21-06-2019, 09:59 AM
சிந்துபாத் படத்திற்கு சிக்கல்.?
'பண்ணையாரும் பத்மினியும்', 'சேதுபதி' ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் அருண்குமாரும், விஜய்சேதுபதியும் மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் 'சிந்துபாத்'. விஜய்சேதுபதியுடன் அஞ்சலி கதாநாயகியாக நடிக்கும் இப்படம், தாய்லாந்த் பின்னணியில் நடக்கும் கதையாக உருவாகியுள்ளது.
'சிந்துபாத்' படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். விஜய் காத்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். 'கே.புரொடக்ஷன்ஸ்' நிறுவனம் சார்பில் ராஜராஜன், 'வான்சன் மூவீஸ்' நிறுவனம் சார்பில் ஷான் சுதர்சன் இணைந்து தயாரித்துள்ள இந்தப்படம் கடந்த மாதமே வெளியாகவிருந்தது.
பின்னர் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. கடைசியாக இந்த மாதம் 21-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த படம் வெளியாக இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் சிந்துபாத் படம் வெளியாகாது என்ற தகவல் தற்போது படத்துறையில் பரவிவருகிறது.
பாகுபலி 2 படத்தை தமிழகத்தில் வெளியிட்ட விவகாரத்தில் அதன் தயாரிப்பாளர்களுக்கு 'கே.புரொடக்ஷன்ஸ்' நிறுவனம் பெரிய தொகை பாக்கி வைத்துள்ளதாம். அதன் காரணமாக சிந்துபாத் படத்தை வெளியிட பாகுபலி படத்தின் தயாரிப்பாளர்கள், தெலங்கானா நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது
![[Image: NTLRG_20190620123325394139.jpg]](https://img1.dinamalar.com/cini//CNewsImages/NTLRG_20190620123325394139.jpg)
'பண்ணையாரும் பத்மினியும்', 'சேதுபதி' ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் அருண்குமாரும், விஜய்சேதுபதியும் மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் 'சிந்துபாத்'. விஜய்சேதுபதியுடன் அஞ்சலி கதாநாயகியாக நடிக்கும் இப்படம், தாய்லாந்த் பின்னணியில் நடக்கும் கதையாக உருவாகியுள்ளது.
'சிந்துபாத்' படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். விஜய் காத்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். 'கே.புரொடக்ஷன்ஸ்' நிறுவனம் சார்பில் ராஜராஜன், 'வான்சன் மூவீஸ்' நிறுவனம் சார்பில் ஷான் சுதர்சன் இணைந்து தயாரித்துள்ள இந்தப்படம் கடந்த மாதமே வெளியாகவிருந்தது.
பின்னர் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. கடைசியாக இந்த மாதம் 21-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த படம் வெளியாக இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் சிந்துபாத் படம் வெளியாகாது என்ற தகவல் தற்போது படத்துறையில் பரவிவருகிறது.
பாகுபலி 2 படத்தை தமிழகத்தில் வெளியிட்ட விவகாரத்தில் அதன் தயாரிப்பாளர்களுக்கு 'கே.புரொடக்ஷன்ஸ்' நிறுவனம் பெரிய தொகை பாக்கி வைத்துள்ளதாம். அதன் காரணமாக சிந்துபாத் படத்தை வெளியிட பாகுபலி படத்தின் தயாரிப்பாளர்கள், தெலங்கானா நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது
first 5 lakhs viewed thread tamil