28-06-2024, 07:26 PM
Part 20
மறுநாள் காலேஜ் ஸ்ட்ரைக் முடிந்து திறப்பதாக அறிவிப்பு வந்து இருந்தது. காலை சோம்பலுடன் எழுந்த நந்தினி அருகில் உமா இல்லை என்று உணர்ந்து கடிகாரத்தில் மணி பார்த்தாள். 6:30 என்று காட்டியது. அப்படியே எழுந்து வெளியே வரும் போது உமா அடுப்படியில் குளித்து விட்டு சமைத்து கொண்டு இருந்தாள்.
"அம்மா.. எப்போ எந்திரிசீங்க.. இவ்வளவு வேலைய செய்ய ஆரம்பிச்சுடீங்க"
"ஹ்ம்ம் இந்தா காபி. குடிச்சிட்டு காலேஜ் கிளம்பு"
"அம்மா நான் இனிமே காலேஜ் போகலம்மா" அவள் காபி சிப் பண்ணி கொண்டே இருக்க, உமா அவளை பார்த்து
"ஏண்டி"
"அம்மா எனக்கு கீர்த்தியை பார்க்க விரும்பல"
"ஏய் உதைபடுவே.. நான் தான் படிக்காம இப்படி கஷ்டப்படுறேன். உனக்கு இப்படி ஒரு அருமையான காலேஜ் ல படிக்க வாய்ப்பு கிடைச்சு இருக்கு. மொதல்ல கிளம்புற வழிய பாரு"
"அம்மா.." என்று சிணுங்கினாள்.
"நானும் வேலைக்கு கிளம்புறேன். என்னை நம்பி மும்பை வரை ட்ரைனிங் அனுப்பினாங்க. அவுங்களுக்கு நான் உண்மையா இருக்க வேணாமா"
நந்தினி சிறிது யோசித்தாள். "சரிம்மா.. ஆனா நீ என்ன ட்ராப் பண்ண வர வேணாம். அங்கே நீ வந்தா கீர்த்தி சார் பார்த்தா நீ கஷ்டப்படுவே. நான் நடந்தே போயிக்கிறேன்"
"சரி சரி.. படிப்புல கோட்டை விட்டுடாதே"
நந்தினி டவல் எடுத்து கொண்டு பாத்ரூம் ஓடினாள். உமா லஞ்ச் ரெடி பண்ணி பாக்ஸ் ல பேக் பண்ணி வைத்தாள். நந்தினி குளித்து வந்ததும் இருவரும் உப்மா சாப்பிட்டு விட்டு கிளம்பினர்.
--------------------------------------------
கதிரும் கீர்த்தியும் அன்று இரவு ரொம்ப பேசிக்காமல் படுக்க சென்றிருந்தனர். இரவெல்லாம் தூக்கம் வராமல புரண்டு புரண்டு படுத்தனர்.
கதிரின் மனதில் "அம்மா இறந்த அப்புறம் தனிமைல அப்பா எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பாங்க. அவுங்களுக்கு துணை ஒன்னு தேடி இருக்கும் போது, நான் அதுக்கு தடையா இருக்கேனே"
கீர்த்தி மனதில் "அம்மா இழந்த பையன். அவள் இருந்து இருந்தா முன்னாடியே அவ கிட்ட சொல்லி இருப்பான். இப்போ அவனோட காதலுக்கு நான் தடையா இருக்கேனே"
இருவரும் அப்படியே தூங்கினர். மறுநாள் எழுந்து பார்க்க கதிர் வழக்கம் போல எழுந்து சமைத்து கொண்டு இருந்தான். கீர்த்தி அவனை பார்த்ததும் ஒரு குற்ற உணர்ச்சி இருந்தது.
"டேய் சாரி டா.."
"அப்பா.. எதுக்கு ப்பா சாரி எல்லாம். பிளாஸ்க் ல காபி போட்டு வச்சு இருக்கேன். எடுத்து குடிங்க மொதல்ல"
"ஏய் உண்மைல உனக்கு வருத்தமா இல்லை.. வருத்தமா இல்லாத மாதிரி நடிக்குறியா"
"ஐயோ அப்பா இப்போ வருத்தப்பட்டு என்ன ஆக போகுது. நீங்க காலேஜ் கிளம்புற வழிய பாருங்க. நானும் வேலைக்கு கிளம்புறேன்"
கீர்த்தியும் கதிரும் குளித்து விட்டு அவரவர் வேலைக்கு கிளம்பினர்.

கீர்த்தி பஸ்ஸில் நந்தினி பார்த்தாலும், நந்தினி இப்போது அவரருகில் அமர்வது இல்லை. அதே போல அங்கே கதிர் உமா ஒண்ணா தான் வேலை செய்தாலும், வேலை விஷயம் பத்தி மட்டும் பேசும் போது கலந்து கொண்டனர். மற்ற விஷயங்கள் பேசி கொள்ளவில்லை. யார் மேலேயும் குற்றம் இல்லை. விதியின் வழி இது தான் என்று புரிந்து கொள்ள நால்வராலும் முடியவில்லை.
ரெண்டு மூன்று நாட்கள் அப்படியே ஓடியது.
ஒரு நாள் கதிர் வேலை நேரத்தில் உமாவிடம் சென்று. "கொஞ்சம் மேலே வர்றீங்களா.. உங்க கிட்ட தனியா பேசணும்" என்று சொல்லிவிட்டு நகர்ந்தான். உமாவும் அந்த இடத்தில எதுவும் பேசாமல் அவனோடு சென்றாள். அவள் வேலை பார்க்கும் ஹோட்டல் மொட்டை மாடிக்கு சென்றனர்.
கதிர் "உமா..i am terribly சாரி. அன்னைக்கு எங்க அப்பா அப்படி பேசி இருக்க கூடாது. நானும் அப்படி நடந்துகிட்டு இருந்திருக்க கூடாது"
உமாவின் கண்கள் நீர் கோர்த்தது. அவள் அவனை பார்த்து கொண்டு இருக்க.
"உமா.. என்னால என்ன பண்ணணு தெரியல.. இவ்வளவு நாள் சந்தோஷமா இருந்த வாழ்க்கை இப்போ ஏதோ நரகமா மாறிடுச்சு. அப்படியே கண் காணாத இடத்துக்கு போயிடலாமான்னு தோணுது" கதிரின் கண்களில் இருந்து சில துளி நீர் வழிந்தது.
உமா மெல்ல பேசினாள்.."கதிர் இதுல யாரை சொல்லியும் தப்பு இல்லை. இது தான் விதி. நாம சேரக்கூடாது என்று தலையெழுத்து"
"ஹ்ம்ம்"
"என்ன நாம கொஞ்சம் அவசரப்படாம இருந்திருக்கலாம்"
கதிர் ஒரு மாதிரி அவளை பார்த்து விட்டு "ஏய் உமா.. நான் ஒன்னு சொன்னா கோச்சுக்க மாட்டியே.. "
"ஹ்ம்ம்.. என்ன"
"எங்க அப்பா பாவம்.. அம்மா இறந்ததுல இருந்து ரொம்ப depression ல இருந்து வெளியே வந்தாரு. இப்போ அவரு ஆசைப்பட்டதையும் அடைய முடியாம போனா அவர் ரொம்ப கஷ்டப்படுவார்...அதனாலே.."
"ஹ்ம்ம்"
"அதனாலே.. எப்படி சொல்லனு தெரியல"
"சொல்லு"
"எங்க அப்பா, நந்தினி சேர்வதற்கு.. நாம ஏன் தடையா இருக்கணும். அவுங்க சந்தோஷமா இருக்கலாமே"
உமா அவனை பார்த்து கொண்டே இருக்க.
"என்ன உமா நான் சொல்லுறது புரியுதா"
"ஹ்ம்ம்.. உங்க அப்பாக்கும், என்னோட பொண்ணு நந்தினிக்கு கல்யாணம் பண்ணி வச்சிட்டு நாம பிரிஞ்சிடலாம்னு சொல்லுறியா"
"ஹ்ம்ம்"
"அவுங்க சேர்ந்தா மட்டும் நானும் நீயும் பாதுக்காம வாழ முடியுமா.. இல்லை நாம பாத்துக்கும் போது நினைவு எதுவும் வராதா.."
"உமா.. நான் அது தான் யோசிச்சேன். அவுங்க கல்யாணத்துக்கு அப்புறம் நான் வெளிநாட்டுல எங்கயாவது வேலை வாங்கிட்டு போயிடலாம்னு இருக்கேன்"
"ஓ சார் போயிடுவார்.. நான் மட்டும் அவுங்கள எப்படி face பண்ணுவேன்."
"ஹ்ம்ம்.. சாரி உமா.. எங்க அப்பாவுக்கு ஏதாவது நல்லது பண்ணனும்னு தோணுது. ஆனா அது உன்னை கஷ்டப்படுத்துது. "
அப்படியே சில விஷயங்கள் பேசிட மனசு கொஞ்சம் லேசானது.
இதே போல நந்தினி ஒரு நாள் மதியம் ஸ்டாஃப் ரூம் லஞ்ச் சமயம் சென்றாள். அங்கே கீர்த்தி தனியாக இருந்தார். பாடத்தில் ஏதோ சந்தேகம் கேப்பது போல நின்று கொண்டு "சார்.. கொஞ்சம் தனியா பேசணும். ஈவினிங் காபி ஷாப் ல மீட் பண்ணலாமா"
"ஹ்ம்ம்.. சரி"
இருவரும் அன்று மலை காபி ஷாப்பில் உக்காந்து இருக்க கீர்த்தி "சாரி நந்தினி.. நான் அன்னைக்கு அப்படி பேசி இருக்க கூடாது. ஏதோ ஒரு ஆத்திரத்துல அப்படி பேசிட்டேன்"
"ஹ்ம்ம்.. அம்மா ரொம்ப வருத்தப்பட்டாங்க."
"ஆமா.. பாவம் உன்னை வழக்கவே அவுங்க வாழ்க்கைல குறிக்கோள இருந்து இருக்காங்க. அவுங்கள போயி அப்படி பேசிட்டேன்"
"அது தான் சார் உங்க கிட்ட ஒரு ஹெல்ப் கேட்டு வந்து இருக்கேன்"
"என் கிட்ட என்ன ஹெல்ப்"
"அது வந்து சார். என்னோட அம்மா இவ்வளவு நாள் தனிமைல இறந்துட்டாங்க. இப்போ அவுங்கள ஒரு துணை,, அது தான் கதிர்.. தேர்ந்தெடுத்தாங்க.. அதுல நான் வேற தடையா இருக்கேன்.. அதனாலே.. நாம ஏன் தடையா இருக்கணும் னு.."
கீர்த்தி அவள் முகத்தை பார்த்து கொண்டே "என்ன சொல்ல வர்றே நந்து"
"சார்.. எங்க அம்மாக்கும், கதிர்க்கும் கல்யாணம் நடக்கட்டும்.. நம்ம காதலை மறந்துடலாம்" என்று போட்டுடைத்தாள்.
கீர்த்தி அவளை பார்த்துக்கொண்டே "ஏன் நந்து இந்த பிரச்சனை நாம விட்டுக்கொடுத்தா தீர்ந்துடும்னு நினைக்குறியா"
"ஹ்ம்ம்"
"அவுங்க கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் நீயும் நானும் பாத்துக்க முடியுமா.. இல்லை நம்ம பழைய நினைவு வராம தான் போகுமா"
கதிர் உமா பேசிக்கொண்டது போல கீர்த்தி நந்தினி மேலும் பேசி கொள்ள அவர்களுக்குள் ஒரு வித மனப்போராட்டம் கொஞ்சம் லேசானது.

இரண்டு வாரங்கள் அப்படியே ஓடியது. இனிமையா இருந்த வாழ்க்கைல இப்போ வெறுமை தான் இருந்தது. முன்னே போல சிரித்து பேச முடியவில்லை. கிண்டல் கேலி இல்லை. இப்படியே வாழ்க்கை ஓடினாள் பைத்தியம் பிடித்து விடும் என்று .தோன்றியது.
ஒரு நாள் கீர்த்தி பைக் ஒட்டி கொண்டு சென்று இருந்தார். சில மணி நேரம் கழித்து கதிருக்கு போன் வந்தது
"நான் சப் இன்ஸ்பெக்டர் பேசுறேன். கீர்த்தி உங்களுக்கு என்ன வேணும்."
"அவர் என்னோட அப்பா சார்"
"ஹ்ம்ம். இங்கே கவர்மெண்ட் ஆஸ்பத்திரி வரைக்கும் கொஞ்சம் வர முடியுமா"
"என்ன ஆச்சு சார் அப்பாக்கு"
"பதட்டப்படாதீங்க.. சின்ன ஆக்சிடன்ட் தான். நேரில் வாங்க"
கதிர் ஒரு வித பதட்டத்துடன் வேகமாக ஆஸ்பத்திரி ஓடினான். அங்கே வாசலில் ஒரு ஆம்புலன்ஸ் ட்ரைவர் வந்து "சார் அப்பாவை நான் தான் கூட்டிட்டு வந்தேன்.. கொஞ்சம் கவனிங்க சார்" என்று அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்க பார்த்தான். அப்போது இன்ஸ்பெக்டர் வந்து "ஏய் இவுங்கள எல்லாம் கிளியர் பண்ணு.." என்று சத்தம் போட்டார்.
"கதிர் உள்ளே வாங்க."
அவர் பின்னாடியே போக 3வது மாடியில் ஆபரேஷன் தியேட்டர் வாசலில் கீர்த்தி மயங்கி கிடந்தார். டாக்டர் அவரை பார்த்து விட்டு அங்கே இருந்த அட்மினிடம் "சார் கிட்ட அந்த போர்மில் கையெழுத்து வாங்கிடு" என்று சென்றார். கதிருக்கு என்ன என்று புரியவில்லை.
இன்ஸ்பெக்டர் "கதிர் உங்க அப்பா இன்னைக்கு காலைல பைக் ல போகும் போது எதிர்ல வந்த ஒரு கார் மேல இடிச்சிட்டார். தலைல, கால்ல பலத்த காயம். அவருக்கு first aid கொடுத்தாச்சு. இப்போ ஆபரேஷன் தியேட்டர்ல கொஞ்சம் கிளீன், தையல், ட்ரெஸ்ஸிங் பண்ணனும். கால்ல தான் fracture. அதுல மயங்கிட்டார். டாக்டர் பயப்படுற மாதிரி பெருசா சொல்லல"
கதிர் அங்கே இருந்த சேரில் அப்படியே உக்கார்ந்தான். இன்ஸ்பெக்டர் "சார் அந்த கார் ட்ரைவர் பார்த்தா நல்லவனா தான் தெரியுறான். உங்க அப்பா தான் தப்பான வழியில் வந்து இடிச்சிட்டார்ன்னு தோணுது. அவருக்கு நினைவு திரும்பினதுக்கு அப்புறம் வந்து விசாரிச்சுக்குறேன். நான் கிளம்புறேன். நீங்க பாத்துக்கோங்க" என்று சொல்லிவிட்டு கிளம்பினார்.
ஒரு மணி நேரம் கடந்து இருக்கும். உள்ளே இருந்து "அம்மா வலிக்குதே" என்று குரல் கத்த கதிர் எட்டி பார்த்தான். கீர்த்தி தான் கால்களை புடித்து கொண்டு வலியில் துடித்து அழுவது தெரிந்தது. கொஞ்சம் நேரத்தில் டாக்டர் வெளியே வந்தார். "உங்க அப்பா தானா.. கொஞ்சம் கூட வலிய தாங்கிக்க மாட்டேங்குறார்"
"அவருக்கு தலைல அடிபட்டதுல பெருசா ஒன்னும் ப்ராப்ளேம் இல்லை. வலது கால் தொடை இடுப்பும் சேருற ஜாயிண்ட் ல fracture. அது கொஞ்சம் நேரம் எடுத்து தான் சரி ஆகும்."
மருந்து சீட்டு வாங்கி விட்டு வெளியே வந்து சேரில் உக்கார்ந்தான். கீர்த்தி இன்னும் பாதி மயக்கத்தில் தான் இருந்தார். கதிர் உமாவுக்கு போன் போட்டான். நடந்த ஆக்ஸிடன்ட் பத்தி சொன்னான். உமாவும், நந்தினியும் ஒரு மணி நேரத்தில் ஆஸ்பத்திரி வந்து சேர்ந்தனர். கதிரிடம் எல்லாம் விசாரித்து முடிக்கும் போது நர்ஸ் வந்து "அவருக்கு மயக்கம் தெளிஞ்சிடுச்சு. உள்ள வாங்க" என்று கூட்டி கொண்டு போனார்.
மூவரும் கீர்த்தி அருகே செல்ல, பார்த்தவுடன் நந்தினி கண்களில் பொலபொல என்று கண்ணீர் வடிந்தது. அவள் உடனே உணர்ச்சியில் "ஏய் கீர்த்து.. வண்டிய பாத்து ஓட்ட மாட்டே.. இப்படி படுத்து இருக்கே.."
கீர்த்தி அவளை பார்த்து புன்னகைத்து கொஞ்சம் பேச கஷ்டப்பட்டர். "நான் என்ன வேணும்னே வண்டிய இடிச்சேன். ஏதோ ஒரு ஞாபகத்துல.."
கதிர் "அப்பா.. ரொம்ப வலிக்குதா..டாக்டர் கத்துனீங்கன்னு சொன்னார்"
"ஹ்ம்ம்.. கால நடத்த முடியல"
"ரெஸ்ட் எடுங்க.."
உமா அவரை பார்த்து "சார்.. கொஞ்சம் கவனமா இருந்திருக்கலாம்ல"
கீர்த்தி அவள் முகத்தை பார்க்க கொஞ்சம் வருத்தப்பட்டார். அன்னைக்கு அப்படி பேசினதுக்காக. "ஹ்ம்ம்.. விதி அடிபடணும்னு இருந்திருக்கு" என்று சிரிக்க முற்பட்டார்.
"நல்லா ரெஸ்ட் எடுங்க சார்"
சொல்லிவிட்டு மூவரும் ரூம் விட்டு வெளியே வந்தனர். உமா "கதிர் நீ அப்பாவை பாத்துக்கோ. நான் வீட்டுக்கு போய் நந்தினி கிட்ட உனக்கும் அப்பாக்கும் டின்னர் கொடுத்து விடுறேன்"
"இருக்கட்டும் உமா.. நான் இங்கேயே ஹோட்டல்ல பாத்துக்குறேன்"
"ஏய்.. ஹோட்டல்ல நீ சாப்பிட்டுக்கலாம்..அப்பா எப்படி... ஒரு அரை மணி நேரத்துல செஞ்சு கொடுத்து விடுறேன்"
உமாவும் நந்தினியும் வீட்டுக்கு சென்று கொஞ்சம் ரசம் சாதம், உருளைக்கிழங்கு பொரியல், மோர். எடுத்து பேக் பண்ணினாள். நந்தினி எடுத்து கொண்டு வந்து ஆஸ்பத்திரியில் கொடுத்தாள். கீர்த்தி கொஞ்சம் கஷ்டப்பட்டாலும் வீட்டு சாப்பாடு கொடுத்த தெம்பில் சீக்கிரம் சாப்பிட்டு முடித்தார்.
மறுநாள் காலையும் உமா அவர்களுக்கு பிரேக்ஃபாஸ்ட் செய்து கொடுத்து விட்டாள். அன்று மதியம் வீட்டுக்கு டிஸ்சார்ஜ் பண்ணிவிடலாம் என்று டாக்டர் சொன்னார். இனிமே வீட்ல ஒரு மாசம் பெட்ரெஸ்ட் எடுக்க சொல்லி எழுதி தந்தார். கீர்த்தி தலைல, காலில் பெரிய கட்டு போடப்பட்டு இருந்தது. நந்தினியும், கதிரும் கீர்த்தியை புடித்து கொண்டு ஆஸ்பத்திரியில் இருந்து ஒரு சின்ன வண்டி ஏற்பாடு செய்து வீடு வந்து சேர்ந்தனர்.
அப்போது உமாவும் கீர்த்தி வீட்டுக்கு வந்து இருந்தாள். அவரை பெட்டில் படுக்க வைத்து விட்டு மூவரும் வெளிய வந்தனர்.
கதிர் "உமா.. ரொம்ப தேங்க்ஸ்.. நீ பண்ண இந்த உதவிக்கு"
உமா "ஏய்.. எதுக்கு தேங்க்ஸ் எல்லாம்.."
நந்தினி "ஆமா கதிர்.. நாங்க இருக்கோம்.. என்ன வேணும்னாலும் ஹெல்ப் பண்ண."
உமா அன்று இரவு வரை உணவு செய்து கொடுத்து இருந்ததில் கதிருக்கு அப்பாவை கவனிக்க முடிந்தது. மறுநாள் வேலைக்கு போக வேண்டும். அப்பாவை எப்படி பாத்துக்க.. என்று யோசிக்க ஆரம்பித்தான்.

இந்த சம்பவத்தால் விதி அவர்கள் வாழ்க்கையில் விளையாடிய விளையாட்டை அடுத்த பதிவில் பார்க்கலாம்.