Romance இரு துருவங்கள்
பிரபு : கண்ணீரை துடைத்த பொன்மாரியே பார்த்து கொண்டு இருந்தான் 
:அத கவனித்த  பொன்மாரி 
பொன்மாரி : என்ன 
பிரபு : நீ இவ்ளோ அழகா இருக்கியே அதான் பாத்தேன் 
பொன்மாரி : பாஸ் இப்பவும் நீங்க சத்தமா பேசுறீங்க 
பிரபு : நா சத்தமா தான் பேசுறேன். நோ mind வாய்ஸ் 
பொன்மாரி : நீங்களா இப்படி பேசுறீங்க 
பிரபு : நா கோவக்காரன் தான், கோவத்துல பேச தெரியாம பேசிருவேன்,  ஆனா நா கல் நெஞ்ச காரன் இல்ல 
பொன்மாரி : இப்போ யாரு உங்களை கல் நெஞ்சி காரன் சொன்னா, ஓப்பனா ஒன்னு சொல்லட்டா 
பிரபு : ஹ்ம்ம் 
பொன்மாரி : நீங்க கோவப்பட்டாலும் டம்மி பீஸ் தான் 
பிரபு : டம்மி பீசா நானா முறைத்து பார்த்தான் 
பொன்மாரி : அவன் முறைப்பது விளையாட்டு என தெரிந்து அப்படி பாக்காதீங்க சிரிப்பு சிரிப்பா வருது 
பிரபு : சிரித்து விட்டான் அப்பறம் அவளை பார்த்து சாரி சொன்னான் 
பொன்மாரி : எதுக்கு சாரி 
பிரபு : இல்ல உன்னை போய் ஸ்டேட்டஸ். சொல்லி உன்னை வருத்த பட வச்சிட்டேன் 
பொன்மாரி : அவனுடைய கன்னத்தில் ஒரு கில்லு விட்டால் 
பிரபு : ஆஆஆஆ ஏன் கில்லுன 
பொன்மாரி : இல்ல இது கனவா நினைவா பார்த்தேன், அதான் கிள்ளி பாத்தேன் 
பிரபு : லூசு அது உனக்கு கிள்ளி பாக்கணும். இப்படியா கில்லுவ வலிக்குது தெரியுமா கண்ணத்தை தடவி கொண்டே சொன்னான் 
பொன்மாரி : அச்சச்சோ வலிக்குதா சொல்லிட்டு அவன் கையை எடுத்து விட்டு கன்னத்துல ஒரு முத்தம் கொடுத்தால் 
பிரபு : அதிர்ச்சி அடைந்த பிரபு ஒரு நிமிடம் ஒண்ணுமே பேசாமல் இருந்தான். 
பொன்மாரி : வாயை மூடுங்க கொசு உள்ள போயிரும் சொல்லிட்டு சிரித்தால்.
பிரபு : கொஞ்சம் நேரம் ஏதும் சொல்லாமல் இப்போ என்ன செஞ்ச தெரியுமா 
பொன்மாரி : தெரியுமே என் புருசனுக்கு முத்தம் கொடுத்தேன் 
பிரபு : யாராவது பாத்தா என்ன ஆகும் 
பொன்மாரி : கதவு பூட்டிட்டேன். அது இல்லாம நீங்க எனக்கு புருசன். பாத்தா எனக்கு என்ன கவலை. நா என்ன ரோட்டுல போறவனுக்கா முத்தம், பிரபு கன்னத்தை புடித்து, இது எனக்கு சொந்தமான இடம், யாருக்கும் விட்டு கொடுக்க மாட்டேன்.
பிரபு : அவளையே பார்த்து I LOVE YOU மெதுவாக சொன்னான் அவள் காதில் கேட்க வில்லை 
பொன்மாரி : என்ன சொன்னிங்க கேக்கலை 
பிரபு : ஹ்ம் ஆரஞ்சு ஜூஸ் தா குடிக்கணும் 
பொன்மாரி : என்ன சொன்னாரு புலம்பி கொண்டே அவன் சொன்னதை உன்னிப்பாக யோசிச்சு பார்த்தால் வாய் அசைவில் முதல i னு தெரிஞ்சிது அப்பறம் கடைசியா ஊ னு சொன்னாரு எனக்கு புரியலையே மனதில் புலம்பி கொண்டே ஆரஞ்சு ஜூஸ் போட்டு கொடுத்தால் இந்தாங்க ஜூஸ் 
பிரபு : ராட்சசி நீ எல்லாம் என்ன பொண்ணோ 
பொன்மாரி : எதுக்கு நா என்ன செஞ்சேன் 
பிரபு : ஒரு கைல ஆபரேஷன் செஞ்சிருக்கு. இன்னோர் கைல குலுக்கோஸ் ஏறுது. நா எப்படி குடிப்பேன் 
பொன்மாரி : ஐயா சாமி குலுக்கோஸ் போட்ட கையாள குடிக்கலாம் நினைத்து தான் கொடுத்தேன். சரி ஆஆஆஆ காட்டுங்க 
பிரபு : வாயை திறந்தான் 
பொன்மாரி : கொஞ்சம் கொஞ்சமாக வாயில ஊற்றினால், மாமாவை ஸ்ட்ரா கொண்டு வர சொல்லணும். உங்களுக்கும் உறிஞ்சி குடிக்க ஈஸியா இருக்கும், 
பிரபு : ஏன் நீ எனக்கு இப்படி ஊட்டி விட மாட்டியா 
பொன்மாரி : சரி சரி அப்படியே முழுவதும் குடிக்க வைத்தால். பிறகு ஈர துணி வைத்து அவன் வாயில் இருந்த வடிந்தஆரஞ்சு ஜூஸை துடைத்து விட்டால். 
பிரபு : தேங்க்ஸ் 
பொன்மாரி : யப்பா சாமி உங்க சாரி, thanks இது எல்லாம் ரெகார்ட் செஞ்சி வச்சிக்கோங்க. உங்களுக்கு அந்த வார்த்தை அதிக முறை தேவை படும். சரியா
பிரபு : ஏன் 
இல்ல நா தான் உங்களை பாக்க போறேன். இன்னும் மூணு இல்ல நாலு மாசம் ஆகலாம். நீங்க சரியாக வரைக்கும் நா தான் உங்களை பாக்கணும். So இந்த வார்த்தைகள் அதிக முறை தேவை படும் இப்போ புரியுதா. அதனால் தான் சொன்னேன் 
பிரபு : சிரித்தான் 
பொன்மாரி : என்ன சிரிப்பு 
பிரபு : எனக்கு என்ன பேரு வச்சிருக்க 
பொன்மாரி : புரியல என்ன பெயர்னா 
பிரபு : எனக்கு ஒரு பேர் வச்சிருக்க அது எனக்கு தெரியும்.சொல்லு 
பொன்மாரி : நாமே இவருக்கு என்ன பேரு வச்சிருக்கோம் அப்படி ஒன்னு இல்லையே நீங்களே சொல்லுங்க உங்களுக்கு நா என்ன பேரு வச்சிருக்கேன் எனக்கு தெரியலையே 
பிரபு : சரி நானே சொல்றேன் சிடுமூஞ்சி கரெக்டா 
பொன்மாரி : ஐயய்யோ இவருக்கு எப்படி தெரியும் தெரியலையே, உங்களுக்கு எப்படி தெரியும் மெதுவா கேட்டால் 
பிரபு : வீட்ல நீயும் ராகவியும் ஒரு நாள் பேசிட்டு இருந்திங்க. அது எனக்கு கேட்டுச்சு. 
பொன்மாரி : அமைதி 
பிரபு : நீங்க இரண்டு பேரும் பேசும் போது. கதவை பூட்டிட்டு பேசி இருக்கணும், சரியா 
பொன்மாரி : அமைதி 
பிரபு : சரி விடு. யாரோ கதவு தட்டுறாங்க யார்னு போய் பாரு 
பொன்மாரி : சென்று கதவை திறந்தால் மோகன் நின்று கொண்டு இருந்தான் 
மோகன் : இந்தாமா இங்க டாக்டர் ஒரு வாரம் இருக்க சொல்றாருமா அதான் ஒருவாரத்துக்கு தேவையான டிரஸ் கொண்டு வர சொன்னேன் உங்க இரண்டு பேருக்கும் 
பொன்மாரி : எதுக்கு மாமா ஒருவாரம் 
மோகன் : கொஞ்சம் வெளியே வாமா நா உன்கிட்ட பேசணும்.
பொன்மாரி : சொல்லுங்க மாமா ரூமை விட்டு வெளியே வந்து கேட்டால் 
மோகன் : இந்த சம்பவம் யாரு காரணம்னு தெரியணும். அதான் போலீஸ் கம்பளைண்ட் கொடுத்தேன், 
பொன்மாரி : மாமா இது அந்த லிங்கம் செஞ்ச வேலை 
மோகன் : எப்படி சொல்ற 
பொன்மாரி : ரவுடிகளில் ஒருத்தன் நம்ம ஐயா வேலையை விட்டு தூக்குனது இவள் தான் அப்படி சொல்லி தான் வெட்ட வந்தான். சரி மாமா அதுக்கும் இங்க ஒரு வாரம் இருக்குறதுக்கும் என்ன சம்மந்தம் 
மோகன் : இன்ஸ்பெக்டர் தான் சொன்னார்மா. ஒரு வாரம் ஹாஸ்பிடல் இருக்க சொல்லி. 
பொன்மாரி : சரி மாமா அவருக்கு டிரஸ் போடணும் 
மோகன் : என் தங்கம் நீ நல்லா இருப்ப மா. சொல்லிட்டு கண் கலங்கினான் 
மோகன் : அவன் கண்ணீரை துடைத்து விட்டு. நா இந்த வீட்டு பொண்ணு மாமா.  இதுக்கு போட்டு போங்க மாமா, ஆமா நீங்க சாப்பிட்டீங்களா 
மோகன் : சாப்பிட்டேன் மா, சரி நா இங்க வெளியே இருக்கேன் நீ உள்ள படுத்துக்கோ மா 
பொன்மாரி : நீங்க வீட்டுக்கு போங்க மாமா. நா இவரை பாத்துகிடுறேன், நீங்க காலைல வாங்க.
மோகன் : இல்ல மா நா இங்க வெளியே படுத்துகிறேன்.
பொன்மாரி : வீட்டுக்கு போங்கனு சொல்லிட்டேன், அப்பறம் என் கோவத்தை பாக்க வேண்டிய இருக்கும். என்ன சொல்றிங்க. வீட்டுக்கு போறிங்களா. இல்ல என் கோவத்தை பாக்க போறிங்களா 
மோகன் : மருமகளின் உரிமையை நினைத்து பெருமை பட்டு சரி மா வீட்டுக்கு போறேன். சொல்லிட்டு கிளம்பி சென்றான். பொன்மாரி ரூமுக்குள் வந்தால் 
பிரபு : பாவம் என் அப்பா 
பொன்மாரி : பின்ன என் பேச்சை கேக்கலனா எனக்கு கோவம் வரும். உங்களுக்கு சேர்த்து தான் சொல்றேன் புரியுதா 
பிரபு : ஹ்ம்ம் சரி 
பிரபுக்கு லுங்கி கட்டி விட்டால். 
பொன்மாரி : என்ன லுக்கு 
பிரபு: ஒன்னுல்ல 
பொன்மாரி : சரி தூங்குங்க. ஏதும் உதவினாலும் கூப்பிடுங்க. யோசிக்காதீங்க சரியா 
பிரபு : சரி
[+] 3 users Like Murugansiva's post
Like Reply


Messages In This Thread
RE: இரு துருவங்கள் - by Murugansiva - 20-05-2024, 05:01 PM



Users browsing this thread: 11 Guest(s)