22-05-2024, 06:19 AM
(22-05-2024, 04:35 AM)krishkj Wrote: nandri nanba ipdi oru flashback oda explain panvinga edhir pakla naanum sila binni suniyaam pathee kelvi pattu iruken anaah intha alavaku illa... Ennoda akka erantha piragu sila amoneesha satham la ketu iruken...ninga solraa maari aavi kalah pathee kelvi pattu iruken... Kandha sasti pathee sonathu nalladhu tha use akum ....
Oja board try panni fever la paduthu iruken...
So aavi,athma la irupadhu unmaiey
Oja board எல்லாம் நான் படத்தில் பார்த்ததோடு சரி நண்பா...சில தினங்களுக்கு முன்பு என் வாழ்வில் ஒரு வித்தியாசமான அனுபவம். உங்களுக்கே தெரியும் வெயில் எப்படி தமிழ் நாட்டில் கொளுத்தியது என்று..வீட்டில் உள்ளே படுக்கவே முடியவில்லை. ஃபேன் போட்டாலும் அனல் காற்று..மொட்டை மாடியில் படுக்கலாம் என நினைத்தால் கொசு பயங்கரம்.ஒரு கொசு வலை ஆர்டர் செய்து வந்த உடன் எடுத்து கொண்டு மொட்டை மாடியில் சென்று படுத்தேன்.எப்பவும் போல நான கதை எழுதுவது தூங்குவதற்கு முன்பு தான். படுத்து கொண்டே மொபைலில் type செய்து கொண்டே இருந்தேன்.சரியா 12 மணி இருக்கும். ஏதோ ஒரு கெட்ட நாற்றம் வந்தது.அழுகிய முட்டை வாசம் என்று சொல்லலாம்.எங்கிருந்து வருகிறது என எழுந்து சுற்றும் முற்றும் பார்த்தால் ஒன்றும் தெரியல.தலையணையை மோந்து பார்த்தேன்.அதில் இருந்து வரவில்லை..ஏதோ உள்ளுணர்வு சொன்னது..உள்ளே போகலாம் என.அமைதியாக இறங்கி வீட்டின் உள்ளே சென்று படுத்து கொண்டேன்.பிறகு அந்த வாசனை சுத்தமா இல்லை.என் தங்கை இறந்த பிறகு அவள் நிறைய நேரங்களில் என்னிடம் இருப்பது போல உணர்ந்து இருக்கிறேன்.ஆனால் அப்ப அதுபோல வாசம் நான் உணர்ந்ததே இல்லை..இன்னும் சொல்ல போனால் நிறைய நேரங்களில் உதவி இருக்கிறாள்.