31-12-2024, 07:42 AM
முதிர் கன்னி
【04】
【04】
நள்ளிரவில் சாக்லேட் தின்னும் பெண்ணை பார்த்த பிறகு என் வயிற்றுப் பசியும் உடல் பசியுடன் சேர்ந்து கொண்டது. இதோ முடிந்து விடும் என்ற நம்பிக்கையில் வேலை செய்தேனே தவிர இரவு உணவு உண்ணவில்லை.
ஒருவழியாக கடைசி பெண்ணை இறக்கி விட்ட பிறகு வாகனம் என் வீட்டை நோக்கி நகர்ந்தது. ஜிபிஎஸ் 5 நிமிடங்கள் எனக் காட்டியது. வேறு வழியில்லாமல் பிரவீணை அழைத்து இன்னும் 5 நிமிடங்களில் வந்து விடுவேன் கதவை திறந்து வைக்க முடியுமா எனக் கேட்டேன். அவரது குரல் கரகரப்பாக இருந்தது. பாவம் தூங்கிக் கொண்டிருந்தார் போல.
ஆயிரம் ஆசைகளுடன் அலுவலகம் சென்ற எனக்கு, மாலை 5:30 வரை நல்ல விதமாகவே கடந்தது. ஆனால் அடுத்த 7 மணி நேரங்கள் ஏழரை சனி மாதிரி சென்றது. இன்னும் அரைமணி நேரத்தில் ஏழரை சனி முடியும் போது எதுவும் நல்லது நடந்தால், நான் வேண்டாமென சொல்லப் போவதில்லை.
நள்ளிரவு 12:35 க்கு காலிங் பெல் அடித்தேன். கதவை திறந்த பிரவீண் முகத்தில் தூக்க கலக்கம் இல்லை. நன்கு முகத்தை கழுவியிருப்பார் போல. நான் உள்ளே நுழைந்தவுடன் கதவை லாக் செய்தார்.
சாப்ட்டியா எனக் கேட்டுக் கொண்டே என் கையைப் பிடித்தார். ஆணின் ஸ்பரிசத்துக்கு ஏங்கும் என் மேனியில் ஷாக் அடித்தது போல ஒரு உணர்வு.
அவரது பெருவிரலால் என் புறங்கையில் அழுத்தம் கொடுத்த பிறகே சுய நினைவுக்கு வந்தேன். என் மனம் மீண்டும் எதாவது நடக்காதா அலை பாய ஆரம்பித்தது.
இல்லை, நான் எதுவும் சாப்பிடவில்லை என சொன்னேன்.
காலையில் நான் என் ஆடைகளை வைத்த மாஸ்டர் பெட்ரூமுக்கு பதிலாக அடுத்த பெட்ரூமுக்கு அழைத்து சென்றார். ஃப்ரெஷ்ஷப் ஆகிட்டு வா சாப்பிடலாம் என என் காதில் ஓதிவிட்டு சென்றார்.
என்னுடைய லக்கேஜ் பேக் மற்றும் டவல் அந்த அறையில் இருந்தது. அதற்கு மேல் ஒரு பிளாஸ்டிக் கவரும் இருந்தது.
ஏன் எனது லக்கேஜ் இங்கே இருக்கிறது. அந்த கவர் உள்ளே என்ன இருக்கிறது என்ற யோசனை. முதலில் அந்த கவரை எடுத்துப் பார்த்தேன். அதற்குள் பட்டுப் புடவை இருந்தது. முதலிரவில் நான் உடுக்க வாங்கியிருக்க வேண்டும்.
ஒருவேளை மாஸ்டர் பெட்ரூமை முதலிரவுக்கு தயார் செய்திருப்பாரோ? எனக்கு சர்ப்ரைஸ் கொடுக்க இந்த அறைக்கு என் லக்கேஜ் பேக்கை மாற்றி வைத்திருக்கும் வாய்ப்பு இருக்குமோ என்ற எண்ணம் என் ஆசைகளை மென்மேலும் தூண்டியது.
என்ன செய்ய, இந்த பாழாய் போன உடம்பு போய் சேரும் முன் ஒரு முறையேனும் அனுபவிக்க துடிக்கிறதே.
நைட்டி ஒன்றை கட்டிலில் எடுத்து வைத்து விட்டு பாத்ரூம் சென்று என்னை சுத்தம் செய்தேன். வெளியே வந்த பிறகு பிரவீண் எனக்கு வாங்கி வைத்த சேலையை உடுக்கலாம் என்ற எண்ணம் தலை தூக்கியது.
நான் மேலாடைகளை கழைந்து உள்ளாடைகளுடன் என் லக்கேஜ் பேக் உள்ளே அந்த சேலைக்கு ஓரளவுக்கு மேட்ச் ஆகும் ஜாக்கெட்டை ஒன்றை எடுத்தேன்.
என் ப்ராவை குனிந்து பார்த்தேன். காலையில் அணிந்த ப்ராவுடன் அவர் முன் நிற்க வேண்டுமா என்ற எண்ணத்தில் லக்கேஜ் பேக் உள்ளே துவைத்து மடித்து வைக்கப்பட்டிருந்த உள்ளாடைகளை எடுத்தேன்.
கதவை தட்டும் சத்தம்..
இப்படியே கதவை திறந்தால் எத்தனை அழகாக இருக்கும். என் முகத்தில் புன்னகை.
சொல்லுங்க என கதவை திறக்காமல் கேட்டேன்.
சாப்பாடு ரெடி, வாங்க.
2 மினிட்ஸ்.
ஓகே.
அடியே முட்டாள். நீ எப்படி இன்னும் இரண்டு நிமிடத்தில் முதலிரவுக்கு தயாராவாய் என உள் மனது என்னை கடிந்து கொண்டது.
செல்போன் எடுத்து நேரத்தைப் பார்த்தேன், அது 12:50 எனக் காட்டியது. பெருமூச்சு விட்டுக் கொண்டே சேலையை பார்த்தேன். நமக்கு குடுப்பினையில்லை என தலையை அசைத்துக் கொண்டே என் உள்ளாடைகளை அணிந்து கட்டிலில் இருந்த நைட்டியை அணிந்து வெளியே வந்தேன்.
டைனிங் டேபிளில் இரண்டு பிளேட்டில் சூடு செய்யபட்ட பிரியாணி.
வாங்க, சாப்பிடுங்க நானும் உங்களுக்கு கம்பெனி கொடுக்குறேன் என சாப்பிட ஆரம்பித்தார்.
இன்றைய நாள் எப்படி போனது என ஆரம்பித்தார். என் ஆசைகளை நிராசை ஆக்கிய நாளை நான் என்னவென்று சொல்ல?
சாப்பிட்டு முடிக்கும் முன் நடந்தவை அனைத்தையும் சுருக்கமாக சொல்லி முடித்தேன். சாக்லேட் பற்றி பேச, வேற எதாவது மிக்ஸ் பண்ணுன சாக்லேட் போல என சொல்லி சிரித்தார். ஒருவேளை இருக்குமோ என்ற எண்ணம் எனக்குள்ளும் வந்து போனது.
சாப்பிட்ட பாத்திரங்களை எடுத்து வைக்க உதவி செய்தார்.
நான் பாத்திரங்களை கழுவும் போது கிச்சனுள்ளே நின்றார். அவர் என்னை குறு குறுவென பார்ப்பதைப் போல உணர்ந்தேன். ஓரமாக கைக்கெட்டும் தூரத்தில் நிற்கும் ஆண்மகன் எங்கே பார்ப்பான் என நினைக்கும் போதே என் மனம் படக் படக் என்று அடித்துக் கொண்டது.
இன்று இப்பவே எதாவது நடக்காதா என்ற எதிர்பார்ப்பு என்னை தொல்லை செய்தது.
காலையில் அலுவலகத்தில் இருக்கும் போது “இன்றிரவு வீட்டில் முதலிரவை விமரிசையாகக் கொண்டாடலாம்” என்று தவித்த என் மனது மீண்டும் தவிக்கிறது.
முதல் பாத்திரத்தை கழுவும் போது பிரவீண் என்னை நோக்கி இரண்டடி எடுத்து வைத்தார். இரவுப் பயணம் மற்றும் 12 மணி நேரத்துக்கு மேல் வேலை செய்து அசதியாக இருந்த என் உடல் அவர் என்னை மேலிருந்து கீழ் வரை அணு அணுவாக ரசித்துப் பார்க்கிறார் என நினைக்கும் போதே புத்துணர்வு பெற்றது.
என்னை அணைப்பார் என்று நினைத்தேன். ஆனால் அவர் சற்று நகர்ந்து கையில் தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொண்டு அந்த அறையை விட்டு வெளியேறினார்.
மீண்டும் கிச்சனுக்கு வந்து காலையில பார்த்துக்கலாம் என பாத்திரம் கழுவும் வேலையை பாதியில் நிறுத்தினார். அடுப்பை அணைத்தார்.
தூங்கணுமா இல்லை என இழுத்தார்..
உங்க விருப்பம்.
உங்களுக்கு எதும் விருப்பம் இல்லையா?
செக்ஸ் பற்றி கேட்கிறாரா இல்லை வேறு எதைப் பற்றியும் கேட்கிறாரா என்ற தெளிவில்லாமல் அவரைப் பார்த்தேன்.
ரெப்ரிஜிரேட்டரை திறந்தார் மல்லிகைப்பூ மணம் தூக்கியது. கவரை தொட்டு தடவும் சத்தம். என் எதிர்பார்ப்பு அதிகமாகியது.
கையில் எதுவும் எடுக்காமலேயே கதவை மூடினார்.
அடுப்பில் மூடி வைக்கப்பட்டிருந்த பாத்திரத்தை திறந்தார். ஒரே ஒரு கப் எடுத்து சூடான பாலை ஊற்றினார்.
இங்கயே குடிக்கலாமா இல்லை மாஸ்டர் பெட்ரூம் போகலாமா என்றார்.
என் ஆசை நிறைவேறப் போகும் சந்தோஷத்தில் அவரை கட்டியணைத்தேன்.
⪼ 20 நிமிடங்களுக்கு பிறகு ⪻
அவர் வாங்கி வைத்திருந்த சேலையை உடுத்தி வெளியே வரும் போது பட்டு வேஷ்டி கட்டி ஹாலில் உட்கார்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தார்.
என்னைப் பார்த்ததும் கிச்சன் நோக்கி சென்றார். ரெப்ரிஜிரேட்டரில் இருந்த மல்லிகைப்பூவை எடுத்துக் கொண்டு வந்தார். நான் கையை நீட்ட பூவை என் கையில் வைத்தார்.
ஒரே ஒரு மல்லிப் பூவை மட்டும் தனியாக எடுத்தார். அந்த பூவுக்கு முத்தம் கொடுத்தார். என் உதட்டில் அவர் அந்த பூவை வைக்க அவரது ஆசையை புரிந்து கொண்டு நானும் என் கண்ணில் நீர் அரும்ப முத்தமிட்டேன்.
நான் பூவை தலையில் சூடினேன். நான் கிச்சன் நோக்கி நகர, அவர் மாஸ்டர் பெட்ரூம் நோக்கி நகர்ந்தார்...