02-07-2024, 09:50 PM
(This post was last modified: 02-07-2024, 10:00 PM by Geneliarasigan. Edited 3 times in total. Edited 3 times in total.)
(02-07-2024, 09:41 PM)jakash Wrote: உங்களுக்குள்ள இப்படி ஒரு கஷ்டம் இருக்கும்னு நினைக்கல நண்பா .கவலைப்படாதீங்க நண்பா காலம் எல்லாத்தையும் மாத்த்தும் உங்களுக்கும் நல்லது நடக்கும்
எல்லாவற்றையும் கடந்து வந்து விட்டேன் நண்பா,ஆனால் என்னோட காலின் ஊனம் என்பது காலத்தால் மாற்ற முடியாது..மரணம் ஒன்றே மாற்றும்.இதனால் நான் காதலிக்கப்படவில்லை.நான் ஆசைப்பட்ட பெண்ணிடம் என் காதலை சொல்லும் பொழுது என் ஊனத்தால் நிராகரிக்கப்பட்டேன்.அந்த வலி சொல்ல முடியாத வலி.அந்த ரணம் இன்னும் ஆறவில்லை.அவளை மறக்க ,கவனத்தை திசை திருப்ப இங்கு கதை படிக்க வந்தேன்.பிறகு எழுத தோன்றியது..எந்த பெண்ணும் என்னை கல்யாணம் செய்து கொள்ள முன்வருவது இல்லை..என் தனிமையை போக்கி கொள்ள இந்த தளம் தான் எனக்கு உதவுகிறது.நான் துவண்ட நேரங்களில் எனக்கு கை கொடுத்து உதவிய நண்பர்களை என்றும் மறக்க மாட்டேன்.அவர்கள் என் வாழ்வில் வந்த ஆண் தேவதைகள்.சுதாகர்,மதன்,கிருஷ்ணமூர்த்தி,ராஜேஷ்,செந்தில்,ஶ்ரீதர், சதிஷ்,வாசுதேவன் இவர்கள் என் வாழ்க்கையில் சிரிப்பை கொண்டு வந்தவர்கள்..நினைவோ ஒரு பறவை கதையில் வரும் வாசு,ராஜேஷ் கேரக்டர் அப்படியே என் நண்பன் வாசு,ராஜேஷ் கேரக்டர் தான்.