22-05-2024, 09:51 PM
(This post was last modified: 26-05-2024, 01:49 PM by sagotharan. Edited 1 time in total. Edited 1 time in total.)
ஒரே மாதத்தில் அந்த மாற்றம் நடந்தது. சீவலப்பேரி பாண்டி, வேலம்மாள் வீட்டில் மூன்று குழந்தைகளுடன் விஷ்ணுபிரியாவும் சேர்ந்து வாழ தொடங்கினார்கள். ஊரே.. தாவங்கட்டையில் கையை வைத்து ஆவென வாயை பிளந்து பார்த்தது.
"அடியே சக்காளத்தி.. உன்னோட புள்ள.. பால் எல்லாம் குடிச்சுபுட்டு பதுசா தூங்க ஆரம்பிச்சிடுச்சு.. ஆத்தா எங்கே என்று அடம் பிடிக்காமல் என் மடியிலேயே சாஞ்சிகிடுச்சு. " என உறங்கிய பிள்ளையை தொட்டிலில் போட்டுவிட்டு சீவலப்பேரி பாண்டியன் விஷ்ணு பிரியாவும் இருந்த இடத்திற்கு வந்து வேலம்மாள் பேசினாள்.
"சரிக்கா இனி நான் பாத்துக்குறேன். நீங்க வந்து வெகுநாழியாவது இவரை கூட்டிகிட்டு போங்க.."
"இந்த மனுசன கூட்டிகிட்டு போகணும் தான் நான் வந்தேன். ஆனா இப்ப அந்த மனுசனோட உங்களையும் கூட்டிகிட்டு போகலாமா என்று நான் யோசிக்கிறேன்.."
"அக்கா என்னக்கா சொல்றீங்க.."
"ஆமாண்டியம்மா.. என்ன மாயம் பண்ணனும் மந்திரம் பண்ணுனியோ என் புருஷன் ராவும் பகலும் உன் கால சுத்தியே வந்து கிடக்கான். எனக்கும் இள வயசு தான் ஆகுது ஆனாலும் என்ன பண்ண இந்த பாழாப்போன வயித்துல ஒரு புழு பூச்சி வந்து பார்க்கல.. அந்தாளுக்கும் உனக்கும் நல்லாத்தான் இருக்கு தேகம். நீங்க ரெண்டு பேரும் என் கூடவே இருங்க. உங்களோட உறவுக்கு நானே முடிச்சு போட்டு வைக்கிறேன். வா வந்து எங்களுடையே தங்கு.." என்றாள் வேலம்மாள்.
வேல மாலை முன் நின்று சீவலப்பேரி பாண்டிக்கும் விஷ்ணு பிரியாவிற்கு திருமணம் செய்து வைப்பதாக கூறினாள்.
விஷ்ணு பிரியாவிற்கு சீவலப்பேரி பாண்டியன் அது திகைப்பாக இருந்தது.
"என்னடி சொல்ற.. அப்ப நீ என்னை விட்டு போறங்ரியா.."
"யோவ் உன்னையே விட்டுவிட்டு போவேன்னு சொல்லல.. உன்னோட சேர்த்து அவளையும் கூட்டிகிட்டு போறேன்னு சொல்றேன்.. என்னுடைய இடத்தை எவளுக்காவும் நான் விட்டுக் கொடுக்க மாட்டேன். அதே சமயம் உங்களுடைய சந்தோஷத்துக்கு நான் குறுக்க நிக்கல.. நீ அவளை இரண்டாவது கல்யாணம் பண்ணிக்கோ.."
"என்னடி வாய்க்கு வந்ததை பேசற.. இதெல்லாம் நடக்கிறதா?" என்றான்.
"அக்கா ஒரே ஊட்டுல எப்படி ரெண்டு பொம்பளைங்களோட குடித்தனம் நடத்தறது.. ஊரு சனம் என்ன சொல்லும்?" என்றாள் விஷ்ணுப்ரியா.
"இப்ப மட்டும்.. உங்க ரெண்டு பேத்தையும் மெச்சிக்கிதா ஊரு. இல்ல என்னதான் நல்லா இருக்க விடுதா.. எதுவுமே இல்லை. என் புருஷனுக்கு இதனால தலை குணிவு தான் ஏற்படும். ரெண்டு பொண்டாட்டி கட்டுறது ஒன்னும் எங்களுக்கு புதுசில்லை. ஒரே குடும்பத்தில் அக்கா தங்கச்சியையும் சேர்த்து கட்டிக்கிட்டு ஒரே வீட்டலையே பொழப்பு நடத்துனது எல்லாம் இருக்கு. ஊர பத்தி நீ கண்டுக்காதம்மா. பத்து நாளு பரபரப்பா பேசும்.. பிறகு எல்லாம் சரியாகிவிடும்.."
"அக்கா இப்படி ஒரு வாழ்க்கையை நான் கனவுல கூட நினைச்சது இல்லை. இந்த மனசு எனக்கு கல்யாணம் ஆச்சுன்னு தெரியாம தான் நான் மனசு வச்சேன். முதல் தடவை கூடும்பொழுது கூட கல்யாணம் ஆகாத ஆளுன்னு தான் நினைச்சேன்."
"அப்படியா சங்கதி.. ஆம்பளைங்க அப்படி தாண்டி எல்லாத்தையும் மறைச்சு போடுவாங்க. அதனாலதான் பொம்பளைங்களுக்கு மட்டும் தாலின்னு ஒன்னு குடுத்துட்டானுங்க அது பத்தாதுன்னு கால்ல மெட்டி போடணும் நெத்தி வகுடுல பொட்டு வைக்கணும்.. இப்படின்னு ஆயிரத்தி எட்டு அடையாளம் எல்லாம் கொடுத்துட்டாங்க.. சரி அதுதான் கடக்கட்டும்னு பாத்தா.. புருஷன் செத்து போனதுக்கப்புறம் அதுக்கும் அடையாளம் வேணும்னு இருக்குறது எல்லாத்தையும் புடிங்கிபுட்டானுக.. "
"ஆமாக்கா ஆம்பளைங்களுக்கு ஒரு அடையாளம் இருந்திருந்தால் நானும் கொஞ்சம் சுதாரிச்சி இருந்திருப்பேன்.."
"என்னமோடி அம்மா.. நடந்ததுக்தெல்லாம் நல்லது தானே.. உனக்கும் எனக்கும் எல்லாரையும் போல இல்ல. நீ நிலவுன்னா.. நான் சூரியன். நான் அசலூரிலிருந்து இந்தூருல வாக்கப்பட்டேன். நீ இந்தூருல இருந்து அசலூருல வாக்கப்பட்ட... எனக்கு புருசன் உண்டு பிள்ளை இல்லை. உனக்கு பிள்ளை இருக்கு புருசன் இல்லை. உன் புள்ள மூணையும் இனி நான் பாத்துக்குறேன்.. நீ என் புருஷனை பார்த்துகிட்டு அந்த ஆளுக்கு ஒரு குழந்தையை பெத்து கொடு.. நான் தான் மலடி ஆயிட்டேன். இனியும் எனக்கு குழந்தை பிறக்கும் வரை நம்பிக்கை இத்து போச்சு. அதனால அந்த ஆளுக்கு வேற சொல்லி இந்த ஊர்ல ஒன்ன சுத்தட்டும்.. என்னடி அம்மா பெத்து தருவீல்ல.."
"அத பத்தி நான் நினைக்க கூட இல்லைங்க்கா. மூணு பொட்டையும் வச்சிக்கிட்டு ஆம்பள துணை இல்லாமல் எப்படி காலம் தள்ளப் போறேன்னு கவலைதாங்கா.. பட்டுக்கிட்டு இருந்தேன். இந்த மனுஷன் வரவும் நம்ம கவலையெல்லாம் தீரப்போகுதுனு.. அடுத்த வாழ்க்கை ஆரம்பிக்க போறோம்னு நினைச்சேங்க்கா.. அவருக்கு கல்யாணம் ஆகி நீங்க வீட்டுல இருக்கறது தெரிஞ்சு எனக்கு உடைந்து தான் போச்சு.. சரி ஆனது ஆகட்டும்னு அப்படியே விட்டுபுட்டேன்.."
"சரி.. உன்னோட மனசு எனக்கு புரியுது. யோவ் நீயும் சேர்ந்து கேட்டுக்கோ.. எனக்கு உங்க கல்யாணத்துல இருக்கிறது சில கண்டிஷன் தான். ஒன்னு.. நீங்க ரெண்டு பேரும் வெளியில போய் சம்பாதிச்சுகிட்டு வரவங்க. அதனால வீட்டுக்குள்ள இருந்து நிர்வாகம் பண்ற என் கையில மாசமான பணம் வந்துடனும். என் கையில் வந்து கொத்து சாவியை எனக்கு உன் கைக்கு வராது. இரண்டு உனக்கு இருக்கிற இந்த பிள்ளைகளும் இனிமேல் பிறக்கிற பிள்ளைகளும் என்னை தான் பெரிய ஆத்தா என்று கூப்பிடனும். என் மேல தான் பாசமா இருக்கணும்.. நானும் அதுக்கு மேல பாசமா இருப்பேன். புள்ள பெத்தது நானும் அதனால எனக்கு தான் மொத உரிமைனு நீ வரக்கூடாது."
"எல்லாம் சரிக்கா.."
"நீங்க என்ன சொல்றீங்க?"
"ம்ம்.."
"என்ன ம்ம்.. சரின்னு சொல்லுங்க.." அதட்டினாள்.
அவனும் "சரி.." என்றான்.
***

sagotharan