட்டை கதவு குளிர்சாதன பெட்டியைத் திறந்து, அறுசுவையான உணவுகள் நிரப்பப்பட்டிருப்பதைக் கண்டனர். அனுஷ்கா சாப்பாட்டை எடுத்து கிச்சன் அடுக்களில் வைத்தாள்.
“அனு, சீக்கிரம் வா, இதைப் பாரு!” அர்ஜுன் கத்தினான். அனுஷ்கா விரைந்து சென்று, ஃப்ரிட்ஜில் புதிதாகப் பறிக்கப்பட்ட பழங்கள் நிரப்பப்பட்ட ஒரு அலமாரியைப் பார்த்தாள். இன்னொரு சிறு கடித குறிப்பில், “இந்த வீட்டின் கொல்லைப்புறத்தைப் போய்ப் பாருங்கள்” என்று எழுதப்பட்டிருந்தது.
உற்சாகமாக, அவர்கள் கொல்லைப்புறத்திற்கு விரைந்தனர், திராட்சை, ஆப்பிள், ஆரஞ்சு மற்றும் மாம்பழங்கள் போன்ற கலப்பின பழ மரங்களால் சூழப்பட்ட நன்கு அலங்கரிக்கப்பட்ட பெரிய நீர் படுக்கையைக் கண்டு வியந்தனர். அருகில், ஒரு நீர் விழிச்சு தண்ணீர் கொட்டி கொண்டு இருக்க மற்றும் இயற்கை குளிர்ந்த மலை காற்றும் வீசியது. பின் அந்த இரவு தென்றல் காற்று அவர்களை தீண்டி கொண்டு இருந்தது.