10-07-2024, 03:43 PM
(10-07-2024, 09:31 AM)மணிமாறன் Wrote: உங்களோட வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பா
கண்டிப்பா ஒவ்வொருத்தருக்கா ரிப்ளை குடுத்துட்றேன்..ஆனா அப்போ என்னோட சிச்சுவேஷன் ரொம்ப வொர்ஸ்ட்டா இருந்துச்சு..
என் கல்யாண வேலைகள்ள குடும்பத்துக்குள்ள ஒரு பெரிய சண்ட..அதுல இன்வால்வ் ஆனதுனால என்னால இங்க பதிவும் சரி, கமென்ட்சுக்கு ரிப்ளையும் சரி, சரிவர குடுக்க முடியல..
அப்புறம் உங்களோட அந்த காத்தவராயன் கதைய கூட படிச்சு ரொம்ப நாளாகுது...நா கடைசியா படிச்சப்போ, மன்னர் காலத்துல இருந்தது..இப்போ பார்த்தா நிறைய வரவேற்புகள், நிறைய எபிசோட் கடந்தாச்சு..மறுபடியும் ஃபர்ஸ்ட்ல இருந்து படிச்சாதான் புரியும் போல.. நீங்க அந்த கதைய முடிச்சுருப்பிங்கன்னு நினைச்சேன்..ஆனா, அமோக வரவேற்பு காரணமாக இன்னும் இந்த கதை சூப்பரா போகுது நண்பா வாழ்த்துக்கள்...
கதையை நல்லபடியாக நேரம் கிடைக்கும் பொழுது எழுதி முடிச்சு விடுங்க. அது தான் நீங்க எல்லோருக்கு தரப்போற வெகுமதி.எல்லோருக்கும் reply பண்ணி நேரத்தை விரயமாக்க வேண்டாம்.
காத்தவராயன் கதை மன்னர் காலத்தில் வரும் கதாநாயகியே நிகழ் காலத்தில் வருவது போல யோசித்து வைத்து இருந்தேன்..ஆனால் கொஞ்சம் வரவேற்பு கிடைக்க நிகழ் காலத்தில் மட்டும் நான்கு கதாநாயகிகளாக மாற்றினேன்..இன்னும் கொஞ்சம் வரவேற்பு கிடைத்தது..கதை படிக்கும் வாசகர்கள்,ஒரு சில கேரக்டரை உதாரணமாக முனிவரின் மகள் கதாபாத்திரத்தை விரிவுபடுத்த சொல்லி கேட்டார்கள்.அதனால் அதை விரிவுபடுத்தினேன் அவ்வளவு தான்..80 பாகத்தில் முடித்து விடலாம் என்று நினைத்த கதை,இப்போ 98 பாகங்களை தொட்டு உள்ளது.இன்னும் ஒரு 20 episode வரும்.முன்பு கிடைத்த ஆதரவு இப்போ இல்லாததால்
அதை மட்டும் எழுதி முடித்து விட்டு எழுதுவதை நிறுத்தி விடுவேன்.இப்போ கூட எழுதி கொண்டு இருப்பது மூன்றே மூன்று வாசகர்களுக்காக மட்டுமே..krishkj,arun_zuneh,samsd
பிறகு வாசகன் மட்டும் தான் இனிமேல்..