31-05-2024, 08:08 PM
(This post was last modified: 31-05-2024, 08:22 PM by snegithan. Edited 1 time in total. Edited 1 time in total.)
(31-05-2024, 07:51 PM)Arun_zuneh Wrote: பேய் பிசாசு லாம் கடல் தாண்டாதுனு சொல்லுவாங்க யாட்சி மட்டும் எப்படி இதை தெளிவு படுத்தினால் நல்லா இருக்கும் நண்பா
அதற்கான விடை நான் இந்த கதையிலேயே சொல்லி இருப்பேனே நண்பா.. அனுவுடம் sex வைக்கும் பொழுது காத்தவராயன் என்னால் ஒடும் தண்ணீரை அதாவது ஆற்றை தாண்ட முடியாது என்று சொல்லி இருப்பான்.ஏனெனில் அதில் ஜீவசக்தி மிக அதிகம்..ஆனால் ஏரி,குளம்,கடல் போன்றவற்றை தாண்ட முடியும் என்று சொல்லி இருப்பான்..இது தான் நான் கேள்விப்பட்டது..ராமராஜன்,கௌதமி ஒரு படம் நடித்து இருப்பார்கள்..அந்த படத்தில் கூட சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரை போல வருமா என்று பாட்டு வரும்..அந்த படத்தில் மலேசியாவில் உள்ள ஒரு பேய் இந்தியா வந்து கௌதமி உடம்பில் வந்து புகுந்து கொள்ளும்..மேலும் ஆற்று நீரில் உள்ள ஜீவசக்தி ஒரு குறிப்பிட்ட உயரத்திற்கு பரவி இருக்கும்..அந்த உயரத்திற்குள் ஆவியால் பறக்க முடியாது..ஆவியாலும் ஒரு குறிப்பிட்ட உயரத்தை தாண்டி பறக்க முடியாது..பூமியில் இருந்து 10 அல்லது 15 அடி உயரத்தில் தான் ஆவியால் பறக்க முடியும்.அதற்கு மேல் பறந்தால் அது பூமியில் உள்ள தொடர்பு விடுபட்டு விடும்.அதனால் ஆற்றை மட்டும் ஆவியால் கடக்க முடியாது என்று சொல்வார்கள்..ஆனால் தேங்கி உள்ள தண்ணிரில் ஜீவசக்தியின் அளவு மிக மிக குறைவு. அதனால் தான் ஆவிகள் அதை எளிதாக கடக்கின்றன... ஆற்று நீர் தான், ஏரி,மற்றும் கடலில் போய் சேருகிறது..ஆனால் அவை ஒரு இடத்தில் தேங்கும் பொழுது நீரில் உள்ள ஜீவசக்தியை உயிரினங்கள் எடுத்து கொள்கின்றன.ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன்..நீங்கள் ஏரி நீரை கொண்டு மட்டும் ஒரு செடியை வளர்த்து பாருங்கள்..இன்னொரு செடியை பக்கத்திலேயே ஆற்று நீரை கொண்டு மட்டும் வளர்த்து பாருங்கள்.ஆற்று நீரை கொண்டு வளரும் செடி மிக வேகமாக வளரும்..வெள்ளைக்காரன் நம்மை ஆண்ட காலத்தில் கல்கத்தாவில் இருந்து கப்பல் புறப்படும் பொழுது டிரம், ட்ரம்மாக கங்கை ஆற்றின் நீரை குடிப்பதற்கு கொண்டு செல்வார்கள்.ஏனெனில் அதில் ஜீவசக்தி மிக மிக அதிகம்.நீண்ட நாட்களுக்கு கெடாது,அதனால் நீண்ட தூரம் பயணங்களுக்கு அது ஏற்றது..ஆற்றில் உள்ள நீரின் ஜீவ சக்தியை பொறுத்து தான் பயிர்களின் சுவை கூடுகிறது..கும்பகோணம் வெத்தலையின் சிறப்பு காவேரி நீரால்..திருநெல்வேலி அல்வாவின் சிறப்பு தாமிரபரணி ஆற்று நீரால்..அந்த அல்வா தயாரிப்பவர்களால் கூட வேறு ஊரில் சென்று அங்கு கிடைக்கும் தண்ணீரில் அல்வா செய்தால் அந்த சுவை வராது..