Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
`கேரள அரசின் உதவியை மறுத்ததா தமிழகம்?' - பினராயி விஜயன் பதிவுக்கு தமிழக அரசு விளக்கம்!
தமிழகத்துக்கு ரயில் மூலமாக 20 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்கத் தயார் எனக் கேரள அரசு அறிவித்த நிலையில் அதை வேண்டாம் எனத் தமிழகம் மறுத்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. 
[Image: 253_20281.jpg]
சென்னை உட்பட தமிழகத்தில் பல்வேறு நகரங்களில் தண்ணீர்ப் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. சாமானியர்கள் குடிநீர் கிடைக்காமல் அலைபாய்ந்துகொண்டிருக்கிறார்கள். கால்நடைகள் செத்து மடிகின்றன. சென்னையின் தண்ணீர் விநியோகத்தில் மிகவும் முக்கியமானவையாக இருந்த நான்கு ஏரிகளும் வறண்டுவிட்டன. சோழவரம், போரூர், செம்பரம்பாக்கம் போன்ற ஏரிகள் கடந்த ஆண்டின்போது இதே நேரத்திலிருந்த தண்ணீரின் அளவில், நூற்றில் ஒரு பங்கு அளவுதான் தற்போது இருக்கிறது. ஏரிகளின் தற்போதைய அளவு, அவற்றின் மொத்த கொள்ளளவில் 0.2 சதவிகிதம் மட்டும்தான். ஆனால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் என ஆளும் கட்சியைச் சார்ந்த பலரும் `தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் இல்லை’ என்றே கூறி வருகின்றனர். 


[Image: 254_20431.jpg]
மேலும், சென்னையின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய வெளியில் இருந்த தண்ணீர் கொண்டுவரப்படும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இன்று மதியம் தமிழகத்துக்கு ரயில் மூலமாக 20 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்கத் தயார் எனக் கேரள அரசு அறிவித்தது. திருவனந்தபுரத்திலிருந்து 20 லட்சம் லிட்டர் நீரை ரயில் மூலம் சென்னைக்குக் கொண்டு செல்ல கேரள முதல்வர் பினராயி உத்தரவு பிறப்பித்ததாகச் செய்திகள் வெளியாகின. சென்னையில் நிலவி வரும் வறட்சியைக் கருத்தில் கொண்டு இந்த முயற்சியைக் கேரள அரசு செய்தது. கேரள அரசு உதவ முன்வந்தபோதும் தமிழக அரசு வேண்டாம் என மறுத்ததாகக் கேரள முதல்வர் பினராயி விஜயன் தகவல் தெரிவித்துள்ளார். 
[Image: 252_20045.jpg]
இதுகுறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்த அவர், ``கடுமையான குடிநீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்துக்குக் குடிநீர் வழங்க மாநில அரசு முன்வந்தது. இது தொடர்பாகத் தமிழக முதல்வர் அலுவலகத்தைத் தொடர்புகொண்டு தெரிவித்தபோது தற்போது இதற்கான தேவை இல்லை எனப் பதில் கொடுத்தனர். திருவனந்தபுரத்திலிருந்து 20 லட்சம் லிட்டர் நீரை ரயில் மூலம் சென்னைக்குக் கொண்டு செல்ல கேரளா முயன்றது. சென்னையில் உள்ள முக்கிய நீர் நிலைகளும் வறண்டு வருகின்றன. வறட்சி காரணமாக விவசாயமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தச் சூழ்நிலையில்தான் கேரள அரசு உதவ முன்வந்தது" என அவர் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் குடிநீர் பஞ்சம் நிலவி வரும் வேளையில் கேரளம் குடிநீர் தர முன்வந்தும் அரசு அதை மறுத்தது தற்போது புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும், தமிழக அரசு இதுகுறித்து எந்த ஒரு பதிலும் இதுவரை தெரிவிக்கவில்லை.
[Image: 256_22498.jpg]
 
இதற்கிடையே, தற்போது இந்த குற்றச்சாட்டை தமிழக அரசு மறுத்துள்ளது. இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகம், ``கேரள அரசின் உதவிக்கு தமிழக அரசு சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுளள்து. சென்னையின் ஒரு நாள் குடிநீர் தேவை என்பது 525 MLD. தற்போது கேரளாவில் இருந்து ஒருமுறை ரயில் மூலம் அனுப்பப்படும் 2 MLD நீரை இங்கேயே சமாளித்து விடுகிறோம். இதனால் தான் தேவை ஏற்படின் கேரள அரசின் உதவியை நாடுவோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரள அரசு தினமும் 2 MLD நீர் அனுப்பினால் உதவிகரமாக இருக்கும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து நாளை நடைபெறும் தண்ணீர் தொடர்பான கூட்டத்தில் விவாதிக்கப்படும். எனவே தமிழக முதல்வர் தண்ணீர் உதவியை மறுத்ததாக கூறப்படும் தகவல் உண்மையில்லை
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தற்போதைய செய்திகள் - by johnypowas - 21-06-2019, 09:47 AM



Users browsing this thread: 82 Guest(s)