06-07-2024, 07:00 PM
(This post was last modified: 02-01-2025, 06:00 PM by JeeviBarath. Edited 2 times in total. Edited 2 times in total.)
【19】
சாருக்கு எதுக்கு இந்த கோவம்?
சாரி அண்ணி. அவ அசிங்கமா பேசிட்டா.
ஓஹ்! அவ பேசுனது அசிங்கம். ஆனா நீ பண்ணினது கரெக்ட்.?
காலிங் பெல் அடித்தது.
எல்லா ஆம்பளைங்களும் இப்படி தான் பண்ற தப்புக்கு அடுத்தவங்க மேல பழி போடுவீங்களா என சொல்லிக் கொண்டே கதவை திறக்க சென்றாள்.
வீட்டுக்குள் நுழைந்ததும் அம்மா பார்க்ல என அண்ணன் மகள் கதையடிக்க ஆரம்பித்தாள்.
மாலினி எனக்கு மெசேஜ் அனுப்பிக் கொண்டிருந்தாள். பிரிவியூவில் பார்த்த போது எல்லாமே சாரி சாரி என இருந்தது.
மெசேஜ் திரும்ப திரும்ப டொங் டொங் என சத்தம் எழுப்பியது.
அண்ணி : டேய் பதில் அனுப்பேன்டா. மன்னிப்பு கேட்டா குறஞ்சி போய்டுவியா?
அண்ணன் வளன் யாரு என தன் மனைவியை நோக்கி வாயை அசைத்தான்.
யாரு நளன் அது. அத்தையா இல்ல சித்தியா?
அத்தையா? யாரு என என்பதைப் போல அண்ணியைப் பார்த்தான்.
அத்தை மற்றும் சித்தி இரண்டுக்குமே அர்த்தம் புரிந்த அண்ணன் உண்மையா என தன் மனைவியை நோக்கி தலையை அசைத்தான்.
உனக்கு தங்கச்சின்னா அத்தை. போற போக்க பார்த்தா சித்திதான நளன் என தன் கொழுந்தனைப் பார்த்தாள்.
அய்யோ அண்ணி. அப்படி எதுவும் இல்லை.
டேய் செல் குடு.
அய்யோ அண்ணி.
சும்மா. பயப்படாம குடுறா.
வேணாம்.
பார்த்தியா வளன். குற்றம் செஞ்ச மனசு குறுகுறுக்குது.
வளன் : ஏய் சும்மா இருடி.
சாரு தங்கச்சிய பார்க்க போன இடத்துல, அவ ஃபிரண்ட செட் பண்ணி குடுக்க சொல்லிருக்கான். அதான் தங்கச்சி திட்டி மெசேஜ் அனுப்பிட்டு இருக்கா.
உனக்கு எப்படி தெரியும் என்பதைப் போல பார்த்த கணவனிடம்..
டேய் பிளே பாய். உன் தம்பிக்கு பொண்ணுங்க கிட்ட எப்படி பேசிப் பழகனும்னு சொல்லிக் குடேண்டா.
அவன ஓட்டுறத விட்டுட்டு என்ன ஏண்டி கலாய்க்குற என டாய்லெட் செல்லும் எண்ணத்தில் எழுந்தான் வளன்.
டேய் பயந்து ஓடாதடா.
உன்னை கட்டிக் கிட்டதுக்கு நாலு எருமையை கட்டிருக்கலாம்டி என சொல்லிக் கொண்டே பெட் ரூமில் நுழைந்தான் வளன்.
நளன் தலையில் தட்டி அவகிட்ட மன்னிப்பு கேளுடா என்றாள் அண்ணி.
நான் எதுக்கு மன்னிப்பு கேட்கணும் என்பதைப் போல பார்த்தான்.
நா அவ இடத்துல இருந்தா இதைவிட அசிங்கமா கேட்ருப்பேன். ஒழுங்கு மரியாதையா அவகிட்ட மன்னிப்பு கேளு.
சாரி நான் அப்படி சொல்லிருக்க கூடாதுன்னு மெசேஜ் அனுப்பியிருந்த மாலினிக்கு சாரி என ரிப்ளை அனுப்பினான்.
முதல்ல முட்டாள் மாதிரி ஒரு பொண்ணு மேல கைய வச்சிட்டு அவளையே இன்னொரு பொண்ண செட் பண்ண சொல்லி கேட்குறத நிறுத்து.
சாரி அண்ணி.
கிடைக்கிறத விட்டுட்டு பறக்கிறதுக்கு ஆசைப்படாத என தலையில் தட்டினாள்.
அம்மா சித்தப்பாவ அடிச்சிட்டாங்க என குழந்தை சத்தம் போட்டது.
ஏண்டி என வளன் கேட்டான்.
நளனின் கவனம் சிதறியது. அவனது கையில் இருந்த மொபைலை பிடுங்கிய அண்ணி மீண்டும் மாலினி வீட்டில் நால்வரும் சேர்ந்து எடுத்த போட்டோவை ஓபன் செய்தாள்.
இங்க பாருடா என செல்போனை தன் கணவனிடம் நீட்டினாள்.
என்னடி என செல்போனை பார்த்தான்.
இதுல அழகா இருக்குறவதான் ஆர்த்தி. அவள செட் பண்ணி தர சொல்லி கேட்டுருக்கான் உன் தொம்பி.
வளன் : ஏய்!
ரெண்டு பேரும் இருக்குறத விட்டுட்டு பறக்குறதுக்கு தான் ஆசைப்படுவீங்களாடா?
வளன் : ஏண்டி! பார்த்தவுடனே அழகா இருக்குறவ மேல ஆசைப்படாம உன்மேலயாடி ஆசைப்படுவாங்க.? கருவாச்சி.
ஆமா. இவரு பெரிய ஆணழகன். போடா டேய்.
உனக்கு இந்த ஆணழகன் போதுண்டி என மனைவியின் கழுத்தில் கையைப் போட்டு தன் உடலையும் தன் மனைவி உடலையும் சேர்த்து அசைத்தபடி முடியை முகர்ந்த அண்ணனையும் கண்ணில் காதலுடன் "சும்மா இருடா" என வெட்கத்துடன் கழுத்தில் இருந்த கையை விடுவிக்க முயற்சி செய்த அண்ணியையும் பார்த்து ரசித்தான் நளன்.
என்னடா என நளனைப் பார்த்து கேட்டாள்.
ஒண்ணுமில்லை அண்ணி என சிரித்தான் நளன்.
டேய் என்ன விடுடா என தன் கணவன் வளன் கையில் அடித்தாள்.
முடியாதுடி.
எனக்கென்ன நீ இப்படியே பண்ணு. அப்புறம் இன்னைக்கு நைட் உன் தம்பி நம்மள நினைச்சு என வளனுக்கு மட்டும் கேட்கும்படி சொன்ன அடுத்த வினாடி தன் மனைவியின் கழுத்தில் செல்லமாக வைத்து அணைத்திருந்த கையை எடுத்தான்.
உன்னையெல்லாம் என செல்லமாக தன் மனைவியின் குண்டியில் தட்டினான் வளன்.
நீயே சூப்பர் சான்ஸ் கிரியேட் பண்ணிக் குடுக்குறடா என கணவனை திரும்பி பார்த்தாள்.
ஏண்டி இப்படி உயிர எடுக்குற.
ஏய் நளன், நீயே சொல்லுடா. "நைட்" என சொல்லி முடிக்கும் முன்னர் தன் மனைவியின் வாயைப் பொத்தினான் வளன்.
என்ன அண்ணி.
நைட் சிக்கன் தானப்பா என்றாள் அண்ணன் மகள்.
ஆமா என தன் மனைவியின் வாயை விடுவித்தான் வளன்.
யாரு கிட்ட என்கிட்டயேவா என கணவனிடம் சொல்லிக் கொண்டே ஷோபாவில் உட்கார்ந்தாள்.
டேய் அவளுக்கு கால் பண்ணி பேசு. மன்னிப்பு கேளு. இனி இந்த மாதிரி முட்டாள் மாதிரி நடந்துக்காத.
சரி அண்ணி என தலையை அசைத்த வளன் தன்னுடைய பெட்ரூம் செல்ல எழுந்தான்.
இந்த விஷயத்துல டவுட் இருந்தா, உங்க அண்ணன் மிஸ்டர் பிளே பாய் கிட்ட கேளு என சிரித்தாள்...