⭐♥️♥️காம அசுரன் காத்தவராயனும் மாயமலை கட்டழகு தேவதைகளும் ♥️♥️⭐
பாகம் - 79

நிகழ் காலம்

காத்தவராயன் ரெண்டு பெண்களிடம் அடிவாங்கிய கடுப்பில் புளியமரத்தில் தொங்கி கொண்டு இருந்தான்..

"யப்பா,என்ன அடி..கடைசியில் என் பொருளை வைச்சே என்னையே இந்த அனுவும்,ஆராதனாவும் போட்டுட்டாங்களே..இந்த பொண்ணு அனுவுக்கு என்ன ஆச்சு..!இன்னும் கொஞ்சம் நேரம் விட்டு இருந்தா அனுவை சுவைச்சு இருக்கலாம்.ஆனா கடைசியில் இந்த ஆராதனா பொண்ணு வந்து எல்லாவற்றையும் கெடுத்துடுச்சி..இந்த அமாவாசை மட்டும் வரட்டும்..அப்புறம் இவளுகளை வச்சிக்கிறேன். இவளுககிட்ட இருக்கிற என்  சக்தியை எப்படி திரும்ப பெறுவது என எனக்கு தெரியும்.."என புலம்பினான்.

அடுத்த நாள் மாறன்,அனு மற்றும் ஆராதனாவை தேடி வந்தான்..ஆராதனா வெளியே சென்று இருந்தாள்..அனு குளித்து விட்டு புத்தம் புது செப்பு சிலை போல் வெளியே வந்தாள்..கூந்தலில் ஈரம் சொட்ட சொட்ட வெறும் டவல் மட்டும் அணிந்து வர அங்கே மாறன் இருப்பதை தர்ம சங்கடமாக உணர்ந்தாள்..ஆனால் மாறன்,அவள் தர்ம சங்கடத்தை புரிந்து கொண்டு உடனே அனு இருந்த அறையை சாத்தி விட்டு அமைதியாக வெளியே உட்கார்ந்தான்..அனு ஆடை அணிந்து கொண்டு வந்து,"மாறன் உங்களுக்கு காஃபி வேணுமா இல்ல டீ வேணுமா"என கேட்க,

மாறன் அவள் கண்களை பார்த்து "ம்ம்ம்..சிஸ்டர்..!வெயில் காலையிலேயே மண்டை பொளக்குது.எனக்கு தண்ணி கொடுங்க போதும்.."

சில்லென்ற மோர் எடுத்து வந்து அனு கொடுத்தாள்.

"ஆமா எங்கே ஆராதனா"மாறன் கேட்க,

"இங்கே தான் கீழே மதியம் சமையலுக்கு காய்கறி வாங்க போய் இருக்கா"

மாறன்,அனுவும் சகஜமாக பேசி கொண்டு இருக்க ஆராதனா வந்து சேர்ந்தாள்.. அனுவிடம் பேசும் பொழுது மாறன் கண்கள் அவள் கண்களை விட்டு கீழே இறங்கவில்லை..ஒரு மாதிரியான கவர்ச்சி நிலையில் தான் இருப்பதை பார்த்தும்,மாறன் கண்ணை மட்டுமே பார்த்து பேசுவதை பார்த்து அவளுக்கு உள்ளூர மகிழ்ச்சியாக இருந்தது..

நேற்று நடந்த விசயத்தையும்,காத்தவராயன் உதை வாங்கி போன விசயத்தையும் ஆராதனா சொல்லி சொல்லி சிரித்தாள்..

"எங்க ரெண்டு பேரையே இந்த காத்தவராயனால் சமாளிக்க முடியலையே..!,இன்னும் ரெண்டு பொண்ணு வந்தா அவன் கதை கந்தல் தான்"என சொல்லி சொல்லி சிரித்தாள்.

மாறன் பொறுமையாக,"அங்கே தான் நீ தப்பு பண்றே ஆராதனா,நீங்கள் எதிர்கொள்ள போவது ரெண்டு காத்தவராயன்களை..ஒன்று மன்னர் காலத்தில்,இன்னொன்று இப்போ நாம் வாழும் காலத்தில் இருக்கும் காத்தவராயன் ஆவியை..!"

ஆராதனா விடாமல்"அப்போ கூட இங்க ரெண்டு பேர்,அங்க ரெண்டு பேர் போதாதா மாறா..!"

"போதாது ஆரூ..! நீ மாயமலை போன பொழுது காத்தவராயன் ஆவி மட்டுமா அங்கு இருந்தது..!"

"இல்லை மாறா..!அங்கே வேறு சில ஆவிகளும் இருந்தன..."

"நிகழ்காலத்தில் நீங்க எதிர்கொள்ள போவது காத்தவராயனுடன் சேர்த்து இன்னும் பல ஆவிகளை..இன்னொரு முக்கியமான விசயம் நீங்கள் அவனை எதிர்கொள்ள போவது அமாவாசை அன்று.அன்று அவன் முழுபலத்துடன் இருப்பான்.தனக்கு தேவையானதை நிறைவேற்றி கொள்ள அவன் வெகு உக்கிரமாக இருப்பான்.அந்த நேரத்தில் நீங்க நாலு பேரே பத்தாது.இதில் இன்னொரு சிக்கலும் உள்ளது."

"அது என்ன சிக்கல் மாறா..?"

"மன்னர் காலத்தில் காத்தவராயனின் உடலை அழிக்கும் சக்தியை மதிவதனி பார்த்து கொள்வாள்..ஆனால் அவனின் ஆத்மா நிகழ் காலத்திற்கே வரவேகூடாது..அதற்கு அவன் உடம்பில் இருந்து அவன் ஆத்மாவின் தொடர்பை அறுப்பது அவசியம்.அவன் ஆத்மாவை அவன் உடம்பில் இருந்து பிரிக்க வேண்டுமென்றால் உங்கள் நால்வரின் ஆத்ம சக்தியை நீங்கள் மதிவதனியிடம் அளிக்க வேண்டும்.அப்பொழுது தான் நீங்கள் இழந்த கற்பை அடையமுடியும்.இப்போ வரை அவன் உடம்போடு ஆத்மா தொடர்பு அறுபடவில்லை.அவன் உடல் பாதுகாப்பாக ஓரிடத்தில் உள்ளது."

அனு அவனிடம்,"என்ன சொல்றே மாறா...!இன்னும் அவன் உடம்பு அழியவில்லையா..! மேலும் எனக்கு  ஒரு சந்தேகம்,ரெண்டு பேர் தான் டைம் டிராவல் பண்ண முடியும் என்று சொல்றே..நாங்க நாலு பேர் எப்படி எங்கள் ஆத்ம சக்தியை மதிவதனிகிட்ட கொடுக்க முடியும்?"

மாறன் அவர்களை பார்த்து"அது தான் நான் சொல்லவந்த சிக்கலே அனு,ஒன்று டைம் டிராவல் செய்யும் இருவர்,இங்கு இருக்கும் இருவரின் ஆத்ம சக்தியை சுமந்து செல்ல வேண்டும்.அப்படி நீங்கள் செல்லும் பொழுது இங்கு இருக்கும் இருவரின் சக்தி போய்விடும்,அப்போ இங்கு இருக்கும் காத்தவராயன் ஆவியை யாரும் கட்டுக்குள் கொண்டு வர முடியாது.அது காற்று போன பையாக இருக்கும் அவன் உடலை மீட்க,நான்கு பலி கொடுத்து  நிகழ் காலத்தில் சாதித்து விட்டால் நீங்கள் டைம் டிராவல் பண்ணுவதே வீண் தான்.இரண்டாவது நீங்கள் நால்வர் சேர்ந்து காத்தவராயன் காலத்திற்கு பயணித்தால் இங்கு காத்தவராயனை பலி கொடுக்காமல் கட்டுபடுத்த யாராவது வலிமைமிக்க ஒருவர் வேண்டும்..அதுவும் அவர் தெய்வ சக்தி அற்றவராக,ஆவிகளை கட்டுப்படுத்தும் வல்லமை வாய்ந்தவராக இருக்க வேண்டும்..இது தான் நான் சொல்ல வந்த சிக்கல் அனு."

அனு கவலையுடன்"என்ன மாறா..! நிலைமை போக போக சிக்கலாகி கொண்டே போகுதே..! காத்தவராயனுக்கு அவ்வளவு சக்தி எப்படி வந்தது..!"

"இந்த விசயமே நேற்று தான் என் குரு மூலம் எனக்கு தெரிய வந்தது அனு...!உண்மையில்  மதிவதனியால் அவனை கொல்ல முடியவில்லை..அவனை கொல்லும் ஆயுதத்தை அவள் வைத்து இருக்கவில்லை..அதனால் அவள் அவனை கொல்ல வேறு ஒரு உபாயம் செய்தாள்..அது காத்தவராயனுக்கு சாகும் முன் நேரத்தை நீட்டித்து கொடுத்தது..அப்போ அவன் அதர்வண வேதத்தில் உள்ள மந்திரங்களை ஜெபித்து ஆத்மாவுக்கும்,உடலுக்கும் உள்ள தொடர்பை நீட்டித்து கொண்டான்.உடலையும் அழியாமல் பார்த்து கொண்டான்.ஒன்றை புரிந்து கொள் அனு,மதிவதனி அவன் உயிரை எடுக்கவில்லை..மாறாக மதிவதனி அவனுக்கு ஏற்படுத்திய துன்பம் தாங்க முடியாமல் அவனாக தான் அவன் உயிரை விட்டான்.அவனால் பிற்காலத்தில் ஏற்பட போகும் சேதத்தை அறிந்து மதிவதனி தன் குழந்தையை ஒருவரிடத்தில் கொடுத்து விட்டு அவனை மீண்டும் அழிக்க பிறப்பு எடுப்பதாக கூறிவிட்டு கடும்தவம் செய்து அவளும் உயிரை விட்டு விட்டாள்.

அவள் சொன்ன மாதிரி பிறப்பும் எடுத்து இருக்கிறாள்..அவளுக்கு பூர்வஜென்ம உணர்வுகள் காத்தவராயன் அவளுடன் உடலுறவு கொள்ளும் பொழுது கொஞ்ச கொஞ்சமாக நினைவுக்கு வரும்.அதை கொண்டு தான் நாம் வழி தேட வேண்டும்..இன்னொரு சாதகமான விசயம் நமக்கு உள்ளது..அதாவது காத்தவராயன்,மதிவதனிக்கு பிறந்த குழந்தை இறக்கவில்லை..அவர்களின் வம்சம் கண்டிப்பாக வழி வழியாக வந்து இருக்கும்..அந்த வம்சத்தின் வழியாக வந்த ஒருவர் தான் நமக்கு உதவி செய்ய போகிறது என நினைக்கிறேன்.."

ஆராதனா சந்தேகத்துடன்"ஒருவேளை அது தான் நிகழ்கால மதிவதனியா இருக்குமோ"

"கண்டிப்பா இருக்காது அனு,அரக்கர் வம்சமாக ஆனாலும் தங்கள் வாரிசுகளுடன் அவர்கள் உறவு கொள்வது இல்லை..அவனின் வம்சாவளியை காத்தவராயன் பார்த்த உடன் அறிந்து கொள்வான்.அதனால் இயற்கை நிகழ்கால மதிவதனியை  அதே வம்சத்தில் பிறப்பு எடுக்க அனுமதிக்காது..ஏனெனில் காத்தவராயன் நிகழ்கால பிரியங்காவுடன் உடலுறவு கொண்டே ஆக வேண்டும். மேலும் மதிவதனி எதற்காக தவம் செய்தாள்?என்ற விடை எல்லாமே பிரியங்காவிற்கு பூர்வ ஜென்ம ஞாபகம் வந்த உடன் விடை கிடைத்து விடும்..மதிவதனியின் வம்சாவளி ஆணா?பெண்ணா? என்பது எல்லாம் எதுவுமே தெரியாது..?அவனோ,அவளோ கிடைத்து விட்டால் ஆவியை அடக்கும் நபரின் துணையோடு நிகழ்கால காத்தவராயன் ஆவியை கட்டுபடுத்தி விட்டால் நீங்கள் நால்வர் டைம் டிராவல் செய்து நாம் நினைத்த காரியத்தை எளிதாக முடித்து விட்டு திரும்பி விடலாம்..ஆனால் ..."

"இன்னும் என்னடா ஆனால் மாறா..."ஆராதனா சோர்ந்து கேட்க

"எல்லாம் சரியாக நடந்தாலும் மதிவதனி வம்சாவளி மட்டும் உயிரை பணயம் வைத்து தான் இந்த செயலை செய்ய வேண்டும்.இதில் உயிரை இழக்கவே வாய்ப்பு அதிகம்..அது தெரிந்து அவனோ,அவளோ இந்த காரியத்திற்கு ஒப்பு கொள்வார்களா..!என்பது மிக மிக சந்தேகம்..!"

"யப்பா சாமி சுத்தமா முடியல..எவ்வளவு சிக்கல்..!நீ சொல்லும் போதே இப்பவே கண்ணை கட்டுதே..!நிஜத்தில் எப்படி செய்ய போகிறமோ என்று தெரியல.."ஆராதனா கவலை தோய்ந்த முகத்துடன் சொன்னாள்.

"அனு இங்க பாரு..ராமன் மட்டும் அரசனாக முடிசூட்டிக் கொண்டு இருந்தால் ராவணனை அழிக்க முடிந்து இருக்க முடியுமா..!கூனி மூலம் கைகேயி மனதை கெடுத்து ராமனை விதி காட்டுக்கு துரத்தியது..அவன் வட நாட்டில் உள்ள காட்டிலேயே இருந்திருந்தால் அரக்கர்களை ராமன் எவ்வாறு அழித்து இருக்க முடியும்.ராமனை தேடி பரதனை காட்டுக்கு வரசெய்தது.பரதன் பக்கத்தில் இருந்தால் அவன் அடிக்கடி தேடி வரக்கூடும் என ராமனை அரக்கர்கள் உள்ள தண்டகாரண்யம் பகுதிக்கு விதி மீண்டும் துரத்தியது.சூர்ப்பனகை வந்தாள்,ராம லக்ஷ்மணன் மீது ஆசைப்பட்டாள்.அதனால் தண்டகாரண்யத்தில் உள்ள இராவணனின் தம்பிகள் அழிந்தனர்.தன் தம்பிகளை கொன்ற,தங்கையை அவமானப்படுத்திய ராமனை பழிவாங்க,இராவணன் மாரிசனின் துணை கொண்டு சீதையை கடத்தினான்..அதன் விளைவாக ராமன் சீதையை தேடி செல்லும் பொழுது சுக்ரீவன் நட்பு கிடைத்தது..ராவணனை கொல்ல அகத்தியரிடம் இருந்து ஆயுதத்தை ராமன் பெற்று கொண்டான்..இவ்வளவு இருந்தும் கடலை கடக்க ராமனின் சேனையால் முடியவில்லை..பிறகு இயற்கை அதற்கும் வழி செய்து இருந்தது..ராமனின் சேனையில் இருந்து நளன் என்ற வானரம் போட்ட பாறைகள் மட்டும் தண்ணீரில் மிதந்தன.அதை கொண்டு பாலத்தை கட்டி கடலை கடந்த பிறகும்  ராமன் பல தடைகளை கடந்து தான் ராவணனை கொல்ல முடிந்தது.எத்தனை எத்தனை தடைகள்...! அதுவும் இந்திரஜித் மாபெரும் தடையாக இருந்தான்..அவனை கொல்ல வழியை லக்ஷ்மணன் மூலம் விதி உருவாக்கி இருந்தது..கடவுள் அவதாரமான ராமனுக்கே இவ்வளவு சவால்கள்.நமக்கு இல்லாமல் இருக்குமா..!
இந்த காத்தவராயனை கொல்ல விதி நமக்கு வழி கண்டிப்பா ஏற்படுத்தி இருக்கும்..நாம் நம் கடமையை மட்டும் செய்வோம்..காத்தவராயனை கொல்ல உருவாக்கப்பட்ட கருவிகள் நாம் அவ்வளவு தான்"என மாறன் சொல்லி முடிக்க அனுவும்,ஆராதனாவும் அதை கேட்டு அயர்ந்தனர்.

கடைசியாக மாறன் இருவரை பார்த்து,"என்னால் ஒன்றை மட்டும் உறுதியாக உணர முடிகிறது..காத்தவராயனை முழுவதுமாக அழிக்கும் ரகசியத்தை மதிவதனி கடும் தவம் மூலம் அறிந்து இருக்கிறாள்..உங்கள் நால்வருக்கும் ஏதோ நூலிழை தொடர்பு இருக்கு..நீங்கள் நால்வரும் ஏதோ ஒருவிதத்தில் மதிவதனியுடன் சம்பந்தப்பட்டு உள்ளீர்கள்..அதற்காக நீங்கள் நால்வரும் மதிவதனி மறுபிறப்பு என்று நான் சொல்லவில்லை..ஆனால் நிகழ்கால பிரியங்கா மூலம் உங்கள் மூவருக்கும் மதிவதனிக்கும் இடையே உள்ள தொடர்பு தெரிய வரும்.."என்று அவன் சொல்லி முடித்தான்..

லிகிதாவை தேடி தேடி கஜா சோர்ந்து போனான்.கடைசியாக காத்தவராயனை மனதில் நினைக்க,காத்தவராயன் எதிரில் தோன்றினான்..

கஜா காத்தவராயனிடம்,"காத்தவராயா..நீ சொல்வது தான் சரி..என்னால் லிகிதா இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியல..உன் வழிக்கு நான் வருகிறேன்..நீ முழுக்க அனுபவித்த பிறகு எனக்கு லிகிதாவை கொடு அது போதும்..அவ என் உடம்பு மூலம் கற்பு இழந்தாலே எனக்கு அது போதும்..."என சொன்னான்..

காத்தவராயன் அந்த இடம் அதிர சிரித்தான்..."நல்ல முடிவு கஜா, லிகிதாவை அவள் இடத்தை விட்டு தானாக என்னை நோக்கி வெளியே வரவைக்க போகிறேன்..அவளை இந்த மாளிகையில்,இதோ இந்த மஞ்சத்தில் ருசித்து விட்டு உனக்கு விருந்தாக்குகிறேன் போதுமா...!"என சொல்லி விட்டு கஜா உடம்பில் புகுந்தது..

[Image: IMG-hudlpa.gif]

[Image: Snapinsta-app-444487303-1835352094610103...n-1080.jpg]
Like Reply


Messages In This Thread
RE: ⭐♥️காற்றாய் வந்த காத்தவராயனின் ◉⁠‿⁠◉ மோகதாபம்♥️⭐ - by Geneliarasigan - 31-05-2024, 10:41 PM



Users browsing this thread: 126 Guest(s)