30-05-2024, 09:03 AM
【165】
⪼ பரத்,வாயாடி & சுனிதா ⪻
காலையில் வாயாடி ஹாலுக்கு வந்தாள்.
குட் மார்னிங் அங்கிள்,
பரத் பதில் சொல்லாமல் ஏதோ யோசித்துக் கொண்டிருந்தான்..
ஏன் இன்னும் சோகம்? தம்பி உங்ககிட்ட வருவான் என்றவள் என்னை சிரிக்க சொல்லி பஞ்சாயத்து பண்ணினாள். நான் சிரித்த பிறகே, இப்பதான் மூஞ்சி பார்க்குற மாதிரி இருக்கு என சொல்லி அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்.
சமையல் செய்யும் அக்கா எல்லாத்தையும் பார்த்தார்கள். நடந்த எல்லா கெட்டதுலயும் நடந்த ஒரே நல்ல விஷயம் வாயாடிதான். உன் முகத்துல அவ இருக்கும் போது தான் சிரிப்பை பார்க்க முடியுது என்றார்கள் அந்த அக்கா.
சுனிதாவும் கொஞ்ச நேரத்தில் வெளியே வந்தாள்.
குட் மார்னிங் அங்கிள் என்றாள் சுனிதா.
குட் மார்னிங் சுனிதா.
எனக்கு குட் மார்னிங் சொல்லல, அவளுக்கு மட்டும் எப்படி சொல்லலாம் என சண்டை பிடிக்க ஆரம்பித்தாள் வாயாடி.
அம்மா தாயே ஆளை விடு. எதுக்கு இப்படி சின்ன புள்ளை மாதிரி பண்ற.
அந்த பயம் இருக்கட்டும் என்றாள் வாயாடி.
மீண்டும் நீங்க தான் எங்களுக்கு எல்லாம் அங்கிள் என்றாள் சுனிதா.