21-06-2019, 09:54 AM
பதிவாளருக்கு அதிகாரமில்லை: விஷால் மனு
சென்னை: நடிகர் சங்க தேர்தலை நிறுத்தி வைக்க பதிவாளர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய கோரி நடிகர் விஷால் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
நடிகர் சங்கத்துக்கான புதிய நிர்வாகிகள் தேர்தல், வரும், 23ல் நடக்க இருந்தது. இந்நிலையில், நடிகர் சங்க தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்தி வைத்து, தென்சென்னை மாவட்ட பதிவாளர் ரவீந்திரநாத் உத்தரவிட்டுள்ளார். இதன் வாயிலாக, சங்கங்கள் பதிவு சட்ட விதிகள் மற்றும், பதிவுத்துறை தலைவர் உத்தரவுகள் மீறப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளதுஇது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் விஷால் தாக்கல் செய்த மனு , நடிகர் சங்கத்திற்கு பாதுகாப்பு வழங்காத அரசு பதிவாளர் மூலம் நிறுத்தியுள்ளது. தேர்தலை நிறுத்தியதால் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. சங்கங்கள் சட்டபடி தேர்தல் நடைமுறையில் பதிவாளர் தலையிட அதிகாரமில்லை. எனவே பதிவாளர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு விஷால் மனுவில் கூறியுள்ளார். இந்த மனு நாளை ( ஜூன் 21) விசாரணைக்கு வருகிறது.

first 5 lakhs viewed thread tamil