கும்முன்னு குமுதா[நிறைவுற்றது]
#18
【17】

⪼ நேற்று ~ பூஜாவின் வீட்டில் ⪻

பொது இடத்தில் வைத்து பெண் பார்க்கும் படலம் நடந்து முடிந்த பிறகு, வீட்டிற்கு வந்த கொஞ்ச நேரத்தில் தன் அண்ணன் மற்றும் தங்கைக்கு ஃபோன்கால் செய்து வரன் பேசி முடித்திருப்பதாக பூஜாவின் அப்பா சொன்னார்.

எல்லோருக்கும் சந்தோஷம். ஆனால் நந்தாவுக்கு நிறைய கடன் இருக்கும் விஷயம் அவர்களும் ஏற்கனவே அறிந்த விஷயம் என்பதால் தங்கள் கவலைகளை சொன்னார்கள். 

பூஜாவின் பெரியப்பா மாலை தன் தம்பியின் வீட்டுக்கு வந்தார். அந்த பய்யன் ஊர்ல தெரிஞ்சவங்க கிட்ட பேசினேன். பையன் தங்கமான பையன், ஆனா அவனுக்கு 20 லட்ச ரூபாய்க்கு மேல கடன் இருக்கலாம்னு சொன்னாங்க. சம்பளம் 65,000 தான். செலவு அப்படி இப்படின்னு பார்த்தா அந்த கடன் அடைய 5 வருசத்துக்கு மேல ஆகிடும். அவங்க சொத்து மேல நடக்குற வழக்கு அதுக்கு முன்ன முடியாது.

இது நம்ம பொண்ணு வாழ்க்கை அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம் என தன் தம்பிக்கு அறிவுரை சொன்னார்.

12 லட்சம் கடன் இருப்பதாகவும், தங்கையின் கணவர் உதவி செய்வேன் என சொல்லியிருப்பதாகவும் நந்தாவின் பெரியப்பா சொல்லியிருந்த நிலையில் தன் அண்ணன் சொல்வதைக்கேட்ட பூஜாவின் அப்பாவுக்கு தன் நண்பர் (நந்தாவின் பெரியப்பா) மேல் ரொம்ப வருத்தம். இப்படி நம்மள கடனை குறைந்த அளவில் சொல்லி ஏமாத்தி விட்டானே என்று.

பூஜாவின் அப்பா அம்மா இருவரும் அன்று இரவு நந்தாவின் தங்கை கணவர் உதவ வாய்ப்பில்லை, அவங்க அம்மா விடமாட்டா. நம்ம பொண்ணு எத்தனை வருஷம் கடனில் இருப்பா என நிறைய நேரம் ஆலோசனை செய்தார்கள். வரன் வேண்டாம் என சொல்லலாம் மற்றும் காலையில் பூஜாவிடம் பேசுவது என்றும் முடிவு செய்தார்கள்.

ஆனால் இரவே பூஜா எப்படியும் நமக்கு நந்தாவுடன் கல்யாணம், அவர்தான் என கணவர் என நினைத்து தன் காதலை வெளிப்படுத்தி விட்டாள்.

⪼ இன்று ⪻ 

காலையில் எழுந்து மெசேஜ் அனுப்பிக் கொண்டிருந்த பூஜாவை பார்த்ததும் தன் மகள் நந்தாவுடன் பேசுகிறாள் என நினைத்து தன் மனைவியை உடனே பேச சொன்னார்.

பூஜாவின் பெரியப்பா சொன்ன தகவல் மற்றும் தங்கள் முடிவை அவளது அம்மா தெரிவிக்க, பூஜா சிரித்தாள்.

அவளது செல்போனில் இருந்த ஸ்கிரீன் ஷாட்களை தன் அப்பாவிடம் காட்ட ஆரம்பித்தாள். நந்தா தான் வாங்கும் சம்பளம் இன்னும் எவ்வளவு கடன் இருக்கிறது என்பதை அவளிடம் தெரிவிக்க அனுப்பியவை. நந்தா அனுப்பிய பாங்க் ஸ்டேட்மெண்ட்டையும் காட்டினாள்.

நந்தா தன்னிடம் சொன்ன விஷயங்களை தன் அப்பாவிடம் சொல்ல ஆரம்பித்தாள். நந்தாவின் மாத சம்பளம், மாதா மாதம் ஈ எம் ஐ கட்டும் பணம், கடன் இருக்குறதால 10-12 ஆயிரம் ரூபாய்க்கு மேல செலவு செய்யாமல் கஞ்சமாக இருப்பது என எல்லாம் சொன்னாள்.

தங்கை கணவர் நல்லவர், உதவி செய்ய நினைப்பார். ஆனா அவங்க அம்மா விடமாட்டாங்க. என் தங்கச்சி சொன்னதை வச்சி என் பெரியப்பா உங்க அப்பா கிட்ட சொல்லிருப்பார், ஆனா அப்படி நடக்க வாய்ப்பு ரொம்ப குறைவு.

எல்லாம் பிளான்படி நடந்தா ஒரு லோன் இன்னும் 6-8 மாசத்துல ஃப்ரீ க்ளோஸ் பண்ணிடுவேன். அதுக்கு பிறகு 30-35 மாதாமாதம் செலவுக்கு கையில இருக்கும். என்னை கல்யாணம் பண்ணுனா அடுத்த 3-5 வருஷம் ரொம்ப சிக்கனமா கஞ்சத்தனம் நிறைந்த ஆளா இருக்கணும். உன்னால முடியுமா? நல்லா யோசித்து உன் விருப்பத்தை சொல்லு என நந்தா சொல்லிய விஷயங்களை சொன்னாள் பூஜா.

எதையும் மறைக்காமல் எல்லா விஷயங்களையும் வெளிப்படையா சொன்னாங்க எனக்கு அவங்களை பிடிச்சிருக்கு என்றாள் பூஜா.

கையில காசு பெருசா இல்லை கல்யாணத்துக்கு இனி கடன் வாங்குவான், இது நமக்கு சரிபட்டு வராது பூஜா என்றார் அப்பா...

அப்பாவும் மகளும் கொஞ்ச நேரம் பேசினார்கள்.

நீ பேசுவதை பார்த்தா, யாருக்கும் சொல்லாம ரிஜிஸ்டர் மேரேஜ் தான் பண்ணணும் என்றாள் அம்மா.

அதுல என்ன தப்பு?

ஊரு என்ன பேசும் தெரியுமா பூஜா என்றார் அப்பா.

நீங்க இன்னும் கொஞ்சம் நகை வாங்கணும், கல்யாண செலவு ஆகுற பணம் எல்லாத்தையும் அவங்க கிட்ட கொடுத்தா கடன் பாதிக்கு மேல அடைந்திடும்.

பூஜா இப்படி பேசுவதை கேட்ட அப்பா அம்மா இருவருக்கும் ஷாக்.

பூஜா சொல்வதில் அர்த்தம் இருக்கிறது. கடன் தவிர எந்த பிரச்சனையும் அவன்மேல் இல்லை. ரொம்ப தங்கமான பையன், பூஜாவின் அப்பாவுக்கு சிறு குழப்பம்..

ஒரு ரெண்டு நாளைக்கு அமைதியா இரு, அவங்க கிட்ட பேசாத. எல்லாரும் பேசி ஒரு முடிவு எடுக்கலாம் என்றார் பூஜாவின் அப்பா.

ரிஜிஸ்டர் மேரேஜ் செய்தால் இன்னும் 1 வருடம் காத்திருக்க அவசியம் இல்லை எ‌ன்று‌ நினைத்த பூஜா நந்தாவுக்கு "ரிஜிஸ்டர் மேரேஜ்" பற்றி மெசேஜ் செய்தாள்...

@Gilmashorts in YouTube, X, Instagram
Like Reply


Messages In This Thread
தங்கை குமுதாவுடன் தனிமையில்...【17】 - by JeeviBarath - 27-06-2024, 05:14 PM



Users browsing this thread: