22-06-2019, 09:29 AM
`குளிக்க 2 வாளி, குடிக்க 4 லிட்டர் தண்ணீர்தான்!'- முதல்வர் எடப்பாடி விளக்கம்
சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளிலும் வெயில் வாட்டி வருகிறது. இதனால் நிலத்தடி நீர் குறைந்து ஏரி, குளங்களிலும் தண்ணீர் இல்லாமல் போய் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. சென்னை போன்ற பெரு நகரங்களில் உள்ள மக்கள் ஒரு குடம் குடிநீருக்காக கடும் சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில், இன்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், ``தினமும் ஜோலார்பேட்டையிலிருந்து ரயில் மூலமாகச் சென்னைக்குத் தண்ணீர் கொண்டுவருவது குறித்து ஆலோசனை நடத்தினோம். அதற்காக 65 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வீராணம் ஏரியிலிருந்து தண்ணீர் கொண்டுவர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னையில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையைச் சமாளிக்க முடிந்தவரை துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. அதிக தண்ணீர் பிரச்னைகள் உள்ள பகுதிகளில் கூடுதல் லாரிகள் இயக்கப்பட்டு தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
என் வீடு மற்றும் அமைச்சர்கள் வீடுகளுக்குத் தினமும் 2 லாரி தண்ணீர் வருவதாகக் கூறுவது தவறான செய்தி. உங்கள் வீட்டுக்கு தண்ணீர் வருவது போலத்தான் அனைவரது வீட்டுக்கும் செல்கிறது. அமைச்சர்கள் வீட்டுக்குத் தண்ணீர் செல்வது இயல்பான ஒன்றுதான். கடந்த 2 மாதமாக என் வீட்டில் நான் மட்டும்தான் வசித்து வருகிறேன். 2 லாரி தண்ணீரை வைத்துக்கொண்டு தனி ஆளாக நான் என்ன செய்யப் போகிறேன். நான் தினமும் 2 வாளி தண்ணீர் பயன்படுத்துவேன், அதிகமாக 4 லிட்டர் தண்ணீர் குடிப்பேன் அவ்வளவுதான்.
எங்களைப் போல அமைச்சர்கள் வீட்டில் ஒரு நாளுக்கு பல பேர் வருவார்கள். அதிகாரிகள், வேலையாட்கள் இருப்பார்கள். உங்களைப் போல பத்திரிகையாளர்களும் தினமும் வருவார்கள். அவர்களுக்குத் தண்ணீர் வழங்க வேண்டும். நீங்கள் என் வீட்டுக்கு வந்து நான் தண்ணீர் வழங்கவில்லை என்றால் வெளியில் வந்து முதல்வர் வீட்டில் ஒரு டம்ளர் தண்ணீர்கூட வழங்கவில்லை என சொல்லக் கூடாது அல்லவா. அதற்காகதான் சற்று கூடுதலாக வருகிறது. 2 லாரி தண்ணீர் வரவில்லை.
ஆன்லைன் மூலம் தண்ணீர் புக் செய்பவர்கள், ஒரே அப்பார்ட்மென்டில் இருந்துகொண்டு 10 லாரி தண்ணீர் கேட்கிறார்கள். ஒருவருக்கே எப்படி அவ்வளவு தண்ணீர் வழங்கமுடியும். மேலும், அவர்கள் எவ்வளவு பணம் கொடுத்தும் தண்ணீர் வாங்கத் தயாராக இருக்கிறார்கள். அதனால்தான் இதைப் பயன்படுத்தி சிலர் அனைவரிடமும் அதிக பணம் வசூலிக்கின்றனர். எங்களிடம் குறிப்பிட்ட அளவிலான லாரிகள் மட்டுமே உள்ளது. அவற்றில் சிலவற்றை நாங்கள் அரசுப் பணிகளுக்காகப் பயன்படுத்திவருகிறோம். அதுபோக மீதமுள்ள லாரிகள்தான் மக்களுக்கு அனுப்பப்படுகிறது. எங்களால் முடிந்த வரை அனைத்து மக்களுக்கு முறையாகத் தண்ணீர் வழங்கி வருகிறோம்” எனக் கூறி முடித்தார்.
சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளிலும் வெயில் வாட்டி வருகிறது. இதனால் நிலத்தடி நீர் குறைந்து ஏரி, குளங்களிலும் தண்ணீர் இல்லாமல் போய் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. சென்னை போன்ற பெரு நகரங்களில் உள்ள மக்கள் ஒரு குடம் குடிநீருக்காக கடும் சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில், இன்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், ``தினமும் ஜோலார்பேட்டையிலிருந்து ரயில் மூலமாகச் சென்னைக்குத் தண்ணீர் கொண்டுவருவது குறித்து ஆலோசனை நடத்தினோம். அதற்காக 65 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வீராணம் ஏரியிலிருந்து தண்ணீர் கொண்டுவர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னையில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையைச் சமாளிக்க முடிந்தவரை துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. அதிக தண்ணீர் பிரச்னைகள் உள்ள பகுதிகளில் கூடுதல் லாரிகள் இயக்கப்பட்டு தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
சென்னையைப் பொறுத்தவரை தினமும் 9,800 லாரிகள் தண்ணீர் சப்ளை செய்து வருகின்றன. வருடம்தோறும் ஆந்திராவின் கிருஷ்ணா நதியில் இருந்து தமிழகத்துக்கு 12 டி.எம்.சி தண்ணீர் வரும். ஆனால், இந்த வருடம் 2 டி.எம்.சி மட்டுமே வந்துள்ளது. அவர்களிடமும் போதுமான தண்ணீர் இல்லை எனக் காரணம் தெரிவித்துவிட்டனர். கிராமப் பகுதிகளிலும் தேவையான தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. குவாரிகளில் இருந்தும் தண்ணீர் எடுத்து வழங்கப்பட்டு எங்களால் முடிந்த அளவு தண்ணீர் பிரச்னையைச் சரிசெய்து வருகிறோம்.
கேரள முதல்வர் ஒரு நாளுக்கு மட்டும்தான் 20 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்குவதாகக் கூறினார். தினமும் வழங்குவதாகக் கூறவில்லை. தண்ணீர் தருவதாக கூறிய முதல்வருக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். ஆனால், தினமும் 20 லட்சம் லிட்டர் தண்ணீர் கொடுத்தால் தமிழக மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதற்காக நான் கேரள முதல்வருக்குக் கடிதம் எழுதவுள்ளேன்.
என் வீடு மற்றும் அமைச்சர்கள் வீடுகளுக்குத் தினமும் 2 லாரி தண்ணீர் வருவதாகக் கூறுவது தவறான செய்தி. உங்கள் வீட்டுக்கு தண்ணீர் வருவது போலத்தான் அனைவரது வீட்டுக்கும் செல்கிறது. அமைச்சர்கள் வீட்டுக்குத் தண்ணீர் செல்வது இயல்பான ஒன்றுதான். கடந்த 2 மாதமாக என் வீட்டில் நான் மட்டும்தான் வசித்து வருகிறேன். 2 லாரி தண்ணீரை வைத்துக்கொண்டு தனி ஆளாக நான் என்ன செய்யப் போகிறேன். நான் தினமும் 2 வாளி தண்ணீர் பயன்படுத்துவேன், அதிகமாக 4 லிட்டர் தண்ணீர் குடிப்பேன் அவ்வளவுதான்.
ஆன்லைன் மூலம் தண்ணீர் புக் செய்பவர்கள், ஒரே அப்பார்ட்மென்டில் இருந்துகொண்டு 10 லாரி தண்ணீர் கேட்கிறார்கள். ஒருவருக்கே எப்படி அவ்வளவு தண்ணீர் வழங்கமுடியும். மேலும், அவர்கள் எவ்வளவு பணம் கொடுத்தும் தண்ணீர் வாங்கத் தயாராக இருக்கிறார்கள். அதனால்தான் இதைப் பயன்படுத்தி சிலர் அனைவரிடமும் அதிக பணம் வசூலிக்கின்றனர். எங்களிடம் குறிப்பிட்ட அளவிலான லாரிகள் மட்டுமே உள்ளது. அவற்றில் சிலவற்றை நாங்கள் அரசுப் பணிகளுக்காகப் பயன்படுத்திவருகிறோம். அதுபோக மீதமுள்ள லாரிகள்தான் மக்களுக்கு அனுப்பப்படுகிறது. எங்களால் முடிந்த வரை அனைத்து மக்களுக்கு முறையாகத் தண்ணீர் வழங்கி வருகிறோம்” எனக் கூறி முடித்தார்.
first 5 lakhs viewed thread tamil