Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
பள்ளிகளில் வாரத்தில் ஒரு நாள் யோகா பயிற்சி.. இந்தி குறித்த கேள்வியால் தர்மசங்கடமான செங்கோட்டையன்
சென்னை: இந்தி ஆட்சி மொழி என 7ம் வகுப்பு பாட புத்தகத்தில் இருக்கிறேதே என செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, கல்வி அமைச்சர் செங்கோட்டையன், இருமொழி கொள்கை தான் அரசின் கொள்கை என மழுப்பலாக பதில் அளித்துவிட்டு தப்பினார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர். வாரத்தில் ஒரு நாள் பள்ளிகளில் யோகா கட்டாயமாக்கப்படும் என்று கூறினார்.
இன்று சர்வதேச யோகா தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. சென்னை நந்தனத்தில் நடந்த யோகா பயிற்சியில் பள்ளி மாணவ மாணவிகளுடன் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்றார்.

[Image: sengottaiyan-1561087828.jpg]


அதன்பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "மதங்களுக்கு அப்பாற்பட்டது யோகா, யோகா செய்வதன் மூலம் அமைதியும் உடல் ஆரோக்கியமும் கிடைக்கும். மாணவர்கள் சிந்தனைகளை மேம்படுத்தவும் அறிவுக்கூர்மையுடன் விளங்கவும் யோகா பெரிதும் உதவுகிறது.
அனைத்து பள்ளிகளிலும் வாரத்திற்கு ஒரு நாள் யோகா பயிற்சி திட்டம் அமல்படுத்தப்படும். பள்ளிகளில் யோகா பயிற்சி வழங்க 13 ஆயிரம் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்
அரசு பள்ளிகளை பொறுத்தவரையில் அங்கு விளையாட்டு மைதானங்களின் ஓரங்களில் குறைந்தது 3 அடி ஆழத்தில் மழைநீர்சேகரிப்பு அமைப்புகளை ஏற்படுத்த திட்டமிடடுள்ளோம். அதன்படி பள்ளிகளில் தன்னார்வலர்கள், தொழில்அதிபர்கள், முன்னாள் மாணவர்கள் ஒருங்கிணைந்து பல பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இதுவரை 102 கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு பணிகளை அவர்களுடன் மேற்கொண்டு வருகிறோம்" என்றார்.

இந்தி ஆட்சி மொழி என 7ம் வகுப்பு பாடபுத்தகத்தில் இருப்பது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விககு, இருமொழி கொள்கை தான் அம்மாவின் கொள்கை, அதைத்தான் எங்கள் அரசு பின்பற்றி வருகிறது என்றார். ஆனால் இந்தி ஆட்சி மொழி என உள்ளதே என்ற கேள்விக்கு பதிலே அவர் சொல்லாமல் லாவகமாக அங்கிருந்து கிளம்பினார்.
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தற்போதைய செய்திகள் - by johnypowas - 21-06-2019, 09:43 AM



Users browsing this thread: 100 Guest(s)