22-05-2024, 04:35 AM
(21-05-2024, 05:33 PM)snegithan Wrote: பாதி உண்மை பாதி கற்பனை ப்ரோ.சக்கோச்சி என்பது ஏவல் பில்லி சூனியங்களின் அதிபதி,அதை யாரும் அவ்வளவு எளிதில் யார் மீதும் ஏவ மாட்டார்கள்..எளிதில் வசப்படுத்தவும் முடியாது.எதிரியை முற்றிலும் அழிக்க வேண்டுமென்று ஒருவர் மீது ஏவி விடுவர்.அதனால் பாதிக்கப்பட்டவரை ஆரம்பத்தில் கண்டறிந்தால் மட்டுமே குணப்படுத்த முடியும்..அதுவும் மிக மிக தேர்ந்த பில்லி சூனிய வைக்கும் நபரால் மட்டும் தான் முடியும்..ஆனால் நேரம் கடந்து விட்டால் அவ்வளவு தான் யாராலும் காப்பாற்ற முடியாது..பாதிக்கப்பட்டவரின் மரணம் கொடூரமாக இருக்கும்..உடல் உள்ளுறுப்புகளை பிச்சி பிச்சி தின்று எடுத்து விடும்.. ரத்த வாந்தி எடுத்து வலியால் துடிதுடித்து சாவர்.இதுவும் ஒரு படத்தில் வந்ததது தான்..அந்த படத்தை பார்த்த பிறகு ஆர்வத்தில் எனக்கு தெரிந்த நண்பர் மூலமாக மைசூர் பக்கத்தில் உள்ள கொள்ளேகால் பகுதியில் மாந்த்ரீகம் பண்ணுபவரிடம் விசாரித்தேன்..அவரும் அதை பற்றி சில விவரங்கள் சொன்னார்..சக்கொச்சியை வசப்படுத்த முயன்று நிறைய பேர் இறந்து உள்ளனர் என்றும் சொன்னார்.அவர் இன்னொரு விசயமும் சொன்னார்..அதை தான் இந்த கதையின் பின்வரும் பகுதியில் உபயோகிக்க உள்ளேன்..அப்பொழுது அந்த விசயத்தை சொல்கிறேன் .இப்போ சொன்னால் சுவாரசியம் போய்விடும்..அவர் இன்னொன்றும் சொன்னார்..இந்த மாதிரி பில்லி சூனியங்களில் இருந்து தப்பிக்க ஒரு அருமையான வழி இருக்கு என்றும் சொன்னார்.அது நமக்கு கிடைத்து இருக்கும் கந்த சஷ்டி கவசம் தான்.அதில் இருக்கும் அட்சரங்கள் அவ்வளவு சக்தி வாய்ந்தவை என்று கூறினார்..இத்தனைக்கும் அவர் கன்னடர்..
என் வாழ்வில் நடந்த ஒரு உண்மை சம்பவம் ஒன்று சொல்கிறேன்..நான் வேலை செய்ய ஆரம்பித்தது ராஜாஜி நகர் பெங்களூரில் தான்..நான் தங்கி இருந்த இடம் மூன்று அடுக்கு பில்டிங்..முதல் மாடி ஃபேக்டரி,இரண்டாவது மாடி ஆபீஸ்,மூன்றாவது மாடியில் ஒரு பெரிய ஹால்,மற்றும் இரண்டு அறைகள்,மற்றும் என் அறைக்கு நேராக ஒரு சின்ன ஸ்டோர் ரூம் இருந்தன..முதல் அறையில் நான் தங்கி இருந்தேன்..பிறகு பெரிய ஹாலில் 20,25 பிஹாரை சேர்ந்த பசங்க தங்கி இருப்பாங்க..நான் வேலை செய்தது இன்டீரியர் கம்பனி..ஆனால் அதற்கு முன்பு அதே பில்டிங் ஒரு மெடிக்கல் கம்பனி ஆக இருந்தது..அங்கே வேலை செய்த பெண்ணை,சில பேர் சேர்ந்து பில்டிங் பின்புறம் உள்ள அடர்த்தியான புதரில் வைத்து வன்புணர்வு செய்து கொன்று விட்டனர்..அந்த பெண்ணின் ஆவி பெரும்பாலும் அந்த பில்டிங்கில் நடமாடுவதால் பில்டிங் ஒனர்,என்னோட ஒனருக்கு கம்மி வாடகையில் வாடகைக்கு விட்டு விட்டார்.பகலில் பிரச்சினை இல்லை..ஆனால் இரவு தான்.நான் அறைக்குள் தங்கி இருந்ததால் எனக்கு பெரிதாக எந்த பிரச்சினையும் தெரியல..ஆனால் ஹாலில் படுத்து இருக்கும் அந்த 20,25 பேரும் அந்த ஆவியை அடிக்கடி பாத்து இருக்கானுங்க..9 மணிக்கு மேல அவனுங்க கடைசியில் இருக்கும் பாத்ரூம் பக்கம் கூட போக மாட்டானுங்க..சாப்பிட்ட தட்டை கூட பாத்ரூம் அருகே போய் தான் கழுவனும்.ஆனால் இவனுங்க தட்டை கூட தூரத்தில் இருந்தே வீசி எறிந்து விட்டு ஓடி வந்து விடுவானுங்க..காலையில் போய் தான் சமைத்த,சாப்பிட்ட சாமானை கழுவானுங்க.இதை எல்லாம் பார்த்து எனக்கு சிரிப்பா இருக்கும்..ஆனால் எனக்கு நடக்கும் வரை..ஒருநாள் இரவு வழக்கம் போல நான் தனியா வந்து படுத்து விட்டேன்..அன்னிக்கு இவனுங்க யாரும் அங்கே இல்லை.அவனுங்க எல்லோரும் ஃபேக்டரியில் ரெடி ஆன பொருட்களைக் எடுத்து கொண்டு ஷோரூம் போய்ட்டானுங்க .அவனுங்களுக்கு இரவு முழுக்க ஷோரூமில் வேலை..நான் நல்லா தூங்கி விட்டேன்..ஆனால் திடீரென்று என்னை யாரோ அழுத்துவது போல உணர்ந்தேன்..என்னால் கண்ணை கூட திறக்க முடியல..கையை,காலை அசைக்க கூட முடியல..ஆனால் நினைவு நல்லா இருக்கு..தூக்கத்தில் இருந்து விழித்து விட்டேன்..எனக்கு அப்போ மாந்தீரிகர் சொன்னது தான் ஞாபகம் வந்தது..அந்த பெண்ணோட கொலுசு ஒலி கேட்கும் பொழுது ஏற்கனவே கேட்டு இருந்ததால் கந்த சஷ்டி கவசத்தை பாராயணம் செய்து வைத்து இருந்தேன்..அந்த வரிகளை மீண்டும் மீண்டும் மனதுக்குள் படிக்க படிக்க யாரோ என்மீது எழுந்தது போல உணர்வு.எழுந்து விளக்கு போட யாரோ நிழலாக நடந்து செல்வதை என் கண்ணால் பார்த்தேன்..திக்கென்று இருந்தது..அன்று இரவு தூக்கமே போய் விட்டது..அடுத்த நாள் விளக்கு போட்டு கொண்டு படுப்பது தான் வழக்கம்..ஆனால் கொலுசு ஒலி மட்டும் தினமும் என் அறைக்கு வெளியே கேட்கும்..படுக்க போகும் முன் தினமும் கந்தர் சஷ்டி கவசத்தை படித்து விட்டு தான் படுப்பேன் அங்கு இருக்கும் வரை

Oja board try panni fever la paduthu iruken...
So aavi,athma la irupadhu unmaiey