26-05-2024, 05:09 PM
(This post was last modified: 26-05-2024, 10:15 PM by Geneliarasigan. Edited 8 times in total. Edited 8 times in total.)
பாகம் - 77
நிகழ் காலம்
காத்தவராயன் தோல்வி
காலங்கள் வேகமாக சுழன்றது..மதிவதனியை அவ்வப்பொழுது அவன் அவமானப்படுத்தி சுவைத்து இருந்தாலும்,உள்ளூர அவனுக்கு மனசு அரித்து கொண்டே இருந்தது.
எப்படியாவது அவளை ஒருமுறை வில்வித்தை போட்டியில் தோற்கடிக்க வேண்டும் என அவன் மனம் துடித்து கொண்டு இருந்தது..
கர்ணன் பரசுராமரிடம் இருந்து விஜயவில் வரமாக பெற்று இருந்தான்..ஆனால் அதை அவன் எந்த போரிலும் உபயோகிக்கவே இல்லை.குருஷேத்திர போரில் அவன் தலைமையேற்று நடந்த 2 நாள் போரில் மட்டும் தான் அந்த வில்லை உபயோகித்தான்.அந்த விஜயவில் சிவனால் பரசுராமருக்கு கொடுக்கப்பட்டு பின் கர்ணனுக்கு கிடைத்தது..அந்த வில் கையில் இருக்கும் வரை அவனை யாரும் வெல்ல முடியாது என கண்ணனுக்கு நன்றாக தெரியும்..அதனால் தான் தேர் கால் இடறி அவன் நிராயுதபாணியாக இருக்கும் பொழுது தான் கண்ணன் அர்ஜுனனை வைத்து அவனை கொல்ல வைத்தது..கர்ணன் ஏன் மற்ற போர்களில் விஜயதனுஷை உபயோகிக்கவில்லை என்றால் அவன் பெரும்பாலும் தன் வில் வித்தையை தான் நம்பி இருந்தான்..என்ன தான் விஜயதனுசு பயன்படுத்தவில்லை என்றாலும் மற்ற போர்களில் கூட கர்ணன் தனது வில்திறமை மூலம் ஜராசந்தன் போன்ற பெரிய வீரர்களை அனாசாயமாக தோற்கடித்து உள்ளான்..விஜயவில் இல்லையென்றாலும் கர்ணன் சிறந்த வீரன் தான்.அதே போல் மதிவதனியிடம் தெய்வீக வில் இல்லையென்றாலும் அவள் வில் வித்தையில் கொஞ்சம் கூட சளைத்தவள் இல்லை..அதை காத்தவராயன் கொஞ்சம் கூட புரிந்து கொள்ளவில்லை.
ஒரு இனிய காலை வேளையில் காத்தவராயன் மதிவதனியிடம்,"என்னை நீ தோற்கடித்ததில் இருந்து என் மனம் உள்ளுக்குள் குமைந்து கொண்டே இருக்கிறது மதி..!நமக்குள் மீண்டும் ஒரு போட்டி வைத்து கொள்ளலாமா..!என்று அவன் கேட்க,
மதிவதனி தோள்களும் திணவு எடுத்தது..நானும் போரிட்டு நாளாகி விட்டதே..! ஒரு பயிற்சிக்காவது போரிட வேண்டும் என தோன்றியது..
"சரி எங்கு போரிடலாம்.நீயே கூறு..!"
"தக்சீலா சென்று போரிடலாம் மதிவதனி.."
"தக்சீலாவா.." அது என்ன இடம்..?
தக்சீலா என்பது தென்னகத்தில் உள்ள ஒரேயொரு எரிமலை.அந்த எரிமலையின் பெயரே அந்த இடத்தின் பெயராகி விட்டது. எரிமலை பக்கத்தில் யாரும் அங்கே வசிப்பது இல்லை..அங்கே நாம் போட்டியிட வசதியான இடம் அது.."
இருவரும் போர்க்கோலம் பூண்டு தத்தம் ரதங்களில் அமர்ந்து குதிரையை முடுக்கி தக்சீலாவை நோக்கி விரைந்தார்கள்.
தக்சீலா, மாயமலையின் இயற்கை அழகை காட்டிலும் இன்னும் அழகாக இருந்தது.தக்சீலாவின் எரிமலை குழம்பில் இருந்து வெளிவந்த தாதுக்கள்,மற்றும் சத்துக்களால் செடி,கொடிகள் மிக மிக செழிப்பாக இருந்தது..இன்னும் சொல்ல போனால் இங்கு இருக்கும் தாதுக்கள் மற்றும் சத்துக்கள் உயிரினங்கள் வழியே இயற்கையாக மாயமலைக்கு கடத்தப்பட்டதால் தான் அந்த மாயமலையே செழிப்பாகவும்,அடர்த்தியாகவும் இருந்தது.ஆனால் எரிமலை அருகே மட்டும் உண்டான வெப்பத்தில் வெட்ட வெளியாக இருந்தது..அங்கு ரதத்தை காத்தவராயன் நிறுத்தினான்.
மதிவதனி முதலில் வில்லை தொட்டு வணங்கி விட்டு எடுத்து பார்த்தாள்.அதன் நடுப்பகுதியில் கை வைத்து அழுத்தி அதன் கெட்டி தன்மையை ஆராய்ந்தாள்.அதற்கேற்றவாறு தனது நாணின் அழுத்தத்தை சரி செய்து கொண்டாள். நாணிணை பின்பக்கமாக இழுத்து அதன் இழுவிசையை சரிபார்த்து கொண்டு "தயார் "என்றாள்.
காத்தவராயன் இதை எதையும் செய்யவில்லை..ஆரம்பத்திலேயே மூர்க்கத்தனமாக பாணங்களை விட ஆரம்பித்தான்..ஆனால் மதிவதனி எளிதாக அவன் அம்புகளை வெட்டி வீழ்த்தி கொண்டு இருந்தாள்.ஆனால் அவள் விட்ட பாணங்கள் அவன் வில்லின் நாணை அறுத்ததே ஒழிய,அவன் உடலை துளைக்கவில்லை..ஆனால் அவன் விட்ட பாணங்கள் மதிவதனி மேனியை கூட நெருங்கவில்லை.அந்த அளவு திறமையாக அவன் அம்புகளை தடுத்து கொண்டே இருந்தாள்.சாதாரண வில் அவள் கையில் இருக்கும் பொழுதே காத்தவராயனால் அவளை கொஞ்சம் கூட வெல்ல முடியவில்லை..நேரம் ஆக ஆக அவளை வீழ்த்த முடியவில்லை என்று வெறி வந்தவனாய் அம்புகளை கன்னாபின்னாவென்று விட ஆரம்பித்தான்..அப்படி விட்ட பாணங்கள் இம்சை அரசன் 23 ம் புலிகேசி வடிவேலு விட்ட அம்புகள் போல் இலக்கு தவறி எங்கெங்கோ போய் விழுந்தது.அதில் ஒன்று தக்சீலா என்ற எரிமலை வாய் மீது இருந்த பாறை மீது போய் விழுந்தது..அந்த எரிமலை அடிக்கடி பொங்கும் மலை,அதனால் சேதம் அதிகமாகிறது என ஒரு முனிவர் எரிமலையின் வாயை ஒரு பாறை கொண்டு கச்சிதமாக மூடி இருந்தார்..
மதிவதனிக்கு அவள் குரு சொன்ன வார்த்தைகள் காதில் ஒலித்தது..இப்பவும் நான் அவனை வெற்றி கொண்டால் காத்தவராயனுக்கு என் மீது வன்மம் தான் அதிகம் ஆகும் என அவள் உணர்ந்தாள்..அவன் விட்ட அம்பு அவள் வில்லை தாக்க வருவதை உணர்ந்து கொண்ட மதிவதனி அதற்கு பதில் அம்பு விடாமல் விட்டுகொடுக்க அது அவள் வில்லின் நாணை அறுத்தெரிந்தது..
காத்தவராயன் வெற்றியில் துள்ளி குதித்தான்.ஆனால் அவன் மகிழ்ச்சி சில நொடிகள் கூட நிலைக்கவில்லை..அவன் தவற விட்டு இருந்த அம்பால் எரிமலை வாய் மீது இருந்த பாறை தள்ளாடி கொண்டு இருந்தது..அவன் துள்ளி குதித்த நொடியில் அது உருண்டு கீழே உருண்டு வர ஆரம்பித்தது..கூடவே இத்தனை வருடம் பாறையால் அடங்கி இருந்த எரிமலை குழம்பும் பொங்கி வழிந்து கீழே ஒடி வந்தது...
அதுவரை தியானத்தில் இருந்த முனிவர் கண் விழித்தார் .
அவன் முன் தோன்றி,"மூடனே...உன் அறிவிலித்தனத்தால் ஒரு மாபெரும் அழிவை ஏற்படுத்தி விட்டாய்..உன் முட்டாள்த்தனத்தால் ஏற்பட்ட பேரழிவை நீ தடுக்காவிடில் உன்னை நான் இக்கணமே சபித்து விடுவேன்"என அவர் முழங்க முதல் முறை அவன் மனம் நடுங்கியது.
அவன் வில்லினால் அம்பு விட்டு உருண்டு வரும் பாறையை தடுக்க பார்த்தான்..அவன் விட்ட அம்புகள் அந்த பாறையில் பட்டு ஒடிந்தன..பதட்டத்தில் அவனுக்கு என்ன செய்ய வேண்டும் என்றே தெரியவில்லை..அந்த நேரத்தில் மதிவதனி துணிந்து தன் ரதத்தை முன்னோக்கி செலுத்த சொன்னாள்.. தன் வில்லில் நாணை ஏற்றி வானை நோக்கி ஒரு அஸ்திரத்தை பிரயோகம் செய்தாள்..இந்த வில்லினால் அவளால் தெய்வீக அஸ்திரத்தை பிரயோகிக்க இயலாது என்று தெரியும்.அதனால் மிதமான வருணாஸ்திரத்தை உபயோகித்தாள்..சாதாரண வில்லில் இருந்து அதை எய்த காரணத்தினால் அவள் தோள்களில் இருந்து பெரும் சக்தியை உபயோகிக்க வேண்டி இருந்தது..அந்த வருணாஸ்திரம் ஓடிவந்த எரிமலை குழம்பின் மேல் மழையை பொழிவித்து கல்லாக்கியது.
மதிவதனிக்கு மயக்கம் வருவது போல் இருந்தது..அதை அடக்கி கொண்டு கடைசியாக தன் ஆத்ம பலத்தை ஒன்று திரட்டி அம்பின் நுனியில் அவள் ஆத்மபலத்தை குவித்து ஆத்மாஸ்திரம் (ராம பானம் போல்) எய்த உடன் அது ஒடி வந்த பாறையை அலேக்காக தூக்கி கொண்டு எரிமலை வாயின் மீது கொண்டு போய் சேர்த்தது...அதை பார்த்து முனிவரும்,காத்தவராயனும் பிரமித்து போனார்கள்..மதிவதனி வில்லும் அவளின் சக்தியை தாங்க முடியாமல் ஒடிந்து விழ, அவளும் மயங்கி கீழே விழுந்தாள்.
தன் தவவலிமையால் முயன்று வைத்த பாறையை இந்த பெண்ணால் எப்படி இந்த காரியத்தை அசாதாரணமாக செய்ய முடிந்தது என முனிவர் அதிசயித்து போனார்...
மதிவதனியின் தலையை தன் மடியில் வைத்து குண்டலத்தில் உள்ள நீரை தெளித்து அவளை எழுப்பினார் .
"எழுந்திரு மகளே...!"என முனிவர் சத்தம் எழுப்ப
மதிவதனி முகத்தில் உள்ள நீரை துடைத்து கொண்டு எழுந்து முனிவரின் முகத்தில் உள்ள தேஜஸை பார்த்த உடன் அவள் கண்கள் கலங்கியது.உடனே முனிவரின் காலில் விழுந்து வணங்கி நமஸ்கரித்தாள்..
"எழுந்திரு மகளே..!உனக்கு அநேக கோடி நன்மைகள் உண்டாகட்டும்.செயற்கரிய காரியத்தை நீ செய்து உள்ளாய்.பொங்கி வந்த எரிமலை குழம்பில் இருந்து ஏராளமான உயிர்களை காப்பாற்றி உள்ளாய்..என் ஆசிர்வாதம் முழுக்க உனக்கு உண்டு..இந்த பாறை அக்னி ஸ்தலமான திருவண்ணாமலையில் இருந்து நான் கொண்டு வந்தது..மற்ற பாறைகள் எல்லாம் எரிமலை குழம்பு வெப்பத்தில் உருகிவிடும்.ஆனால் திருவண்ணாமலையோ அக்னிதலமாக இருந்தது..அந்த மலையில் உள்ள பாறைகள் எந்த வெப்பத்தையும் தாங்க கூடிய ஒன்று..இந்த மாயமலையின் நலனுக்காக ஈசனின் அருள் பெற்று இந்த பாறையை நான் இங்கே கொண்டு வந்து வைத்தேன்.ஆனால் இந்த மூடனால் பெரும் அனர்த்தம் நிகழ இருந்தது.நல்லவேளை நீ அதை தடுத்து விட்டாய்."
காத்தவராயனை பார்த்து முனிவர்,"மூடனே..இந்த தெய்வ மங்கையால் என் சாபத்தில் இருந்து தப்பித்தாய்..உன்னை விட இந்த பெண் சக்தி குறைந்தவள் ஆயினும் தன் சக்தியை நல்லதுக்கு பயன்படுத்தியதால் அவள் பக்கம் இறை அருள் நின்று அவளுக்கு வெற்றியை தேடி தந்தது..ஆனால் நீ அவளை விட பலம் அதிகம் உள்ளவன் ஆயினும் உன் ஆணவத்தால் நீ தோற்று உள்ளாய்.கிடைத்து இருக்கும் வாழ்க்கையை ஒழுங்கா வாழ பார்.இந்த பெண்ணுக்கு நீ விளைவிக்கும் ஒவ்வொரு துன்பமும் உன் ஆயுளை குறைக்கும் என மறவாதே...!நடந்த போட்டியில் நீ வெற்றி பெற்று விட்டாய் என நினைக்காதே..உண்மையில் வெற்றி பெற்றது இந்த பெண் தான்."என அவர் கூறினார்..
அவர் சொன்ன அறிவுரை மதிவதனிக்கும் தான் இதுவரை செய்த தவறை புரிய வைத்தது..தான் என்ற ஆணவம் கொண்டு இருந்தவரை இவனை என்னால் வெல்ல முடியவில்லையே..தந்தை சொல் மீறினேன்.தேவையில்லாத போர் தொடுத்து ஏராளமான உயிரிழப்புக்கு காரணம் ஆகி விட்டேன்.என்னால் யாரையும் தோற்கடிக்க முடியும் என்ற ஆணவம் எனக்கு இருந்தது.இவனிடம் தோற்ற பிறகு தானே என் ஆணவம் என்னை விட்டு நீங்கி போனது.அதன் பிறகு தானே இவனை என்னால் மீண்டும் மீண்டும் வெற்றி கொள்ள முடிந்தது..நான் வாழ்க்கையின் முக்கியமான பாடத்தை புரிந்து கொண்டேன்.நான் என்ற ஆணவம் ஒழிந்தது..எனக்கு சரியான பாடம் புகட்டியதற்கு நன்றி இறைவா...!என மனதுக்குள் பிரார்த்தனை செய்தாள்.
காத்தவராயனால் முனிவரை எதுவும் செய்யமுடியவில்லை.அவரின் சக்தி பற்றி அவன் அறிந்தே இருந்தான்.அதனால் அமைதியாக இருந்தான்..
முனிவர் மதிவதனி பக்கம் திரும்பி,"மகளே அனைத்தும் காரணத்துடன் தான் உன் வாழ்க்கையில் நடைபெறுகிறது.அதனால் கவலை கொள்ள ஏதும் இல்லை.நீ எண்ணி இருக்கும் காரியம் ஈடேறிவிட்டது.உன் துன்பங்கள் எல்லாம் மறையும் காலம் நெருங்கி கொண்டு இருக்கிறது..நீ அரண்மனை சென்ற உடன் நீ எண்ணிய காரியம் நடந்து இருப்பதை உணர்ந்து கொள்வாய்"என மீண்டும் ஆசிர்வதித்தார்.
காத்தவராயன் மீண்டும் மதிவதனியிடம் தோற்று தலைகுனிந்து அரண்மனை திரும்பினான்..
அவன் நாட்டு மக்களே,மதிவதனியை விரும்ப தொடங்கி இருந்தனர்..மக்களுக்கு தேவையானவற்றை தன் அதிகாரத்தை பயன்படுத்தி முடிந்த அளவு நன்மையை செய்து இருந்ததால்,அவனுக்கு பயந்து கொடுத்த மரியாதையை அவளுக்கு அன்பால் கொடுத்தனர்.
காத்தவராயன் மனதுக்குள்,"இந்திரனை வெற்றி கொண்ட இந்திரஜித் சக்தி மட்டும் எனக்கு கிடைக்கட்டும்,பின் இவளை எளிதாக தோற்கடித்து காட்டுகிறேன்..அப்புறம் இந்த முனிவரே என்னை கண்டு வணங்க தான் வேண்டும்...பிறகு இந்த உலகமே எனக்கு அடிமை"என மனதுக்குள் கொக்கரித்தான்.
நிகழ்காலத்தின் காட்சிகள் இன்னும் சரியாக மனதில் உருப்பெறவில்லை.அதனால் மன்னர் கால பதிவு மட்டும் இன்று பதிவிட்டு உள்ளேன்.விரைவில் நிகழ் கால பதிவும் வரும்.