21-05-2024, 03:36 PM
வீட்டிற்குள் நுழைய கேட்டைத் திறந்த பார்வதியை அந்தப் பாடல் தடுத்தது.
"ஓலை குறுத்தோலை காத்துல ஆடுது..
கண்ணனை தேடுது..". கங்கை அமரன் வரிகளுக்கு எஸ். ஜானகி பாடுவது போல அத்தனை இனிமையான குரலோசை.
இனிய பெண் குரல். ஒரு நிமிடம் திகைத்தாள். பெரிய பையன் ரகு காலேஜ்க்குப் போய் விட்டான். அவர் ஆபீஸ்க்கு போய் விட்டார். வேலைக்காரி கூட இப்போது இங்கே இருக்க வழி இல்லை.
அப்படியானால் இப்படி இனிய பெண் குரலில் பாடுவது யாராக இருக்கும். ஆச்சர்யம் மேலிட பார்வதி மெல்லப் பூனை நடை நடந்து திறந்திருந்த ஜன்னல் கதவை மெல்லத் திறந்தாள்.
அங்கே....
அங்கே...
அவள் கண்ட காட்சி அவளை உண்மையிலேயே நிலை குலைய வைத்தது.
எத்தனையோ பேர் எத்தனையோ சந்தர்ப்பங்களில் சொன்னதை எல்லாம் அவள் பெரிது படுத்தவில்லை. ஆனால் இப்போது, வேறு வழியில்லை நம்பியே ஆக வேண்டும்.
"என்ன பார்வதி! உன் சின்னப்பையன் நடை பொம்பளை நடை போல இருக்குது.
"என்னடிப் பார்வதி உன் பையனுக்கு குரலே உடையல பொம்பளப் போல பேசுறான்."
"பார்வதி உன் பையன் வாச தெளிச்சு கோலம் போடுறது எல்லாம் சரியில்ல. இது ஆம்பள புள்ளக்கு அழகுல்ல."
அப்போதெல்லாம் நம்பவில்லையே!
"அம்மா இவன கடைக்கு அனுப்பாதே. அவன் பொம்பளை மாதிரி பேசுறான்னு என் ப்ரண்ட்ஸ் எல்லாம் சொல்றாங்க. அசிங்கமா இருக்கு" என்றான் போன வாரம் பெரியவன்.
அப்போதும் கூட நம்பவில்லையே! ஆனால் இன்று பெண் குரலில் பாடுவது மட்டுமல்ல! அவளின் புடவை, ஜாக்கெட் எல்லாம் எடுத்து போட்டுக் கொண்டு கண்ணாடி முன்னால் நின்று கொண்டு தன் அழகைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான்.
ஒரு நிமிடம் அப்படியே உட்கார்ந்து விட்டாள். முதல் முறையாய் தன் கண் எதிரே தன் மகன் புடவைக் கட்டிக் கொண்டு... சே சே... நினைத்துப் பார்க்கவே அருவெறுப்பாய் இருந்தது. சுய நினைவிற்கு வந்தவள் பாட்டுச் சத்தம் கேட்கின்றதா என்று கூர்ந்து கவனித்தாள். இல்லை. பாட்டுச் சத்தம் நின்று விட்டிருந்தது. மெல்ல எழுந்து கதவை தட்டினாள்.
"சரண்..சரண்.. கதவைத் திறடா"... குரல் கொடுத்தாள்.
"இதோ வந்துட்டேம்மா" பதில் கொடுத்தான்.
அரக்க, பரக்க அவன் ஓடுவதும், பீரோவை திறந்து மூடும் ஒலியும் துல்லியமாகக் கேட்டது. புடவையை சுருட்டி பீரோவில் போடுகிறான் போலும்.
"என்னடா பண்ணுற. சீக்கிரம் கதவை திறடா." அவசரப் படுத்தினாள்.
"இதோம்மா" சொல்லிக் கொண்டே அவசர கதியில் ஓடி வந்து கதவை திறந்தாள்.
வாசலிலேயே நின்று ஒரு நிமிடம் அவனையே கூர்ந்து கவனித்தாள். அவன் முகம் வேர்வையில் நனைந்திருந்தது. ஒப்பனையை அவசரக் கதியில் கலைத்திருந்தான். ஆனால் கண்ணில் மட்டும் மை போகவில்லை.
"என்னம்மா புதுசாப் பாக்குற மாதிரிப் பாக்குற" கள்ளம் கபடமில்லாத சிரிப்புடன் கேட்டான்.
"ஒண்ணுமில்லேப்பா ரொம்ப வெயில், அதான் வாசல்லேயே நின்னுட்டேன். உன்னோட உருவம் கூட சரியா தெரியல வெயில் இருந்து வந்தேன்ல அப்படியே இருள் அடிச்ச மாதிரியே வீடே இருக்குது.."
"சரி பார்த்து வாம்மா என கைகளை பிடித்துக் கொண்டான்". அத்தனை கரிசனம் மிக்க பையன்.
"சரி யாராவது வந்தாங்களா? யாராவது போன் செஞ்சாங்களா?" கேட்டுக் கொண்டே வீட்டினுள் நுழைந்தாள்.
"யாரும் வரலம்மா போய் சோபாவில் உட்காருங்க. எலுமிச்சை ஜூஸ் கொண்டு வரேன்" என்றபடி பேனைத் தட்டி விட்டு சமையலறக்குள் புகுந்தான். படபடவென வேலை செய்தான்.
அவன் சமையலறைக்குள் சென்று எழுமிச்சை பழங்களை அறிந்து பிழிந்து சாறு எடுத்தான். மிக லாபமாக அவன் கையாண்ட விதங்களை பார்த்து பார்வதிக்கு ஆச்சரியமாக இருந்தது. சட்டென்று ஒரு டம்ளர் கொஞ்சம் உப்பு கொஞ்சம் சர்க்கரை விட்டு தண்ணீரை வைத்து ஆற்றினான்.
திருச்சி திறந்து சில ஐஸ்பார்களை போட்டு மேலே சில கொத்தமல்லி இலைகளையும் கிள்ளிப் போட்டான். சோபாவில் சரிந்தபடி கவனித்தாள் பார்வதி.
ஒரு தட்டில் இரண்டு கண்ணாடி டம்ளர்களில் நிறைய அழகான சுவையான லெமன் ஜூஸ் அவள் கைக்கு வந்தது. அவள் வாங்கி குடித்தாள். லெமன் ஜூஸ் என்றல்ல.. சரணுக்கு நன்றாக சமைக்க தெரியும். நன்றாக கோலம் போட தெரியும்.
இவ்வாறு சமைக்க தெரிவதும், கோலம் போடத் தெரிவதும், வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வதும் பெண்களுக்கான வேலை மட்டுமல்ல அது ஆண்களுக்கான வேலையும் தான். ஒரு ஆண் மகனை எங்காவது விளக்கமாறுடன் பார்த்தால் கிராமத்தில் இருக்கும் பெண்கள் பதறிப் போய் விடுவார்கள். அதெல்லாம் வீட்டிற்கு ஆகாது என்று தள்ளி வைப்பார்கள். ஆனால் அலுவலகங்களில் அதுவும் பெண்கள் இல்லாமல் தானே நடத்தக்கூடிய கடைகளை வைத்திருக்கும் ஆண்கள் பலரும் கடை மிகவும் சுத்தமாக பேணுவதை அவள் கண்டிருக்கிறாள்.
அவள் மற்றவர்களை போல பத்தாம் பசலியாக என்றும் முடிவெடுத்ததே இல்லை. தன்னுடைய பையன் நன்றாக சமைக்க தெரிந்தவன் என்பது வரப்போகும் மருமகளுக்கு கொடுத்து வைத்திருக்கிறது என நினைத்து மகிழ்ச்சி தான் அடைந்தாள். ஆனால் சரண் சமைப்பது துவைப்பது, துடைப்பது என்பதும் இல்லாமல் இப்பொழுது பெண்களுடைய ஆடைகளையும் ஆவணங்களையும் அணிந்து பார்த்து மகிழக்கூடிய ஒரு மனநிலையில் இருக்கின்றான் என்பது அவளுக்கு திகைப்பாக இருந்தது.
"அம்மா எப்படி இருக்கு என்னோட ரெசிபி." என கேட்டான்
"நீ எந்த இதை சமைச்சாலும் டா அப்படியே ஆச்சியோட டேஸ்ட் வந்துருது. இந்த சக்கரையும் உப்பையும் லெமன் கூட சேர்ந்து போடுற பழக்கத்தை யாருகிட்ட இருந்து கத்துக்கிட்ட.." தன் உணர்வுகளை மறைத்தபடி கேட்டாள்.
"எனக்கா தோணுச்சு மா நான் சில யூடிபிலை பார்த்து வைத்திருந்தேன். அதெல்லாம் ஞாபகம் வந்துச்சு நல்லா தானே இருக்கு.. இதே கன்டினியூ பண்ணிரலாம் தானே.." என ஆவலாக கேட்டான். அவனுடைய கண்ணில் ஆச்சரியமும் ஆவல் எல்லாம் மிளிர்ந்தது.
"இதயம் மெயிண்டேயின் பண்ணுடா எதையும் கூட்டவோ குறைக்கவோ செய்யாதே அப்பதான் நல்லா இருக்கும்." என்று பார்வதி எடுத்துரைத்தாள்.
"சரிம்மா.."
"சரண்.. நான் வரும் போது ஏதோ பாட்டுச் சத்தம் கேட்டதே நீயா கண்ணா பாடியது.." தன் இயலாமையை வேறுவிதத்தில் வெளிப்படுத்தினாள். தலையைத் தாழ்த்திக் கொண்டான்.
"டேய் நல்லா இருந்துச்சி டா அதனால தான் கேட்டேன் அப்படியே ஜானகி அம்மா பாடுற மாதிரியே இருந்துச்சு.."
"அப்படியா அம்மா.."
"நான் ஏன்டா பொய் சொல்ல போறேன் நிச்சயம் இதே மாதிரி நீ நிறைய பாட்டு பாடணும்.."
"சரிம்மா.. நிறைய பாட்டு பாடறேம்மா.."
மகனின் உணர்வை புரிந்து கொண்ட அம்மா அவனை ஆரத் தழுவினாள். அவனுடைய உடலும் ஒரு பெண்ணைப் போல மிருதுவாக இருந்ததை உணர்ந்தாள். இவனை நாம் கண்டித்தால் மிகவும் பெரிய அளவிற்கு மன உளைச்சல் ஏற்படும். இவனை சரி செய்வதற்கு நல்லதொரு ஆளை நாம் கண்டுபிடிக்க வேண்டும் என ஆலோசித்துக் கொண்டாள்.
லெமன் ஜூஸ் குடித்த பிறகு அந்த டம்ளர்களை மிகவும் கவனமாக கழுவி கவிழ்த்துவிட்டு வெளியே வந்தான் சரண்.
"ஏன்டா இன்னைக்கு காலையில டியூசன் போகலையா?"
"இல்லம்மா எனக்கு டியூசன் போகவே பிடிக்கல."
"ஏன்டா நல்லா படிக்கிற பையன் டியூசனுக்கு போக மாட்டேன் என்று சொல்ற.."
"அது இந்த பசங்க தான் மா ரொம்ப கிண்டல் பண்றானுங்க.."
"நீ ஏன்டா.. கிண்டல் பண்ற மாதிரி நடந்துக்குற.."
"நீயும் அவங்களை மாதிரி பேசாதம்மா.. நான் என்ன வேணும்னா பண்ணினேன்.. என் குரல் கீச்சு குரலா இருக்கிறக்கு.. நான் என்ன பண்ண முடியும்.. டியூஷன்ல வேற ரெண்டு மாசம் பணம் பாக்கி இருக்கு.."
"சரி வாடா நான் டியூஷன் சார் கிட்ட பேசிக்கிறேன். டியூஷன் பீஸுக்கும் நான் சொல்லி விட்டுட்டு வரேன். ஆனா படிப்பு மட்டும் எக்காரணத்தை கொண்டும் நிறுத்திடாதடா.. உன்னோட வாழ்க்கையில இனி வரப் போற எல்லா விஷயத்துக்கும் படிப்பு தான் கை கொடுக்கும்"
"சரிமா.. படிக்கிறதுல எனக்கு ஒரு பிரச்சனையும் கிடையாது நல்லா படிப்பேன்.ஓகேவா.."
"ஓகேடா.."
அவள் மகிழ்ந்தாள்.

sagotharan