21-06-2019, 04:56 PM
வீடு, காலேஜ் எல்லாமே ஏலம் போற அளவுக்கு... விஜயகாந்த் குடும்ப பேராசையால் வந்த வினை!
சென்னை: வாங்கிய கடனுக்காக ஏலத்துக்கு வந்த விஜயகாந்தின் சொத்து..! பரபரப்பு தகவல்கள்
சென்னை: தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தின் சாலிகிராமம் வீடு, ஆண்டாள் அழகர் கல்லூரி என முக்கிய சொத்துகளை வாங்கிய கடனுக்காக ஏலம் விடப்போவதாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அறிவித்திருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
விஜயகாந்த்துக்கா இந்த நிலைமை என்பதுதான் அனைவரின் அதிர்ச்சியும். பத்திரிகைகளில் சொத்துக்கள் ஏலம் வருவதாக வெளியான செய்தியைப் பார்த்து அரசியல் வட்டாரமே ஆடிப் போய்க் கிடக்கிறது.
தேர்தல் அரசியலுக்கு தொண்டர்களின் ஏகோபித்த ஆதரவுடன் நுழைந்தவர் விஜயகாந்த். பிரதான அரசியல் கட்சிகளாக அதிமுகவையும் திமுகவையும் மிரட்டும் வகையில் வாக்கு சதவீதத்தைப் பெற்றார்.
கருணாநிதி உயிருடன் இருந்த போதே திமுகவை எதிர்க்கட்சியாகக் கூட வெற்றி பெறவிடாமல் சாதித்துக் காட்டியவர் விஜயகாந்த். அப்போது அவரது கட்சியில் செலவு செய்ய 2-ம் கட்ட தலைவர்கள் ஏராளமானோர் இருந்தனர்.
பேராசைதான்
ஆனால் விஜயகாந்தின் ஒட்டுமொத்த குடும்பமும் இந்த வெற்றியை அறுவடை செய்ய களமிறங்கியதன் விளைவுதான் இன்றைய இத்தகைய நிலைமைக்கு முதன்மை காரணம். விஜயகாந்துக்கு இயல்பாகவே இருந்த செல்வாக்கு தங்களுக்கும் இருக்கிறது என காட்டுவதற்கு 2-ம் கட்ட தலைவர்களை பணத்தை வாரி இறைக்கச் சொன்னார்கள்.
[color][font]
தப்பி ஓடிய நிர்வாகிகள்
அவர்களோ ஆளைவிட்டால் போதும் என தப்பி ஓடி பிற கட்சிகளிடம் சரணடைந்தனர். ஒருகட்டத்தில் 2-ம் கட்டத் தலைவர்கள் யாருமே இல்லாத ஒரு கட்சியாக நிலைகுலைந்து போனது தேமுதிக. அப்போது பிரேமலதாவும் சகோதரர் சுதீஷும்தான் கட்சியில் இருந்தனர்.[/font][/color]
[color][font]
மகனின் பந்தாவுக்கும் செலவு
இவர்கள் போதாது என்று மகனும் கட்சிக்காக களப்பணியாற்றுகிறேன் என களமிறங்கினார். விஜயகாந்தைப் போல தங்களுக்கும் செல்வாக்கு இருக்கிறது என்பதை வெளிப்படுத்த பணத்தை வாரி இறைத்து பில்டப் கொடுத்து பார்த்தனர். மகனுக்கு 100 கார்கள் அணிவகுப்பு ஏற்பாடு செய்தனர்.[/font][/color]
[color][font]
கூட்டணி பேரம்
இப்படி பணத்தை தண்ணீராய் செலவு செய்ய இருக்கிற வீடு, கல்லூரி என அனைத்தையும் அடமானம் வைத்தனர். எப்படியும் தேர்தலின் போது கூட்டணி தலைமையிடம் இருந்து பெரும் தொகை கிடைக்கும். அதைவிட்டு மீட்டுவிடலாம் என்கிற மனக்கணக்குதான். இதனால் யார் அதிகம் தருவார்களோ அவர்களோடு கூட்டணி என சந்தை கடையாக விரித்து வைத்தது தேமுதிக.
[/font][/color]
[color][font]
அதிமுக டோக்கன்
ஆனால் கடைவிரித்தான் கொள்வாரில்லை கதையானதால் அதிமுகவிடம் சரணடைந்தது. அதிமுகவும் கணிசமான ஒரு தொகையை பேசி டோக்கனான சின்ன தொகையை தந்தது. ஆனால் தேமுதிகவை அதன்பிறகு அதிமுக கண்டுகொள்ளவே இல்லை.[/font][/color]
குடும்பம்தான் காரணம்
சின்ன தொகையை வைத்து ஒன்றும் செய்ய முடியாமல் போக விழிபபிதுங்கி இப்போது பரிதாபமாக விஜயகாந்த் சினிமாவில் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த சாலி கிராமத்து வீடு, ஆண்டாள் அழகர் கல்லூரி ஆகியவற்றை ஏலத்தில் பறிகொடுக்கும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது. நேர்மையான, வெள்ளந்தி மனிதரான விஜயகாந்தை முன்வைத்து அவரது குடும்பம் நடத்திய தரகு அரசியலே இந்த நிலைமைக்கு காரணம் என்பதை தமிழகமே நன்கு அறியும்... அதனால்தான் அதிர்ச்சியும் அதிகமாக இருக்கிறது.

first 5 lakhs viewed thread tamil