11-07-2024, 09:02 PM
(This post was last modified: 02-01-2025, 08:26 PM by JeeviBarath. Edited 1 time in total. Edited 1 time in total.)
【32】
⪼ குமார், கிருபா & சுகன்யா ⪻
குமார் (மால்ஸ் கணவன்) மற்றும் கிருபா இருவரும் கல்லூரி தோழர்கள். இருவருக்கும் ஹாஸ்டலில் ஒரே அறை. கொஞ்ச நாட்களில் இருவரும் ரொம்ப நெருக்கம் ஆகி விட்டார்கள்.
முதலாம் வருடத்தின் விடுமுறையில் கிருபாவின் முதல் அக்கா திருமணத்திற்காக ஒரு நாள் முன்பே கிருபாவின் ஊருக்கு வந்திருந்தான் குமார்.
குடும்பத்தில் புது தலைமுறையின் முதல் திருமணம் என்பதால் எல்லோரும் ஒரு சில நாட்களுக்கு முன்பே வர ஆரம்பித்திருந்தனர். அங்கும் இங்கும் பாவாடை தாவணியிலும், மிடியிலும், பாவாடை ஜாக்கெட்டிலும் பல இளம் பெண்கள். எல்லாம் என்னோட மாமா பொண்ணுங்க தான் என்றான் கிருபா.
எனக்கு 6 அத்தைங்க. அப்பா சைடு எல்லாருக்கும் முத பிறந்தது பெண் புள்ளைங்க. எங்க வீட்ட மாதிரியே எல்லா மாமாவும் ஆண் புள்ளைங்க வேணும்னு ஓவரா ட்ரை பண்ணிட்டாங்க. சோ எனக்கு நிறைய முறைப் பெண்கள் என கிருபா ஏற்கனவே சொல்லியிருந்தான். ஆனாலும் இத்தனை பேரா அதுவும் கிட்டத்தட்ட அனைத்து பெண்களும் தங்களைவிட ஐந்தாறு வயது குறைந்தவர்கள் என்பதால் கிருபா மீது பொறாமை வந்தது.
எல்லோரையும் விட துரு துருவென வாயைப் பிளந்தபடி சுகன்யாவைப் பார்த்த குமாரிடம், "டேய் அவ சுகன்யா. என் முறைப் பொண்ணுதான். இனி பத்தாவது. அவளதான் நான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்" என்றான் கிருபா. அவன் கிண்டல் செய்கிறான் என்பது குமாருக்கு தெரியும்.
சுகன்யாவுடன் சேர்ந்து மற்ற முறைப் பெண்களையும் குமாருக்கு அறிமுகம் செய்தான் கிருபா. சுகன்யாவுக்கும் மற்ற முறைப் பெண்களுக்கும் ஒரே ஒரு வித்யாசம். சுகன்யா மட்டும் அம்மா வழி முறைப்பெண்.
குமாருக்கு சுகன்யாவைப் பிடித்திருந்தது. அதைப் புரிந்து கொண்ட கிருபா, "டேய், அவளுக்கு படிப்பு தான் முக்கியம். லவ் பண்ண மாட்டா. ஏன்னா விஷயம் தெரிஞ்சா படிக்க விடமாட்டாங்க" என சொன்னான்.
அம்மா வழி முறைப் பெண் என தெரிந்த பிறகு "கிருபா, கல்யாணம் செய்து கொள்ளப் போகிறேன்" என சொன்ன விஷயத்தை உண்மை என நினைத்த குமார், மேற்கண்ட விஷயத்தை கிருபா சொன்ன பிறகு எந்த முயற்சியும் எடுக்கவில்லை..
நாட்கள் கடந்தன. குமார் மற்றும் கிருபா இருவரின் நட்பும் இன்னும் நெருக்கமானது. சுகன்யாவின் மீது குமாருக்கு ஆசை இருந்ததால் அவ்வப்போது சுகன்யாவைப் பற்றி கேட்பான்.
குமாரை வேண்டுமென்றே வெறுப்பேற்றும் எண்ணத்தில் பேசுவான் கிருபா. செல்போன் பெரிதாக புழக்கத்தில் இல்லாத காலம் என்பதால் "நேரில் சுகன்யாவிடம் ரொம்ப நேரம் பேசினேன்" என நண்பன் சொல்வது உண்மையா பொய்யா என குமாரால் தெரிந்து கொள்ள முடியவில்லை..
என்ன செய்ய? கிருபாவின் அம்மா அப்பா இருவரும் காதல் திருமணம் செய்தவர்கள். சுகன்யா & கிருபா இருவரது வீடும் ஒரே தெருவில் அல்லவா இருக்கிறது. ஊருக்கு சென்ற கிருபா தன் முறைப் பெண்ணான சுகன்யாவிடம் பேசினேன் என்று சொன்னால் நம்பித் தான் ஆக வேண்டும்.
குமார் & கிருபா இருவரும் கேம்பஸ் இண்டர்வியூவில் ஒரே நிறுவனத்திற்கு செலக்ட் ஆனார்கள்.
நான்காம் வருட எக்ஸாம் முடிந்து லீவில் இருக்கும் போது கிருபாவின் இரண்டாவது அக்காவுக்கு திருமணம். லீவு என்பதால் ஒரு வாரத்துக்கு முன்பாகவே கிருபாவின் ஊருக்கு வந்திருந்தான் குமார்.
பன்னிரண்டாவது வகுப்பு முடித்து லீவில் இருந்த சுகன்யாவுடன் பேசும் வாய்ப்பு குமாருக்கு கிடைத்தது. நான் இவனை கட்டிக்க மாட்டேன். இவனுக்கு அவங்க அப்பா வழி மாமா பொண்ணுங்க தான் சரி என்றாள் சுகன்யா. அவளுடன் பேசிய பிறகு கிருபா வெறுப்பேற்றியிருக்கிறான் என புரிந்து கொண்டான்.
சுகன்யாவின் மீது குமாருக்கு பப்பி லவ் மாதிரி காதல் இருந்தது. அவளுடன் பேச ஆரம்பித்த பிறகு இன்னும் அதிகமானது. ஆனால் சமீபத்தில் கிருபாவின் உறவினர் வீட்டில் பிற சமூகத்து நபரை காதலித்து திருமணம் கொண்ட பெண்ணுக்கு என்ன நேர்ந்தது என தெரிந்த பிறகு காதலை சொல்லும் அளவுக்கு அவனுக்கு தைரியம் வரவில்லை.
சுகன்யாவுக்கும் ஈர்ப்பு வந்தது. இதுநாள் வரை சொந்த ஊருக்கு அருகில் இருக்கும் கல்லூரியில் படிக்கும் எண்ணத்தில் இருந்தவள் சென்னைக்கு படிக்க செல்லலாம் என முடிவு செய்தாள்.
"சென்னை வேண்டாம்" என சொன்ன அம்மாவிடம் கேம்பஸ் இன்டர்வியூ, கிருபா அங்க இருக்கான் நல்லா பார்த்துப்பான் என சொல்லி சமாளித்தாள்.
குமார் & கிருபா ஒரே அறையில் இருந்து வேலைக்கு சென்றனர். சுகன்யா ஏன் சென்னைக்கு வந்திருக்கிறாள் என புரிந்த பிறகு குமார் தன் காதலை சொன்னான். அவளும் அதை ஏற்றுக் கொண்டாள். என்ன மாமா வேலை பார்க்க வச்சிட்டீங்க என கிருபா குறை பட்டுக் கொள்வான்.
சுகன்யா-கிருபா இருவரும் ஒருவரை ஒருவர் விரும்புவதாக இருவரின் குடும்பமும் நினைத்தது..
மூன்றாவது வருட விடுமுறையில் ஊருக்கு சென்ற சுகன்யா கையில் செல்போனுடன் மாட்டிக் கொள்ள விஷயம் பெரிதானது. சுகன்யா-கிருபா காதலிப்பதாக நினைத்தவர்களுக்கு பேரதிர்ச்சி.
சுகன்யாவை இனிமேல் நீ படிக்க வேண்டாம் என கல்லூரிக்கு அனுப்பாமல் நிறுத்தப் போவதாக சொன்னார்கள்.
இரண்டு நாட்களில் ஹாஸ்பிட்டலில் அட்மிட் ஆகும் அளவுக்கு குமார் தாக்கப்பட்டான். அவளது காலும் உடைக்கப்பட்டிருந்தது. நெக்ஸ்ட் டைம் என்ன நடக்கும்னு உன் ஃபிரண்ட்க்கு சொல்லு என கிருபாவுக்கு கொடுத்த தகவலை அவனிடம் சொன்னான்..
அவன்(குமார்) கூட பேச மாட்டேன், லவ் பண்ண மாட்டேன் என்னை படிச்சு முடிக்க விடுங்க என எவ்வளவோ சொல்லிப் பார்த்தாள் சுகன்யா.
எதுக்கு? அவன்கூட ஓடிப் போக பிளான் பண்றியா அதெல்லாம் தேவையில்லை என சொன்னார்கள்.
"நான் படிக்கணும், வேற எதுவும் வேணாம்" என திரும்ப திரும்ப சொல்லிய சுகன்யா தற்கொலை முயற்சி செய்தாள். பயமுறுத்தும் எண்ணத்தில் கொஞ்சம் விஷ மருந்து எடுத்தாள்.
சுகன்யா-கிருபா காதல், சென்னையில வச்சு எல்லாம் பண்ணிட்டு கல்யாணம் பண்ண மாட்டேன்னு சொல்றான் என்ற வதந்தி ஊரெல்லாம் பரவியது. உண்மையான விஷயம் வெளியில் தெரிந்தால் அசிங்கம் என நினைத்த குடும்பமும் சுகன்யா-கிருபா காதல் முறிவு தான் தற்கொலை முயற்சிக்கு காரணம் என்பதைப் போல பேசினர்.
கிருபாவை கல்யாணம் செய்து கொள்ள சொல்லி அவனது அம்மாவும் சுகன்யாவின் அம்மாவும் காலில் விழாத குறையாக கெஞ்சினர்.
கிருபாவை கல்யாணம் பண்ணிட்டு வேணும்னா படிக்க போ என சுகன்யாவின் அம்மா அப்பா சொன்னார்கள். அதெல்லாம் வேணாம், எனக்கு காதல் முக்கியமில்லை. படிப்புதான் முக்கியம் என சொன்னதை அவளது பெற்றோர் நம்பவில்லை. எது சொன்னாலும் நம்பலன்னா நான் ஏன் வாழணும் என மீண்டும் தற்கொலை முயற்சி செய்தாள். இந்த முறை சாக வேண்டும் என நினைத்தாள்.
கிருபா எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் சுகன்யாவைப் பார்க்க ஹாஸ்பிட்டலுக்கு வந்தான். கிருபா காலில் விழாத குறையாக கெஞ்சி கூத்தாடி தன் மாமியிடம் அனுமதி வாங்கினான்.
கிருபா & குமாருடன் அறைக்குள் வராமல் சில நிமிடங்கள் கழித்து வந்த தாயார் எப்படியும் தன் அப்பாவுக்கு குமார் வந்திருக்கும் விஷயத்தை சொல்லியிருப்பாள் என யூகித்துக் கொண்டாள்..
குமாரை காப்பாற்றும் எண்ணத்தில் "நம்ம காதலை முறித்துக் கொள்ளலாம். இல்லைன்னா என்னை படிக்க விடமாட்டாங்க" என தன்னுடைய தாயார் முன்னாலேயே சுகன்யா சொன்னாள்.
சுகன்யாவின் யூகம் சரிதான். சுகன்யாவின் அம்மா குமார் ஹாஸ்பிட்டல் வந்திருக்கும் வந்த விஷயத்தை சுகன்யாவின் அப்பாவுக்கு தெரிவித்திருந்தாள். அவளுடைய அப்பா ஒருவேளை தன்னுடைய மகளை குமார் பார்க்க வரலாம், அப்படி வந்தால் ஆளை தூக்க வேண்டும் என சொல்லி வைத்திருந்தார். தகவல் தெரிந்ததும் அவசர அவசரமாக அந்த ஆட்களை கூப்பிட்டுக் கொண்டு ஹாஸ்பிட்டல் நோக்கி விரைந்தார்.
சுகன்யாவின் அப்பா ஆட்களை கூட்டிக் கொண்டு செல்லும் விஷயம் தெரிந்த கிருபாவின் அப்பாவும் ஹாஸ்பிட்டலுக்கு வந்து சேர்ந்தார். ரோட்டில் குமாரின் வருகைக்காக காத்துக் கொண்டிருந்த சுகன்யாவின் அப்பாவைப் பார்த்து முட்டாள் மாதிரி எதுவும் பண்ணாத உன் பொண்டாட்டி புள்ளைய யாரு பார்த்துப்பா? என கடிந்து கொண்டார்...