Romance இரு துருவங்கள்
மோகன் வீட்டில் 
நிர்மலா : பாட்டி இன்னைக்கு நா ஊருக்கு போறேன் பாட்டி 
தேவி : இல்ல மா உன்னை தனியா எங்கயேயும் அனுப்ப கூடாதுனு மோகன் சொல்லிருக்கான் மா. உன் வீட்டுக்கு போன் போட்டு உங்க அம்மாவையும் தங்கச்சியும் இங்க வர சொல்லு மா 
நிர்மலா : ஏன் பாட்டி 
தேவி : உனக்கு வேலை இல்ல. உங்க குடும்ப கஷ்டம் எல்லாம் பாப்பா மோகன் தம்பி கிட்ட சொல்லுச்சு. மோகன் என்கிட்ட அந்த பொண்ணுக்கு நம்ம கம்பெனில வேலை போட்டு கொடுக்கணும். அவுங்க குடும்பம் நம்ம staff கோட்ரெஸ் ல தங்க வைக்கணும் சொன்னான் 
நிர்மலா : ஆமா பாட்டி என்னை ரவுடிகளிட்ட இருந்து காப்பாத்துன அந்த பிரபு அண்ணாவை எங்க, 
தேவி : ஓ உனக்கு விஷயம் தெரியாதோ அந்த தம்பியை ஒரு கும்பல் அவரு கையை வெட்டிட்டானுக ரவுடி பசங்க 
நிர்மலா : என்ன சொல்றிங்க பாட்டி. இத ஏன் என்கிட்ட சொல்லல. இப்போ எந்த ஹாஸ்பிடல் இருக்காங்க 
தேவி : நீயே ஒரு வித பயத்துல இருந்த. அதான் உன்கிட்ட சொல்லல 
நிர்மலா : என்ன பாட்டி நீங்க நா போய் அண்ணாவை பாக்க போறேன் நீங்க வாரீங்களா.
தேவி : இரு மா போவோம் 
நிர்மலா : ஆமா பாட்டி அண்ணா அன்னைக்கு ரவுடிகளை அடிச்சி விரட்டி ஓட விட்டாரே இப்போ மட்டும் எப்படி இப்படி ஆச்சு 
தேவி : யம்மா பிரபு தம்பியை சாதாரணமா நினைச்சிராத. அது உடற்பயிற்சி செஞ்சி உடம்பை நல்லா வச்சிருக்கும். பத்து பேர் வந்தாலும் அடிச்சி விரட்ட கூடிய சிங்கம் எங்க தம்பி பிரபு. அந்த கும்பல் அருவா வச்சி இருந்தாங்க, ஒருத்தனை அடிக்கும் போது மீதி இருக்குறவன் தம்பி கையை வெட்டிட்டாங்க. நீ சொல்லு கை தானே பலம். அதுவும் வலது கை வேற 
நிர்மலா : அச்சச்சோ அப்பறம் என்னாச்சு அண்ணாவை யாரு தான் காப்பாத்துனது 
தேவி : கடவுள் மாதிரி அந்த பொன்மாரி பாப்பா தான் காப்பாத்திச்சி. 
நிர்மலா : அந்த அக்கவா எப்படி பாட்டி அவுங்க அருவாவோட இருந்தாங்க சொன்னிங்க 
தேவி : அது ஏதோ சண்டை வித்தை கத்து இருக்கு போல அவங்ககிட்ட சண்டை போட்டு தம்பியை கூட்டி ஹாஸ்பிடல் சேர்த்துட்டு 
நிர்மலா : சூப்பர் பாட்டி அக்கா கிரேட் சரி வாங்க ஹாஸ்பிடல் போவோம் சொல்லி ஹாஸ்பிடல் கிளம்பி சென்றனர் 
மோகன் ஆபீஸ் 
மோகன் : கதிர் இங்க வாங்க 
கதிர் : இதோ வாரேன் சார் போனை வைத்து விட்டு மோகன் கேபினுக்கு சென்றான் 
கதிர் : சார் உள்ள வரலாமா 
மோகன் : வாங்க கதிர் உள்ள வாங்க உக்காருங்க 
கதிர் : தேங்க்ஸ் சார் சொல்லுங்க சார் 
மோகன் : உங்களை மேனஜர் போஸ்ட்க்கு ceo மேடம் உங்களை அப்பொய்ன்மெண்ட் பண்ணிருக்காங்க உங்களுக்கு தெரியும் தானே 
கதிர் : ஆமா சார் ஆனா அந்த போஸ்ட்க்கு நா சரி வருவனா தெரியல. இருந்தாலும் நா என் வேலைக்கு நேர்மையா இருப்பேன் சார் 
மோகன் : குட். உங்களை தூத்துக்குடி கிளைக்கு மாத்தி இருக்கோம்.உங்களுக்கு சம்மதமா 
கதிர் : சம்மதம் சார் என்னை எந்த கிளையில் போட்டாலும் உண்மையா இருப்பேன் 
மோகன் : சரி இது வரைக்கும் நானும் என் மகனும் பார்த்த கம்பெனி இப்போ என் மருமகள் இருக்காங்க. அவுங்க எடுக்குற எந்த முடிவுக்கும் நாங்க குறுக்க நிக்க மாட்டோம். உங்களுக்கு புரியும் நினைக்கிறேன்.
கதிர் : புரியுது சார். அவுங்க ரொம்ப ஸ்ட்ரிக்ட். தப்பு செஞ்சா யோசிக்கவே மாட்டாங்க உடனே வேலையை விட்டு தூக்கிருவாங்க. எல்லாம் தெரியும் சார். நா தப்பு செய்ய மாட்டேன் சார் 
மோகன் : குட் இந்தாங்க ட்ரான்ஸபெர் ஆர்டர் நாளைக்கே போய் ஜோயின் பண்ணிக்கோங்க. Ceo மேடம் கிட்ட ஒரு கையெழுத்து வாங்கிட்டு போங்க.
கதிர் : ஓகே சார் சொல்லி சந்தோசமாக வெளியே சென்றான், 
இங்கு ஹாஸ்பிடல் 
பொன்மாரி : டேய் வயிறு பசிக்கா டா 
பிரபு : இல்ல ஏன் கேக்கற 
பொன்மாரி : மணி 10 ஆகுது இன்னும் டிபன் வரல பாட்டி ஏன் லேட் பண்றாங்கனு தெரியலையே டா 
சொல்லும் போது தேவி நிர்மலா உள்ளே வந்தனர் 
தேவி : மன்னிச்சிக்கோ பாப்பா இன்னைக்கு லேட் ஆகிடுச்சு 
பொன்மாரி : மணி என்னாச்சு பாட்டி இவரு சாப்பிட்டு மாத்திரை போடணும் உங்களுக்கு தெரியும்ல. இங்க கேண்டீன் சாப்பாடு இவருக்கு வேண்டாம்னு தானே வீட்ல இருந்து சாப்பாடு கொண்டு வர சொன்னே. இனிமேல் லேட்னு சொல்லாம கரெக்ட் டைம்க்கு கொண்டு வாங்க 
நிர்மலா : அக்கா சாரி என்னால தான் லேட். இவுங்க சீக்கிரம் கிளம்பிட்டாங்க நா தான் அண்ணாவுக்கு என்னாச்சு கேட்டு பேசிட்டு இருந்தோம் 
பொன்மாரி : இங்க பாரு நிர்மலா என் உசுரு இவுரு. மார்னிங் 7 மணி சாப்பிட்டு மாத்திரை போடணும். மணி 10 ஆகுது இன்னும் இவரு சாப்பிடல மாத்திரை போடல, அப்போ எனக்கு எப்படி இருக்கும் உடம்பு சரியில்லாத மனுஷன் வேற பாவம் இவரு 
தேவி : இனி கரெக்டா கொண்டு வாரேன் பாப்பா 
பொன்மாரி : பாட்டி வருத்தம் படாதீங்க என் நிலைமையில் இருந்து யோசிச்சு பாருங்க. இவரு சாப்பிடல மாத்திரை போடல அதான் எனக்கு கஷ்டமா இருந்தது. அந்த கோவத்துல உங்ககிட்ட பேசிட்டேன். மன்னிச்சிக்கோங்க பாட்டி. நிர்மலா நீயும் மன்னிச்சிக்கோ மா 
தேவி : ஐயோ பாப்பா என்னமா நீ என்கிட்ட போய் மன்னிப்பு எல்லாம் கேட்டுட்டு, தப்பு என் மேலே தான். 
நிர்மலா : ஐயோ அக்கா விடுங்க. நீங்க அண்ணா மேலே வச்ச பாசம் உங்களை இப்படி பேச வச்சிது. விடுங்க அக்கா.
கதிர் : மேடம் உள்ள வரலாமா 
பொன்மாரி : வாங்க 
கதிர் : மேடம் இதுல உங்க கையெழுத்து வேணும் 
பொன்மாரி : ஹ்ம்ம் கொண்டாங்க அவன் கொடுத்தான். கூடவே கையெழுத்து போட பெண் கொடுத்தான். அவளும் கையெழுத்து போட்டு அவனிடம் கொடுத்து. ஆல் the பெஸ்ட் நல்லா பாருங்க. உங்க வேலைல கரெக்டா இருங்க. Any டவுட் 
கதிர் : இல்ல மேடம் 
பொன்மாரி : ஓகே நாளைக்கு ஜோயின் பண்ணிருங்க. போய் அக்கௌன்ட் செக் பண்ணிட்டு எனக்கு ரிப்போர்ட் அனுப்புங்க.
[+] 1 user Likes Murugansiva's post
Like Reply


Messages In This Thread
RE: இரு துருவங்கள் - by Murugansiva - 25-05-2024, 11:17 AM



Users browsing this thread: 21 Guest(s)