Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
கிளென் மெக்ரா, வாசிம் அக்ரம்,  முரளிதரன் மாவீரர்கள் சாதனைப் பட்டியலில் இணைந்த மலிங்கா
[Image: lashitjpg]படம். | ஏ.பி.

இங்கிலாந்துக்கு எதிரான உலகக்கோப்பைப் போட்டியில் அதிர்ச்சி வெற்றி பெற்ற இலங்கை அணிக்கு சூத்ரதாரியாக விளங்கியவர் லஷித் மலிங்கா. இவர் பேர்ஸ்டோ, வின்ஸ், ரூட், பட்லர் ஆகிய இங்கிலாந்து பேட்டிங்கின் முதுகெலும்பை உடைக்க இங்கிலாந்து படுதோல்வியைச் சந்தித்தது.
10 ஓவர் 1 மெய்டன் 43 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய லஷித் மலிங்கா உலகக்கோப்பை சாதனையில் மெக்ரா, முரளிதரன், வாசிம் அக்ரம் ஆகியோருடன் சாதனைப் பட்டியலில்இணைந்தார்.
உலகக்கோப்பைப் போட்டிகளில் 50 விக்கெட்டுகளுக்கும் மேல் வீழ்த்தியவர்கள் பட்டியலில் ஆஸி. மேதை கிளென் மெக்ரா 39 போட்டிகளில் 71 விக்கெட்டுகளுடன் முதலிடம் வகிக்கிறார். முரளிதரன் 40 போட்டிகளில் 68 விக்கெட்டுகள், வாசிம் அக்ரம் 38 போட்டிகளில் 55 விக்கெட்டுகள், அடுத்த இடத்தில் மலிங்கா 26 போட்டிகளில் 51 விக்கெட்டுகள் என்று 4 இடங்களில் சாதனையாளர்களுடன் இணைந்தார் மலிங்கா.
5வது இடத்தில் 49 விக்கெட்டுகளுடன் இலங்கையின் மற்றொரு பவுலர் சமிந்தா வாஸ் உள்ளார். ஆகவே உலகக்கோப்பையில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியதில் முதல் 5 இடங்களில் 3 இடங்கள் இலங்கை பவுலர்களுக்குரியது!! இந்தியாவைப் பொறுத்தவரையில் ஜாகீர் கான், ஸ்ரீநாத் 44 விக்கெட்டுகளுடன் 6 மற்றும் 7ம் இடங்களில் உள்ளனர்.
கடைசியாக இங்கிலாந்து அணி உலகக்கோப்பையில் இலங்கையை வீழ்த்தியது 1999-ல்தான் அதன் பிறகு 2007-ல் 2 ரன்களிலும் 2011-ல் கொழும்புவில் 10 விக்கெட்டுகளிலும், 2015-ல் வெலிங்டனில் 9 விக்கெட்டுகளிலும், 2019-ல் 20 ரன்களிலும் இங்கிலாந்து இலங்கையிடம் தோல்வி தழுவியது குறிப்பிடத்தக்கது.
உலகக்கோப்பைக்கு முன்னதாக படுதோல்விகளை ஒருநாள் போட்டிகளில் சந்தித்து வந்த இரு அணிகளிடம் இந்த உலகக்கோப்பையில் இங்கிலாந்து தோல்வி தழுவியது. ஒன்று பாகிஸ்தான். இந்த அணி 11 ஒருநாள் போட்டிகளில் தோல்விகளுடன் இங்கிலாந்தைச் சந்தித்து வெற்றி கண்டது. அதே போல் இலங்கையிடம் நேற்று தோல்வி தழுவியது.
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தற்போதைய செய்திகள் - by johnypowas - 22-06-2019, 09:43 AM



Users browsing this thread: 51 Guest(s)