09-07-2024, 03:08 PM
(This post was last modified: 10-02-2025, 08:07 AM by JeeviBarath. Edited 10 times in total. Edited 10 times in total.)
【01】
ஹலோ.
ஹலோ.
கேக்குதாடி?
எனக்கு கேக்குதும்மா, சொல்லு.
ஹலோ, கேக்குதா?
அம்மா, எனக்கு கேக்குது சொல்லு..
எங்கடி இருக்க?
பஸ் ஸ்டாப்ல பஸ்ஸுக்கு வெயிட் பண்றேன்.
பைக் என்ன ஆச்சு?
மாமனார் எடுத்துட்டு போய்ருக்கார்.
வீட்டுக்காரர் பைக்?
அது ஸ்டார்ட் ஆகலை, எதோ பிரச்சனை.
மாமனார்கிட்ட பேசுனீங்களா?
என்னதும்மா?
அதாண்டி சொத்து விஷயம்.
இல்லம்மா, அவரு பேசுறேன்னு சொன்னாரு.
சொன்னது நியாபகம் இருக்குல்ல?
ஆமா. அதெல்லாம் இருக்கு.
உன் வீட்டுக்காரன தவிர வேற எல்லாரும் நல்ல வேலையில இருக்காங்க.
அதை விடும்மா..
என்னடி விடும்மா. அவங்க எல்லாரும் நல்லா சம்பாதிச்சு சொத்து வாங்குவாறாங்க. உன் நிலமை கடவுளே.
சும்மா புலம்பாத. நான் நல்லாதான இருக்கேன்.
வெறும் சோத்த தின்னுட்டு புள்ளைய பெத்துட்டா போதுமா. இந்த காலத்துல சொத்து சுகம் இல்லைன்னா எவண்டி மதிப்பான்?
சும்மா அதையே பேசாதம்மா..
வேற என்னடி மாமியார் செத்தப்ப அவ நகையில உங்களுக்கு மட்டும் சரியா பங்கு குடுக்காம..
பஸ் வருது கட் பண்றேன். அப்புறம் பேசுறேன்.
நித்யா தாங்கள் வசிக்கும் ஏரியாவுக்கு செல்லும் பஸ் வந்தவுடன் தன் தாயாருடன் பேசிய அழைப்பை துண்டித்து விட்டு பஸ்ஸுல் ஏறினாள். உட்கார சீட் இல்லாமல் நின்று கொண்டே பயணம் செய்த சில பெண்களில் அவளும் ஒருத்தி...