22-06-2019, 09:31 AM
`அவர் மட்டும் இல்லை என்றால்....!' - சரியான நேரத்தில் குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய நிருபர்!
பீகார் மாநிலம் முசாஃபர்பூர் மாவட்டத்தில் மூளைக் காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 120-ஐ தொட்டுள்ளது. இப்படியான நிலையில் மூளைக்காய்ச்சலால் அவதிப்பட்ட குழந்தையைச் சரியான சமயத்தில் மருத்துவமனைக்கு கொண்டு சென்று அவரின் உயிரைக் காப்பாற்றியுள்ள நபருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. அமீர் ஹம்சா என்னும் அந்த நபர் பீகார் செய்தி சேனல் ஒன்றின் நிருபர். சமீபத்தில் முசாஃபர்பூர் அருகே உள்ள கிராமத்தின் சாலையோரத்தில் தாய் ஒருவர் மூளைகாய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தையுடன் பரிதாபமாக உட்கார்ந்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு தான் காய்ச்சலுக்குச் சிகிச்சை பெற்றுவந்த அந்தக் குழந்தை காய்ச்சல் குணமானதால் வீடு திரும்பியுள்ளது. வீடு திரும்பியதும் மீண்டும் காய்ச்சல் ஏற்படவே குழந்தையை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர்.
என்னால் அவ்வளவு தூரம் குழந்தையைத் தூக்கிச்செல்ல முடியவில்லை. சரியான சமயத்தில் வந்து எங்களை ஆஸ்பத்திரிக்குக் கொண்டுவந்தார் அமீர். அவரால் தான் இன்று என் குழந்தை உயிர் பிழைத்துள்ளது" எனக் கண்ணீருடன் கூறியுள்ளார் அந்தப் பெண். ``நான் வேறு ஒரு வேலைக்காக மிஸ்ஹான் பூரா சென்றுகொண்டிருந்தேன். அப்போது தான் சாலையில் தன் குழந்தையுடன் அழுதபடி அந்தத் தாய் உட்கார்ந்திருந்தார். என்னவென விசாரித்த போது குழந்தையின் உடல்நலம் குறித்து கூறினார். இந்த நோய் குறித்து தற்போது அதிகமாகப் பார்த்துவருகிறேன். அதனால் இந்த நோயின் தீவிரம் நன்றாகவே தெரியும். அதனால் தான் இனியும் தாமதிக்கக்கூடாது என எனது பைக்கிலேயே அவர்களை மருத்துவமனைக்கு கூப்பிட்டுச் சென்றேன்" எனக் கூறுகிறார் அமீர். இவர் பாதிக்கப்பட்ட குழந்தையை பைக்கில் அழைத்துச் செல்லும் புகைப்படத்தை அங்கிருந்தவர்கள் வலைதளங்களில் பதிவிட அமீரின் மனிதநேயத்துக்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

நீண்ட தூரம் நடந்து வந்தால் என்ன செய்வதென்று தெரியாமல் விழிபிதுங்கிப் போய் உதவியை எதிர்பார்த்து தெருவோரத்தில் உட்கார்ந்து அழுதுகொண்டிருந்துள்ளார் அந்தத் தாய். அப்போது அங்கு இருந்தவர்கள் எல்லாம் அவர்களை வேடிக்கை பார்த்தவாறே இருக்க அந்த வழியாக வந்த நிருபர் அமீர் இதைப் பார்த்ததும் இருவரையும் தன் பைக்கில் ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தார். மருத்துவமனைக்குச் சென்றபிறகு தான் குழந்தையின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தது தெரியவந்தது. காய்ச்சல் அதிகமானதால் குழந்தையின் உடல் அதிக வெப்பத்தால் தகித்துள்ளது. சிறிது தாமதமாகியிருந்தாலும் குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும் என மருத்துவர்கள் விளக்கியதுடன் அந்த நிருபரின் செயலை பாராட்டியுள்ளனர். ``நீண்ட நேரம் சாலையில் உட்காந்திருந்தேன். யாரும் உதவ முன்வரவில்லை.
என்னால் அவ்வளவு தூரம் குழந்தையைத் தூக்கிச்செல்ல முடியவில்லை. சரியான சமயத்தில் வந்து எங்களை ஆஸ்பத்திரிக்குக் கொண்டுவந்தார் அமீர். அவரால் தான் இன்று என் குழந்தை உயிர் பிழைத்துள்ளது" எனக் கண்ணீருடன் கூறியுள்ளார் அந்தப் பெண். ``நான் வேறு ஒரு வேலைக்காக மிஸ்ஹான் பூரா சென்றுகொண்டிருந்தேன். அப்போது தான் சாலையில் தன் குழந்தையுடன் அழுதபடி அந்தத் தாய் உட்கார்ந்திருந்தார். என்னவென விசாரித்த போது குழந்தையின் உடல்நலம் குறித்து கூறினார். இந்த நோய் குறித்து தற்போது அதிகமாகப் பார்த்துவருகிறேன். அதனால் இந்த நோயின் தீவிரம் நன்றாகவே தெரியும். அதனால் தான் இனியும் தாமதிக்கக்கூடாது என எனது பைக்கிலேயே அவர்களை மருத்துவமனைக்கு கூப்பிட்டுச் சென்றேன்" எனக் கூறுகிறார் அமீர். இவர் பாதிக்கப்பட்ட குழந்தையை பைக்கில் அழைத்துச் செல்லும் புகைப்படத்தை அங்கிருந்தவர்கள் வலைதளங்களில் பதிவிட அமீரின் மனிதநேயத்துக்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
முசாஃபர்பூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் குழந்தைகள் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. இது குறித்து ஆய்வு செய்த எய்ம்ஸ் மருத்துவர்கள் குழுவோ பீகார் மருத்துவர்களுக்கு போதிய திறமை இல்லை எனத் திடுக்கிடும் அறிக்கை கொடுத்துள்ளது. ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவமனை கல்லூரி, கெஜ்ரிவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகள் அதிக அளவு உயிரிழந்துள்ளனர். உயிரிழப்பு மூளைக் காய்ச்சல் தான் காரணம் என்றும் தெரிந்த பின்பும் அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுப்பதன்று தெரியாமல் தவித்து வருகிறது. காரணம், இந்த மாதம் மட்டும் முசாஃபர்பூர் பகுதியில் 40 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாக வெப்பம் நிலவி வருகிறது. ஏற்கெனவே ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகள் இந்த வெப்பத்தைத் தாங்கிக்கொள்ள முடியாமல் உயிரிழக்கும் நிலைக்குச் செல்கின்றனர். இந்தப் பிரச்னை முசாஃபர்பூருக்கு புதியது ஒன்றும் கிடையாது. இது பல வருடங்களாக நடைபெற்றுக்கொண்டுதான் உள்ளது. முசாஃபர்பூர் மாவட்டம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் கோடைக்காலங்களில் அந்த நோய் அதிகம் தாக்கப்படுவது வழக்கமாக உள்ளது.
first 5 lakhs viewed thread tamil