30-12-2024, 06:57 PM
முதிர் கன்னி
【03】
【03】
நேரம் 5:30 நெருங்க நெருங்க என் மனம் படக் படக் என்று அடித்துக் கொண்டது. இன்று இரவு என்ன நடக்கும் என்ற கேள்விக்குறி இதுவரை என்னை தொல்லை செய்தது.
5:30 க்கு ரெஸ்ட் ரூம் சென்று என் ஆடைகள் மற்றும் முகமெல்லாம் சரி செய்து வீட்டிற்கு கிளம்பினேன்.
ஆட்டோவில் போகலாமா இல்லை என் சிறு அலங்காரம் கலையாமல் ஏசி டாக்ஸியில் போகலாமா என யோசித்துக் கொண்டே அலுவலக வாயிலை நோக்கி நடந்தேன்.
வீட்டுக்கு போய் 7 மணி அலுவலக ப்ராஜக்ட் கால் அட்டென்ட் செய்த பிறகு என் ஆசைகளை நிறைவேற்ற நினைத்த என் ஆசைக்கு முதலாவது தடை.
நான் இந்த விஷயத்தில் துரதிர்ஷ்டம் நிறைந்தவள் என்பதை உறுதி செய்யும் விதமாக எனக்கு என் மேனேஜரிடம் இருந்து அழைப்பு வந்தது. ஃப்ரடக்க்ஷன் இஷ்யூ சீக்கிரம் லாகின் பண்ணு என்றார்.
வேலை செய்ய முடியாது என மறுக்கவா முடியும்.?
நான் மீண்டும் அலுவலகம் வந்து ஃப்ரடக்க்ஷன் இஷ்யூவை சரி செய்ய முனைந்தேன். பழைய டேட்டாவை ரீஸ்டோர் செய்ய வேண்டிய கட்டாயம். அமெரிக்காவில் இன்று விடுமுறை என்பதால் டேட்டா ரீஸ்டோர் பண்ண எனக்கு சில மணி நேரங்கள் ஆனது.
பிரவீண் எனக்கு இரண்டு முறை கால் செய்தார். இரவு உணவைப் பற்றி முதல் கால். எப்போ வருவீங்க என இரண்டாவது கால். அவர் என்னை அழைத்து போது நான் சொன்ன விஷயங்கள் எதுவும் நடக்கவில்லை.
என்னால் நேரத்துக்கு வர இயலாது என பிரவீணை சாப்பிட சொன்னேன். இன்னொரு முறை அழைத்து எப்போது வீட்டுக்கு வருவேன் என தெரியாது நீங்கள் தூங்குங்கள் என 9:30 க்கு அவரை அழைத்து சொன்னேன்.
ஃப்ரடக்க்ஷன் இஷ்யூவை சரி செய்து எங்கள் கிளயன்ட் எல்லாம் சரி பார்த்து ஆல் குட் என சொல்லும் போது 10:30 கடந்துவிட்டது.
10:45 க்கு அலுவலக Cab-ல் செல்லலாம் என நினைத்து கீழே வந்தால் எனக்கு டாக்ஸி கிடைக்கும் போது நேரம் 11:15. மொத்தம் 6 பேர் அந்த வாகனத்தில், நான் கடைசியாக இறங்க வேண்டும் என்பதால் அலுவலக விதிப்படி செக்யூரிட்டி ஒருவரை ஏற்பாடு செய்து வாகனம் கிளம்பும் போது 11:35 ஆகிவிட்டது.
நான் பயங்கர வெறுப்பில் இருந்தேன். என்னை சுற்றி சதி நடக்கிறது என்ற எண்ணம் என் மனதில் எழாமல் இல்லை. அப்படி எதுவும் நடக்கவில்லை என்பதை நான் நன்கு அறிவேன். இருந்தாலும் அந்த எண்ணம் என் மனதில் எழாமல் இல்லை.
நேரம் 12:05 இன்னும் ஒரு பெண்ணை இறக்கி விட்ட பிறகே என்னுடைய வீட்டுக்கு செல்ல முடியும்.
என் அருகில் இருந்த அந்த பெண் சாக்லேட் ஒன்றை எடுத்து சாப்பிட்டாள். 12 மணிக்கு பிறகு ஏன் சாக்லேட் சாப்பிடுகிறாள் என எனக்கு புரியவில்லை. அது என் வாழ்வில் எதையோ சுட்டிக் காட்டுவதைப் போல இருந்தது. எனக்கு அந்த சாக்லேட் பற்றிய விளம்பரப் பாடல் தான் நியாபகம் வந்தது.
"ஆசைகள் நிராசை ஆனதே கனவும் கை நழுவிப் போனதே"
என் முதலிரவு நடக்கும், நானும் கன்னி கழிவேன் என நினைத்த என் கனவும் கை நழுவிப் போனதே!