கும்முன்னு குமுதா[நிறைவுற்றது]
#34
【33】

காபி குடித்த பிறகு, தனது சொத்துக்கள் பற்றிய விவரங்கள் யார் யாருக்கு என்ன கொடுப்பேன் என சொல்லிக் கொண்டிருந்தார் நந்தாவின் பெரியப்பா.

பூர்வீக சொத்துகளில் தற்போது இருக்கும் வீட்டைத் தவிர எல்லாவற்றையும் என்னுடைய காலத்திற்கு பிறகு உங்க ரெண்டு பேருக்கும் ஆளுக்கு பாதி என்றார்.

இந்த வீடு மட்டும் எனக்கு யாரு முதல்ல பேரன் பேத்தி பெத்து குடுக்கறீங்களோ அவங்களுக்கு. நா‌ன் அவளுக்கு முன்ன போய் சேரந்துட்டா  பெரியம்மாவுக்கு அவங்க தம்பி கூட இருக்க ஆசை.  அவ பேருல இருக்குற சொத்து யாரு அவள பார்த்துக்குறாங்களோ அவங்களுக்கு என்றார். ஒருவேளை அவ தம்பி அந்த பசங்க பெரியம்மாவ பார்த்துக்கலன்னா நீ தான் பார்த்துக்கணும் என்றார்.

உனக்கு தெரியும் தான? அவ தம்பி தான் விவசாயம் பண்றதுன்னு எல்லாமே பார்த்துக்ககுறான். அவங்க முத பய்யன் படிக்க காசு தேவை இருந்தப்ப அடமானம் வச்சிட்டோம். அதான் இவ (குமுதா) கல்யாண டைம்ல என்னால எதுவும் பண்ண முடியலை. உங்க அம்மாவுக்கு நான் எந்த ஹெல்ப்பும் பண்ணலன்னு கொஞ்சம் வருத்தம் என்றார்.

அப்படியெல்லாம் இல்லை பெரியப்பா. அம்மாவுக்கு உங்க மேல வருத்தம் எல்லாம் இல்லை. நான் படிக்கும் போது ஃபீஸ் கட்ட ஹெல்ப் பண்ணுனது நீங்கன்னு பெருமையா சொல்வாங்க என்றான்.

நந்தாவின் அம்மாவுக்கு அவனது பெரியம்மா மீது கோபம் இருந்தது.. அவளது  தம்பி குடும்பத்துக்கு உதவும் எண்ணத்தில் நமக்கு உதவவில்லை என்ற கோபம். உண்மையான காரணம் அவளுக்கு தெரியாதே. விலை பேசினார்கள். பெரியம்மா பெயரில் இருந்த இரண்டு இடங்களை அடிமாட்டு விலைக்கு கேட்டார்கள். ஒரு இடம் மட்டும் அடமானம் வைத்த தொகை தவிர்த்து 10 லட்சம் அளவுக்கு கைக்கு வருவது போல இருந்தது. அந்த இடத்தை விற்றால் தன் மகளுக்கு மாப்பிள்ளை பார்க்கும் தம்பி எப்படியும் காசு எதிர்பார்ப்பான், அடமானம் வைத்த தொகையும் நாமே கட்ட வேண்டியது வரும். இதனால் இரு குடும்பங்களுக்கும் மனஸ்தாபம் வரும் என்று பெரியம்மா சொல்ல, அந்த இடத்தை விற்க வேண்டாம் என முடிவு செய்தார்கள்.

ரெயில்வே ஸ்டேஷன் போகலாம் அடம்பிடித்து பூஜா அவளது அம்மா அப்பாவுடன் வந்தாள். கையில் கொஞ்சம் ஆப்பிள் பழம் மற்றும் ஸ்வீட்.

உங்க மகளை இப்படியே கூட்டிட்டு போகட்டுமா எனக் கேட்டாள் குமுதா.

பூஜாவின் அப்பா சிரித்தார்.

சரின்னு சொல்லு என தன் அம்மாவை இடித்துக் கொண்டிருந்தாள்.

சும்மா இருடி என சொன்ன அம்மாவை எரித்து விடுவதைப் போல பார்த்தாள் பூஜா.

கொஞ்ச நேரம் தன் அப்பா எதாவது சொல்லுவார் என அவர் முகத்தையே பார்த்தாள் பூஜா. அவர் பதில் சொல்லவில்லை.. கடுப்பாகிப் போனாள்..

எனக்கு ஓகே அண்ணி.

குமுதா - சரி மாமா, நாங்க கூட்டிட்டு போறோம். உங்களுக்கு ஓகே வா..

அப்பா - ஏம்மா நீ வேற..

பூஜா அவளது அப்பா காதில் வேறு யாருக்கும் கேட்காத அளவுக்கு பேசினாள். அதைப்பார்த்த நந்தாவும் குமுதாவும் சிரித்துக் கொண்டிருந்தார்கள்.

உங்ககிட்ட முதல்ல பேசுனதுல இருந்து ரொம்ப அடம் பிடிக்கிறா. என்ன மாய மந்திரம்னு தெரியலை..

ஆமா என்பதைப் போல தலையை அசைத்தாள் பூஜாவின் அம்மா.

நந்தாவுக்கு வெட்கமாக இருந்தது.

அய்யய்யோ!!! என வெட்கப்படும் அண்ணனை பார்த்து சிரித்தாள்.

நீ வரவேண்டாம் பூஜா, உங்க ரெண்டு பேருக்கும் என்னால காவல் இருக்க முடியாது. மேரேஜ் ரிஜிஸ்டர் ஆகட்டும் என்று சொல்லி குமுதா சிரித்துக் கொண்டிருந்தாள்.

ரயில் நம்பர் மற்றும் பெயரை சொல்லி ப்ளாட்ஃபார்ம் நோக்கி வருவதாக அறிவிப்பு வந்தது.

பூஜாவின் கண்களில் கண்ணீர்.

குமுதாவின் கண்களிலும் கண்ணீர் தேங்கியது.

பூஜாவுக்கு நந்தா மற்றும் குமுதா தன்னை இங்கேயே விட்டுச் செல்கிறார்கள் என்ற வருத்தம்.

செ‌ன்னை செல்லும் ரயிலை பிடிப்பதற்காக அவசர அவசரமாக மூச்சிரைக்க அங்கே வந்து சேர்ந்து தாயின் மடியில் இருக்கும் 1 வயதுள்ள குழந்தை  குமுதாவைப் பார்த்து சிரிக்க அதைப் பார்த்த குமுதா கண்களில் கண்ணீர் தேங்கி வழிய தொடங்கியது...
Like Reply


Messages In This Thread
தங்கை குமுதாவுடன் தனிமையில்...【33】 - by JeeviBarath - 27-06-2024, 05:23 PM



Users browsing this thread: 4 Guest(s)