Adultery இது எங்கள் வாழ்க்கை!
【212】

⪼ ஜீவிதா ⪻

எனக்கு ஊருக்கு பணிமாற்றம் வாங்க முக்கிய உதவி புரிந்த மேனேஜர் மகனின் ரிசப்ஷன் அட்டென்ட் பண்ண நானும் அப்பாவும் சென்னைக்கு சென்றிருந்தோம்.

நாங்கள் சென்னையிலிருந்து ஊருக்கு வந்த பஸ் விபத்துக்குள்ளானது. பஞ்சர் ஆன பஸ் கொஞ்சம் தாறுமாறாக ஓட டிரைவர் வேறு வழியில்லாமல் டிவைடரில் இடித்து நிறுத்தியதாக சொன்னார்கள்.

அந்த பஸ் கம்பெனி மாற்றுப் பேருந்து ஏற்பாடு செய்ய ரொம்ப நேரம் ஆனதால் நாங்கள் ஊருக்கு சரியான நேரத்திற்கு வந்து சேர முடியாத நிலை ஏற்பட்டது.

தொடர்ந்து இரண்டு முறை எனது மகனுக்கு உடம்பு சரியில்லை என்று சொன்னால் நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளும். ஆனால் அவன் பஞ்சாயத்து பண்ணினாலும் பண்ணுவான். ஏற்கனவே இது ஒரு பிரச்சனையா இருக்கு என எனது அப்பா தெரிவித்தார்.

எனது அம்மாவிற்கு கால் செய்து என் மகனை அவனது அப்பாவை பார்ப்பதற்கு கூட்டிச் செல்லுமாறு சொன்னேன். எனது அம்மாவிற்கு ஒரே பயம் ஒருவேளை குழந்தையை தூக்கிக் கொண்டு பரத் ஓடி விட்டால் என்ன செய்ய என்று என்னிடம் கேட்டாள்.இது நாங்கள் ஒவ்வொரு முறையும் கூட்டிச் செல்லும் முன் பேசும் விஷயங்கள் தான்.

அப்பாவும் அம்மாவும் மீசை மாமா வீட்டு விசேஷத்திற்கு வேறு போக வேண்டியிருந்தது.

நான் அரவிந்க்கு போன் போட்டு என் அம்மாவுடன் துணைக்கு போக முடியுமா என்று கேட்டேன். அவன் வெளியூரில் இருப்பதாக சொன்னான்.

நான் மதிக்கு போன் செய்து உதவி கேட்டேன். அவன் சொல்லுங்கக்கா என்று விஷயங்களை கேட்டு தெரிந்து கொண்டவன் கண்டிப்பாக உதவி பண்றேன் என்று சொன்னான்.

நா‌ன் மதியிடம்  என்ன செய்ய வேண்டும் என தெளிவாக சொன்னேன். மதி என் வீட்டிற்கு சென்று என் மகன் மற்றும் எனது அம்மாவை ஆட்டோவில் அனுப்பி வைத்து விட்டு அவர்கள் பின்னால் பைக்கில் சென்று அவர்கள் அருகில் இல்லாமல் சற்று தூரத்தில் நின்று என் மகனை கவனித்துக் கொண்டான். நானும் 10-15 நிமிடங்களுக்கு ஒருமுறை மதிக்கு அழைத்து என்ன நடக்கிறது என விசாரித்தேன்.

நான் மதியிடம் தெளிவாக சொல்லியிருந்தது என்னவென்றால் என் மகனை கூட்டிக்கொண்டு அவனது அப்பா பைக்கில் எங்கும் சென்று விடாமல் பார்த்துக் கொள்ளவும் என்பதுதான். மதி எனது மகனின் அப்பாவின் பைக் பக்கத்திலேயே காத்திருந்தபடி அவர்களை நோட்டம் விட்டான்...
Like Reply


Messages In This Thread
RE: இது எங்கள் வாழ்க்கை! - by JeeviBarath - 29-06-2024, 10:11 AM



Users browsing this thread: arunarma3, 3 Guest(s)